மேசாவின் கல்வெட்டு

மேசாவின் கல்வெட்டு அல்லது மோவாப் கல்வெட்டானது கரும் பாசோல்ட் கல்லில் மோவாப் மன்னர் மோசேவினால் கிமு 9வது நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கல்வெட்டாகும். இது 1868 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மொத்தம் 34 வரிகள் காணப்படுகின்றது இதுவே பாலஸ்தீனத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் செறிவானதாகும். இது எபிரேய-பொனீசிய எழுத்துக்கள் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இது மேசாவினால் அவரது இஸ்ரவேல் மீதான படையெடுப்பு வெற்றியைக் குறிக்கும் வகையில் எழுப்பப்பட்டதாகும்.

மேசாவின் கல்வெட்டின் 1891ஆம் ஆண்டைய புகைப்படம்

கல்லானது 124 ச.மீ. உயரமும் 71 ச.மீ. அகலமும் உச்சுயில் வலைவாகவும் அமைந்துள்ளது. இது யோர்தானின் தீபன் நகரில் 1868 ஆம் ஆண்டு யேர்மனிய மறைப்பரப்பாளர் வண.பிதா எப்.ஏ.கிலென் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அனால் அயல் அரபியர்கள் இதனை உடைத்து விட்டார்கள் ஆனால் அதற்கு முன்னர் சார்லஸ் அதன் அச்சுப் பிரதியொன்றை எடுத்திருந்தார். பெரும்பான்மையான பகுதிகளை சேர்த்து மீண்டும் அக்கல் மீளமைக்கப்பட்டது. கல்வெட்டும் அதன் அச்சுப் பிரதியும் இப்போது பிரான்சில் உள்ள இலூவா தொல்பொருள் காட்சியகத்தில் உள்ளது.

உள்ளடக்கம்

தொகு

கல்வெட்டின் உள்ளடக்கம் மோவாபிய மொழியிலிருந்து எபிரேய மொழி எழுத்துகளுக்கு எழுத்துப் பெயர்க்கப்பட்டது:

1. אנכ. משע. בנ. כמש.. . מלכ. מאב. הד
2. יבני | אבי. מלכ. על. מאב. שלשנ. שת. ואנכ. מלכ
3. תי. אחר. אבי | ואעש. הבמת. זאת. לכמש. בקרחה | ב[נס. י]
4. שע. כי. השעני. מכל. המלכנ. וכי. הראני. בכל. שנאי | עמר
5. י. מלכ. ישראל. ויענו. את. מאב. ימנ. רבן. כי. יאנפ. כמש. באר
6. צה | ויחלפה. בנה. ויאמר. גמ. הא. אענו. את. מאב | בימי. אמר. כ[...]
7. וארא. בה. ובבתה | וישראל. אבד. אבד. עלמ. וירש. עמרי. את א[ר]
8. צ. מהדבא | וישב. בה. ימה. וחצי. ימי. בנה. ארבענ. שת. ויש
9. בה. כמש. בימי | ואבנ. את. בעלמענ. ואעש. בה. האשוח. ואבנ
10. את. קריתנ | ואש. גד. ישב. בארצ. עטרת. מעלמ. ויבנ. לה. מלכ. י
11. שראל. את. עטרת | ואלתחמ. בקר. ואחזה | ואהרג. את. כל. העמ. [מ]
12. הקר. רית. לכמש. ולמאב | ואשב. משמ. את. אראל. דודה. ואס
13. חבה. לפני. כמש. בקרית | ואשב. בה. את. אש. שרנ. ואת. אש
14. מחרת | ויאמר. לי. כמש. לכ. אחז. את. נבה. על. ישראל | וא
15. הלכ. הללה. ואלתחמ. בה. מבקע. השחרת. עד. הצהרמ | ואח
16. זה. ואהרג. כלה. שבעת. אלפנ. גברנ. ו[גר]נ | וגברת. וגר
17. ת. ורחמת | כי. לעשתר. כמש. החרמתה | ואקח. משמ. א[ת. כ]
18. לי. יהוה. ואסחב. המ. לפני. כמש | ומלכ. ישראל. בנה. את
19. יהצ. וישב. בה. בהלתחמה. בי | ויגרשה. כמש. מפני | ו
20. אקח. ממאב. מאתנ. אש. כל. רשה | ואשאה. ביהצ. ואחזה.
21. לספת. על. דיבנ | אנכ. בנתי. קרחה. חמת. היערנ. וחמת
22. העפל | ואנכ. בנתי. שעריה. ואנכ. בנתי. מגדלתה | וא
23. נכ. בנתי. בת. מלכ. ואנכ. עשתי. כלאי. האש[וח למי]נ. בקרב
24. הקר | ובר. אנ. בקרב. הקר. בקרחה. ואמר. לכל. העמ. עשו. ל
25. כמ. אש. בר. בביתה | ואנכ. כרתי. המכרתת. לקרחה. באסר
26. [י]. ישראל | אנכ. בנתי. ערער. ואנכ. עשתי. המסלת. בארננ.
27. אנכ. בנתי. בת. במת. כי. הרס. הא | אנכ. בנתי. בצר. כי. עינ
28. ----- ש. דיבנ. חמשנ. כי. כל. דיבנ. משמעת | ואנכ. מלכ
29. ת[י] ----- מאת. בקרנ. אשר. יספתי. על. הארצ | ואנכ. בנת
30. [י. את. מה]דבא. ובת. דבלתנ | ובת. בעלמענ. ואשא. שמ. את. [...]
31. --------- צאנ. הארצ | וחורננ. ישב. בה. ב
32. --------- אמר. לי. כמש. רד. הלתחמ. בחורננ | וארד
33. ---------[ויש]בה. כמש. בימי. ועל[...]. משמ. עש
34. -------------- שת. שדק | וא

மொழிப்பெயர்ப்பு

தொகு
  1. நான் மேசா, மோவாப் அரசன் கேமோஸின் மகன். எனது தந்தை மோவாபுக்கு அரசனாக
  2. 30 வருடங்கள் ஆட்சிபுரிந்தார்,தந்தைக்குப் பிறகு நான் அரசனானேன். குராகோவில் கேமோஸ் கடவுளுக்கு உயர்-இடத்தை அமைத்தேன்
  3. . . . ஏனெனில் அவர் என்னை எல்ல அரசர்களிடமிருந்து காத்தார், மேலும் என்னை அவர் எனது
  4. எதிரிக்ளை கீழாக்கினார். ஒம்ரி இஸ்ரவேலின் அரசனாக இருந்தார், அவன் மோவாபை பல வகைகளில் துன்புறுத்தினான், இதனால் கோமோஸ் கடவுள் கோபம்
  5. அவன் நாட்டின் மீது கொண்டார். அவனது இடத்துக்கு வந்த மகனும் "நான் எனது நாட்களில், மோவாபை துன்புறுத்துவேன்"
  6. எனச் சொன்னான். நான் அவனயும் அவன் வீட்டையும் மேலிட்டு பார்த்தேன் அது தோற்கடிக்கப் பட்டிருந்தது. அது
  7. நித்தியத்துக்கும் தோற்கடிக்கப்பட்ட்து! மேலும் ஒம்ரி மேதிபா சென்ற்று அவன் அங்கே தனது
  8. நாட்களையும் தனது மகனின் காலத்தில் அறைவாசியையும் கழித்தான்:40 வருடம். எனது நாட்களில் கேமோஸ் ஆசிர்வதித்தார். நான் பாள்
  9. மியோன் என்பற்றை கட்டி அங்கு நீர்த்தேகமொன்றை நிறுனினேன். நான் கிர்யடென் ஐக் கட்டினேன். காத்தின் புதல்வர்கள் முன்பிருந்து வசித்த
  10. அதரொட் நகரம்; இஸ்ரவேலின் அரசன் அதை தனக்காக கட்டுவித்தான், நான் போராடி
  11. அந்ந்கரதை கைப்பற்றினேன். மேலும் அதில் இருந்த சகல மக்களையும் கேமோசுக்கு பலியாக கொலை செய்தேன்
  12. மோவாபுக்காகவும். அவனது மாமனது ஆஸ்தியை கொண்டு வந்தேன்;அதை
  13. குராகோவில் கோமோசின் முகத்துக்கு முன்னராக கொண்டு வந்தேன் அதேபோல
  14. மஹரித் மக்கள் முன்னதாகவும் கொண்டு வந்தேன். கேமோஸ் என்னை நோக்கி "போய் நேபோ மலை இஸ்ரவேலரிடமிருந்து எடுத்துக் கொள்" என்றார். நான இரவில் போர் செய்து
  15. பொழுது விடிந்து பகலாகும் மட்டும் போராடி அதை அடைந்தேன் நான் சகல மக்களையும் கொலை செய்தேன்:ஏழு
  16. ஆயிரம் ஆண்களும் அன்னியர்களும் மற்றும் பெண்களும் அன்னியர்களும் வேலையாட்களுமாகும்.நான் அவர்களை
  17. கேமோசுக்கு பலியாக கொடுத்தேன்.பின்பு யாவேயின் பாத்திரங்களை எடுத்து
  18. கேமோசுக்கு முன்பாக வைத்தேன். மேலும் இஸ்ரவேலின் அரசன் ஜாகாஸ் நகரை உறுவாக்கி அங்கே வசித்து வந்த்தான்
  19. அங்கிருந்தே எனக்கெதிரானவைகளை செய்தான்;கேமோஸ் அவனை துரத்திவிட்டார். நான் இருநூறு
  20. மோவாபியரை கொண்டு சென்று ஜாகாஸ் நகரை கைப்பற்றினேன். அதை தீபன் ந்கருடன் சேர்த்துக் கொள்ளும் படி அவ்வாறு செய்தேன். நான்
  21. குராக்கோவையும் அதன் வெளி மதிலையும் நகர மதிலையும் அதன் வாயில்களையும் கட்டினேன்
  22. மேலும் அதன் கோபுரங்களையும் கட்டுவித்தேன்; அங்கு அரச மனையையும்; நான் இரட்டிப்பாக
  23. நீர்த்தேக்கத்தை கூட்டினேன் அது நகரத்தின் மத்திய பகுதிக்கு பயன்படும். நகரத்தின் மத்திய பகுதி
  24. நீர் சேகரிப்பு தடாகம் இருக்கவில்ல, குராகோவில் நான் ஒவ்வருவரும் தனக்கென ஒன்றை அமைத்துக் கொள்ளும் படி கூறினேன்.
  25. இஸ்ரவேலின் கைதிகளைக் கொண்டு குராகோ நகருக்கு அகழியை வெட்டுவித்தேன். நான் அரோரை கட்டுவித்தேன்.நான்
  26. அர்னோனில் இரானுவ பாதையை செய்வித்தேன். நிர்மூலமாக்கப் பட்ட பெத்-பமொத்ஐ மீள் கட்டுவித்தேன். நான்
  27. பெசார் ஐ கட்டுவித்தேன், ஏனெனில் அது இடிபாடுகளில் இருந்த்தது. தீபன் மக்கள் யுத்த அணிவகுப்பில் நின்றார்கள்.
  28. நான் நூற்றுக் கணக்கான நகரங்களுக்கும் நான் அரசன். நான் பல நகரங்களை இத்தேசத்துகு சேர்தேன். மேலும்
  29. நான் பெத்-மெதேபா,பெத்-திப்லதென்,பெத்-பால்-மியொன் என்பவற்றை கட்டினேன். அங்கு . . . கொண்டுவந்தேன். . . .
  30. நிலம்.மேலும் ஒரொனயிம் அன்கே வசித்த
  31. . . . கேமோஸ் எனை நோக்கி, "போய் அவுரனென்னுக் எதிராக போரிடு" என்றார் நான் சென்றேன்
  32. . . . கேமோஸ் எனது நாட்களில் அவற்றை சீர் செய்தார் . . .
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேசாவின்_கல்வெட்டு&oldid=3319561" இலிருந்து மீள்விக்கப்பட்டது