மெஹ்தி ஹசன் (பாடகர்)
மெகதி அசன் கான் (Mehdi Hassan Khan, உருது: مہدی حسن خان ; சூலை 18, 1927 – சூன் 13, 2012) ஓர் பாக்கித்தானிய கசல் பாடகரும் முன்னாள் லாலிவுட் திரைப்பட பின்னணிப் பாடகரும் ஆவார். "கசல் மன்னர்" என்று புகழ்பெற்ற மெகதி அசன் பாக்கித்தான் திரைப்படத்துறையில் பெரிதும் மதிக்கப்பட்டார். இவருக்கு பாக்கித்தானிய அரசு தங்கா-இ-இம்தியாசு, நிகழ்த்துக்கலை பெருமை மற்றும் இலால்-இ-இம்தியாசு ஆகிய விருதுகளை வழங்கியுள்ளது. நேபாள அரசும் கோர்க்கா தக்சிண பகு என்ற விருதை வழங்கியுள்ளது. நீண்டகால உடல்நலக் குறைவிற்குப் பின்னர் சூன் 13, 2012 அன்று கராச்சி தனியார் மருத்துமனை ஒன்றில் இயற்கை எய்தினார்.[1][2][3]
உஸ்தாத் மெஹ்தி ஹசன் கான் | |
---|---|
மெஹ்தி ஹசன் | |
பின்னணித் தகவல்கள் | |
பிற பெயர்கள் | கான் சாகிபு கசல் மன்னர் |
பிறப்பு | லூனா, ஜுன்ஜுனூ மாவட்டம், இராசத்தான், பிரித்தானிய இந்தியா | சூலை 18, 1927
இறப்பு | சூன் 13, 2012 கராச்சி, சிந்து, பாக்கித்தான் | (அகவை 84)
வகை (கள்) | செவ்வியல் இசை, கசல், பின்னணிப் பாடகர் |
பணிகள் | பாடகர், இசையமைப்பாளர் |
இசைக்கருவிகள் | ஆர்மோனியம், வாய்ப்பாட்டு |
இசைத்துறையில் | 1957–1999 (ஓய்வு) |
மேற்கோள்களும் குறிப்புக்களும்
தொகு- ↑ "Ghazal maestro Mehdi Hassan is dead". Archived from the original on 2012-06-16. பார்க்கப்பட்ட நாள் 2012-06-15.
- ↑ "Mehdi Hassan passes away in Karachi". 13 June 2012. http://timesofindia.indiatimes.com/entertainment/music/news-and-interviews/Mehdi-Hassan-passes-away-in-Karachi/articleshow/14087909.cms.
- ↑ "India-born Ghazal legend Mehdi Hassan Died". Archived from the original on 2012-07-07. பார்க்கப்பட்ட நாள் 2012-06-15.