மெலோனைட்டு
நிக்கல் உலோகத்தின் தெலூரைடு உப்பு
மெலோனைட்டு (Melonite) என்பது NiTe2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் உலோகக் கனிமம் ஆகும். நிக்கல் உலோகத்தின் தெலூரைடு உப்பு மெலோனைட்டு என்று வகைப்படுத்தப்படுகிறது. ஒளிபுகாத் தன்மையுடன் வெண்மை மற்றும் சிவப்பு கலந்த வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. காற்றில் ஆக்சிசனேற்றம் அடைந்து பழுப்பு நிரமாக மங்கலாகிறது.
மெலோனைட்டு Melonite | |
---|---|
மெலோனைட்டு கனிமம், குவார்ட்சு கிரிப்பிள் கிரீக் சுரங்கம், கொலராடோ, அமெரிக்கா. அளவு: 1.3 × 0.9 × 0.4 செ.மீ. | |
பொதுவானாவை | |
வகை | சல்பைடு கனிமங்கள் |
வேதி வாய்பாடு | NiTe2 |
இனங்காணல் | |
மோலார் நிறை | 313.89 கி/மோல் |
நிறம் | வெண்மை சிவப்பு கலந்த வெண்மை |
படிக இயல்பு | படிகம். பரந்து காணப்படும் மணிகள் |
படிக அமைப்பு | முக்கோண வடிவமைப்பு |
பிளப்பு | {0001} தெளிவு |
முறிவு | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 1–1.5 |
மிளிர்வு | உலோகம் |
கீற்றுவண்ணம் | அடர் சாம்பல் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 7.72 |
அடர்த்தி | 7.3 |
புறவூதா ஒளிர்தல் | இல்லை |
மேற்கோள்கள் | [1][2][3][4] |
பிரடெரிக் அகசுடசு கெந்து 1866 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள காலவெராசு மாகாணத்தின் மெலோன்சு மற்றும் சிடானிசுலாசு சுரங்கங்களில் இக்கனிமத்தைக் கண்டறிந்தார்.
முக்கோண வடிவமைப்பில் 0001 திசைப் பிளவு கொண்ட படிகங்களாக மெலோனைட்டு உருவாகிறது. 7.72 என்ற ஒப்படர்த்தி மதிப்பும் மோவின் கடினத்தன்மை 1-1.5 என்ற மதிப்பும் கொண்ட மெலோனைட்டு ஒரு மென்மையான கனிமமாகக் கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Mineralienatlas
- ↑ "Melonite Mineral Data". Webmineral.com. பார்க்கப்பட்ட நாள் 2011-10-28.
- ↑ "Melonite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2011-10-28.
- ↑ "Mieralienatlas Lexikon - Melonit". Mieralienatlas. பார்க்கப்பட்ட நாள் 2011-10-28.
புற இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் மெலோனைட்டு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.