மெலண்டரைட்டு

கனிமம்

மெலண்டரைட்டு (Melanterite) என்பது FeSO4·7H2O. என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நீரடங்கிய பெரசு சல்பேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. இரும்பை ஒத்த சால்காந்தைட்டு எனப்படும் தாமிர சல்பேட்டு கனிமம் என்றும் கருதப்படுகிறது. சிதெரோட்டில் கனிமத்தில் நீரிழப்பு ஏற்படுகையில் மெலண்டரைட்டு உருவாகிறது. மெலண்டரைட்டு ஓர் இரண்டாம் நிலை சல்பேட்டு கனிமமாகும். முதன்மை சல்பைட்டு தாதுக்களான பைரைட்டு மற்றும் மார்கசைட்டு போன்றவற்றின் ஆக்சிசனேற்ற வினையிலிருந்தும் புவி மேற்பரப்பு பகுதிகளிலும் பழைய நிலத்தடி சுரங்கப் பரப்புகளில் ஒரு சுரங்கப் படிவாகவும் மெலண்டரைட்டு தோன்றுகிறது.[2] ஈரப்பதமான காற்றுக்கு வெளிப்படும் நிலக்கரி மற்றும் லிக்னைட்டு அடுக்கிடை கோடுகளிலும், எரிமலை வாய்களை சுற்றியும் மெலண்டரைட்டு காணப்படுகிறது.[4]

மெலண்டரைட்டு
Melanterite
இயற்கையில் மெலண்டரைட்டு
பொதுவானாவை
வகைசல்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடுFeSO4·7H2O
இனங்காணல்
நிறம்பச்சை, வெளிர் பச்சை, பச்சை நீலம், நீல பச்சை, நிறமற்றது
படிக இயல்புஅரிதாக சமமான போலி எண்முக, பட்டகம் அல்லது அட்டவணை படிகங்கள்
படிக அமைப்புஒற்றைச் சரிவச்சு
பிளப்பு{001} சரிபிளவு, {110} தனித்துவம்
முறிவுசங்குருவம்
மோவின் அளவுகோல் வலிமை2
மிளிர்வுகண்ணாடி பளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும் முதல் ஒளிகசியும் வரை
ஒப்படர்த்தி1.89 – 1.9
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 1.470 – 1.471 nβ = 1.477 – 1.480 nγ = 1.486
மேற்கோள்கள்[1][2][3][4]

1850 ஆம் ஆண்டு முதன் முதலில் மெலண்டரைட்டு கண்டுபிடிக்கப்பட்டது.[4]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் மெலண்டரைட்டு கனிமத்தை Mln[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெலண்டரைட்டு&oldid=4093682" இலிருந்து மீள்விக்கப்பட்டது