மெய்டு மரியன்

ஆங்கில நாட்டுப்புறக் கதைகளில் புகழ்பெற்ற இராபின் ஊட்டின் காதலி

மெய்டு மரியன் (Maid Marian) என்பவர் ஆங்கில நாட்டுப்புறக் கதைகளில் ஒன்றான இராபின் ஊட் கதையின் கதாநாயகி ஆவார். இவர் இராபின் ஊட்டின் காதலியாக கூறப்படுகிறார். கதையின் ஆரம்ப, இடைக்கால பதிப்புகளில் இவர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் 1600 இல் குறைந்தது இரண்டு நாடகங்களில் குறிப்பிடப்படுகிறார். இவருடைய வரலாறும், சூழ்நிலையும் தெளிவற்றதாக உள்ளது. ஆனால் இவரின் துணிச்சல், விடுதலை உணர்வு சுதந்திரம், அழகு, விசுவாசம் ஆகியவற்றிற்காக இராபினின் வட்டத்தில் அதிக மரியாதை பெற்றவராக உள்ளார். இந்த காரணங்களுக்காக, இவர் ஆங்கில இலக்கியத்தில் ஆரம்பகால வலுவான பெண் பாத்திரங்களில் ஒருவராக பெண்ணிய பார்வையாளர்களால் கொண்டாடப்படுகிறார்.

ராபின் ஊட்டும், மெய்டு மரியனும் (ஓவியம், சு. 1880)

வரலாறு

தொகு
 
ராபின் ஊட்டும் மரியனும் ஒரு கொடிப் பந்தலின் அடியில் (1912). மெயிடு மரியன் டைரோலியன் தொப்பியை அணிந்து கொண்டு, இடையில் வேட்டைக் கொம்பை மாட்டியபடி உள்ளார்.

மெய்டு மரியன் (அல்லது மரியன்) இராபின் ஊட்டின் ஆரம்பகால கதைப்பாடல்கள் எதிலும் குறிப்பிடப்படவில்லை. இந்தப் பாத்திரம் அதன்பிறகு இணைந்தது என்று கூறுகின்றனர். ஆரம்பகால ராபின் ஹூட் , இராபின் ஊட்டின் பிறப்பு, வளர்ச்சி, வீரம் மற்றும் திருமணம் ( குழந்தை கதைப்பாடல் 149) ஆகியவற்றில் அவரின் காதல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது, அவருடைய காதலி "கிளோரிண்டா தி கிவீன் ஆஃப் தி ஷீப்பர்டிஸ்" என குறிப்பிடப்படுகிறார். [1] கிளோரிண்டா சில பிற்கால கதைகளில் மரியன் என்ற மாற்றுப்பெயரில் குறிப்பிடப்படுகிறார். [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Holt (1982).
  2. Wright, Allen W. "Other Merry Men". பார்க்கப்பட்ட நாள் 5 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்டு_மரியன்&oldid=3846931" இலிருந்து மீள்விக்கப்பட்டது