மேகக்கணிமை வழிக் கல்விமுறை

மேகக்கணிமை வழிக் கல்விமுறை இந்தியாவில் முதன் முதலாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் எம்.ஜி.ஆர். நகரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் துவங்கி வைக்கப்பட்டது.[1]

மேகவழிக்கல்வி முறை

தொகு

மேகவழிக்கல்வி முறை என்பது மேகக் கணிமையின் மூலம் கணிமைத் திறனை இணையம் ஊடாக பெறக்கூடிய ஒரு ஏற்பாடு ஆகும். கணிமைத் திறன் தொழில்நுட்பம் தற்போதைய காலங்களில் மனித சக்திக்கு அப்பாற்பட்டு நேரத்தையும் காலத்தையும் சுருக்கி கல்வியை மேன்மைப்படுத்தும் விதமாக அமைந்து உதவுகிறது.

பயன்

தொகு

மேகவழி கணினியின் பயன்பாட்டு முறை தொழில் துறைக்கும், பாதுகாப்பு துறைக்கும் பல வழிகளில் பயன்பட்டு வருகிறது. இப்பயன்பாடு கல்விக்காக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அரசு பள்ளிகளில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அரசு பள்ளிகளின் தரம் உயரும் வாய்ப்பு உள்ளது. ஒரு ஊரில் அமைந்துள்ள பள்ளியில் நடக்கும் பாடத்தை வெகு தொலைவில் அமைந்துள்ள பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளும் மேகவழிக்கணினி மூலம் அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் தரமான ஆசிரியர்களின் கற்பித்தல் எளிதில் அனைத்து பள்ளிகளுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கிடக்கும்.

முதல் பயனர் பள்ளிகள்

தொகு

அரசு உயர்நிலைப்பள்ளி, எம்.ஜி.ஆர். நகர், சென்னை; அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, திருபெரும்புதூர் ஆகிய இரு பள்ளிகளில் முதன் முதலாக மேகவழிக் கணினிக் கல்வி துவங்கி வைக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்

தொகு