மெழுகு
மெழுகு சுற்றாடல் வெப்பநிலையில் இளகும் தன்மை கொண்ட ஒரு வகை வேதிச் சேர்வை. இது ஒரு வகை லிப்பிட்டும் ஆகும். இதன் உருகும் 45 °C (113 °F). வெப்பநிலைக்கு மேல் இது உருகிக் குறைந்த பாகுநிலை கொண்ட திரவமாகின்றது. மெழுகுகள் நீரிற் கரைவதில்லை. ஆனால் சில கரிமக் கரைப்பான்களில் கரையக்கூடியன. இயற்கையாகக் கிடைக்கும் மெழுகுகளும், செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்ற மெழுகும் பொருட்களும் கரிமச் சேர்வைகளே.
வகை
தொகுபொதுவாக மெழுகுகள் நீண்ட அல்கைல் சங்கிலிகளைக் கொண்டவை. இயற்கை மெழுகுகள், பெரும்பாலும் கொழுப்பு அமிலங்களின் எசுத்தர்களும், நீண்ட சங்கிலி அல்ககோல்களும் ஆகும். செயற்கை மெழுகுகள் வினைத் தொகுதிகள் குறைந்த நீண்ட சங்கிலி ஐதரோகாபன்கள்.
பயன்பாடு
தொகுமர உற்பத்திகள் தயாரிக்கும் போது அவற்றை முடிப்பதற்கும் பூச்சிடவும் மெழுகிடவும், கற்பூரம் வில்லைகள் , தீக்குச்சி , காலணி மெருகு மற்றும் தட்டச்சு மை காகிதம் ஆகியன தயாரிக்கவும் மெழுகு பயன்படுகின்றது.