மேக்சின் சிங்கர்

மேக்சின் பிராங்கு சிங்கர் (Maxine Frank Singer, பிறப்பு பிப்ரவரி 15, 1931) ஓர் அமெரிக்க மூலக்கூற்று உயிரியலாளர்; அறிவியல் நிருவாகி.[1] இவர் மரபியல் குறிமுறைத் தீர்வுக்கான பங்களிப்புக்காகவும் மீளிணைவு டி. என். ஏ. சார்ந்த அறவியல், ஒழுங்குபாட்டு விவாதங்களில் வகித்த பங்களிப்புக்காகவும் கார்னிகி வாசிங்டன் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்காகவும் பெயர் பெற்றவர். மேலும் இவர் அசிலோமெர் மீளிணைவு டி.என்.ஏ கருத்தரங்கையும் நடத்தியுள்ளார்.

மேக்சின் பிராங்கு சிங்கர்
Nci-vol-8248-300 maxine singer.jpg
பிறப்பு15 பெப்ரவரி 1931 (1931-02-15) (அகவை 89)
நியூயார்க் நகரம்
குடியுரிமைஅமெரிக்கர்
துறைமூலக்கூற்று உயிரியல், உயிர்வேதியியல்
கல்வி கற்ற இடங்கள்சுவார்த்மோர் கல்லூரி (A.B.) (1952) யேல் பல்கலைக்கழகம் (முனைவர்) (1957)
ஆய்வு நெறியாளர்யோசப் புரூட்டன்
அறியப்படுவதுமீளினைவு டி. என். ஏ. நுட்பங்கள்
விருதுகள்அறிவியல் தற்சார்பு, பொறுப்புக்கான AAAS விருது (1982)
அறிவியலுக்கான தேசிய பதக்கம் (1992)
வன்னேவர் புசு விருது (1999)
பொது நலமுனைவுப் பதக்கம் (2007)

வாழ்க்கைதொகு

சிங்கர் நியூயார்க் நகரில் பிறந்தார்.[2] புரூக்லினில் உயர்நிலைப்பள்ளிக்கல்வி முடித்ததும் சுவார்த்மோர் கல்லூரியில் வேதியியலை முதன்மைப் பாடமாகவும் உயிரியலை துணைப்பாடமாகவும் கொண்டு பட்டப் படிப்பை முடித்துள்ளார்.[3] இவர் யேல் பல்கலைக்கழகத்தில் முன் ஊன்ம வேதியியலில் யோசாப்பு ஃபுரூட்டனின் மேற்பார்வயில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறச் சென்றுள்ளார். புரூட்டன் இவரை உட்கரு அமிலாஅய்வில் ஈடுபட ஆர்வமூட்டி உள்ளார். இவர் 1956 இல் இலியான் கெப்பேவில் உள்ள தேசிய நலவாழ்வு நிறுவனங்களில் அமைந்த உயிர்வேதியியல் ஆய்வகத்தில் சேர்ந்துள்ளார்[4] அங்கு ஆர்.என்.ஏ தொகுப்பு வழியாக நியூக்கிளியோடைடுகளை உருவாக்கியுள்ளார். இவற்றைப் பயன்படுத்தி மார்ழ்சல்நியூரன்பர்கு மரபுக் குறிமுறையின் மும்மைத் தன்மையைச் செய்முறைகளால் நிறுவினார்.[1]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேக்சின்_சிங்கர்&oldid=1942224" இருந்து மீள்விக்கப்பட்டது