மேக்னா வெங்கட்
மேக்னா வெங்கட், இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த, இந்திய பாரம்பரிய நடனங்களில் ஒன்றான பரத நாட்டிய நடனக் கலைஞரும் நடன அமைப்பாளரும் நடன ஆசிரியையுமாவார். தற்போது பெங்களுருவில் நிருத்ய நாதம் என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். பத்மஸ்ரீ விருது பெற்ற மறைந்த ஸ்ரீ அடையார் கே லக்ஷ்மணிடம் சிஷ்யையாக இருந்து சென்னையில் பதினோரு ஆண்டுகள் நடன பயிற்சி பெற்றுள்ளார்.[1] மேலும் இந்தியாவின் பல இடங்களில் மேக்னா நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.[2] அவர் நட நீரஜனத்தின் வழக்கமான நடன கலைஞராவர்.[3] சாய் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் நடத்திய உலக நடன தின கொண்டாட்டங்களில் பங்கேற்று, பரதநாட்டியம் ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.[4] இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் குழுமப்பட்ட நடனக் கலைஞரும்,[5] அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனின் தரப்படுத்தப்பட்ட கலைஞருமாவார். இந்திய பல்கலைக்கழக மானியக் குழுவினால் பாடத்திட்டங்களை தயாரிக்க உதவும் பேராசிரியர் குழுவின் பட்டியளிப்பட்டுள்ள நடன விரிவுரையாராகவும் உள்ளார்
மேக்னா வெங்கட் | |
---|---|
பிறப்பு | மேக்னா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடனக்கலைஞர், நடன இயக்குநர், விரிவுரையாளர், நடன ஆசிரியர் |
அறியப்படுவது | பரதநாட்டியம் |
விருதுகள் | நிருத்ய சிரோமணி, நிருத்ய கௌமுதி, நாட்டிய செம்மல் |
சுயசரிதை
தொகுமேக்னா ஹைதராபாத்தைச் சேர்ந்தவராவார், ஆனால் அவரது தந்தையின் வேலை மாற்றம் காரணமாக, அவரது குடும்பம் இருபது ஆண்டுகளாக தமிழகத்தின் ராணிப்பேட்டையில் வசித்து வந்துள்ளனர். பதினோராவது வயதிலேயே இவரது நடன வாழ்க்கை தொடங்கியுள்ளது. பெங்களூரு பல்கலைக்கழகத்தில் நடனத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர், தற்போது, முனைவர் பட்ட ஆராய்ச்சியையும் செய்து வருகிறார். ஆரம்பத்தில் சில வருடங்கள் பெருநிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த இவர், பின்னர் அதை துறந்துவிட்டு, முழு நேரமாக நடனத் துறைக்கு வந்துள்ளார். "தி தியரி ஆஃப் கிளாசிக்கல் டான்ஸ் (ஜூனியர் & சீனியர்)" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இப்புத்தகம் கர்நாடக மாநில தேர்வு வாரியத்தினால் அரசு நாட்டியத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடபுத்தகமாக பரிந்துரைக்கப்படுகிறது.
நார்வேயில் நடந்த 70வது இந்திய சுதந்திர தின கொண்டாடத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடனமாடியதை தனது பெருமையாக நினைக்கும் இவர், பல்வேறு நாடுகளுக்கு சென்று பாரத நாட்டியமாடி வந்துள்ளார். மேலும் அரசு கலைவிழாக்கள், இந்து மத விழாக்களிலும் நடனமாடி வருகிறார்.
விருதுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Sri Parthasarathy Swami Sabha – 112th Year Dance Festival". 19 January 2012.
- ↑ Connection, Sumathi, Saigan. "Review - Sai Nrityotsava - 16".
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Surya Kumar (15 February 2014). "Meghana Venkat Manjula Bharathanatyam 07 Kasthuri Thilakam LeelaSukhaKavi OK" – via YouTube.
- ↑ "The 4th World Dance Day celebrations – by Sai Arts International". 29 April 2013.
- ↑ "Panel of Artists/Groups for participation in FOIs Abroad".
- ↑ "Meghna Krishnan". Archived from the original on 10 May 2017. பார்க்கப்பட்ட நாள் 10 October 2016.
- ↑ "Five Day Bharatnatyam Workshop with Ms. Meghna Venkat".