மோவாப் (מוֹאָב, எபிரேய மொழி) என்பது வரலாற்றில், யோர்டன் நாட்டில் சாக் கடலின் கிழக்கு கரையில் காணப்படும் மலைச்சார்ந்த பிரதேசத்துக்கு வழங்கப்பட்ட பெயராகும். முன்பு இப்பிரதேசத்தில் மாவோபிய இராச்சியம் அமைந்திருந்த்தது. இவர்கள் தமக்கு மேற்கில் வசித்த இசுரவேலருடன் அடிக்கடி போர் செய்தனர். இவர்களின் வரலாற்று உண்மை, தொல்பொருள் ஆய்வுகள் மூலம் நிரூபிக்க்ப்பட்டுள்ளது. குறிப்பாக மோவாப் கல்வெட்டில், மோவாபியர், இசுரவேல் இராச்சியத்தின் ஒம்ரி அரசனின் மகனை போரில் வெற்றிக் கொண்டது[1] எழுதப்பட்டுள்ளது. இதன் தலைநகரான தீபொன் என்பது இன்றைய யோர்தானிய நகரான தீபனுக்கு அருகில் காணப்படுகிறது.

பெயர் தோற்றம் தொகு

பெயரின் தோற்றம் பற்றிய தெளிவான கருத்துக்கள் இல்லை. விவிலியத்தின் ஆதியாகமத்தில் இது பற்றி கூறப்பட்டுள்ளது. [2] இங்கு மோவாபியரின் ஆரம்பம் பற்றி கூறப்பட்டுள்ளது. இதன்படி "தந்தயின் வித்து" என்பதன் மறுவலாகும். வேறு கருத்துப்படி, மோவாப் என்பது "விரும்பத் தக்க பிரதேசம்" என பொருள்படும். பிரிட்ஸ் ஓமேல்[3] இன் கருத்துப்படி மோவாப் என்பது "இமோ-அப்" = அவன் தாயே அவனது தகப்பன் என்பதன் மறுவலாகும்.

புவியியல் தொகு

 
மோவாப் இராசியமும் அயல் இராச்சியங்களும்
  கிமு 830 இல் மோவாப் இராச்சியம்

மோவாப் மத்திய தரைக்கடலுக்கு மேல் 3000 அடி உயரத்தில் அமைன்ந்துள்ள மேட்டு நிலத்தில் காணப்பட்டது. இது சாக்கடலுக்கு மேல் 4300 அடி உயரமானதாகும். இது வடக்கிலிருந்து தெற்காக சீராக உயர்ந்து செல்கிறது. மோவாப், மேற்கில் சாக் கடல் மற்றும் யோர்தான் நதியாலும், கிழக்கில் அம்மோன் மற்றும் அரபிய பாலைவனத்தாலும், தெற்கே எதோமாலும் எல்லைப்படுத்தப்பட்டது. வடக்கு எல்லை காலத்துக்கு காலம் வேறுபட்டு காணப்பட்டது. ஆனாலும் சாக்கடலின் வடமுனைக்கு சில மைல்கள் வடக்கே காணப்பட்டது என பொதுவாக கூறலாம். விவிலியத்தின் பல இடங்களில் மோவாபின் எல்லைகள் குறிப்பிடப்பட்டுள்ளது, இவை ஊர் பெயர்களை மட்டுமே குறிப்பிடுகின்றன சரியான எல்லை குறிப்பிடப்படவில்லை. [4] வடக்கே பல ஆழமான பள்ளத்தாக்குகள் காணப்படுகின்றன. மேலும் இங்கு மோசே மரித்த இடமான நேபோ மலையும்[5] காணப்படுகிறது. இங்கு சூழவுள்ள பிதேசங்களுடன் ஒப்பிடும் போது கூடுதலான மழை வீழ்ச்சி கிடைக்கிறது. வெப்பமான கோடை காணப்பட்டபோதும், மாரியில் பனி விழும் அளவுக்கு குளிரான காலநிலை நிலவும்.

மோவாப் இராச்சியத்தை மூன்று புயியல் பிரிவுகளாக பிரித்து நோக்க முடியும். தெற்கு பகுதி அல்லது "மோவாபின் வெளிகள்" [6] மலை சார்ந்த பிரதேசமான "மோவபின் நிலங்கள்" [7] மற்றும் கடல் மட்டத்துகு கீழான யோர்தான பள்ளத்தாக்கு[8] என்பனவாகும்.

வரலாறு தொகு

யோர்தானிய மேட்டு நிலங்களில் முதலில் குடியேரிய மோவாபியர் மேய்பர்களாக இருந்திருக்கலாம். அமர்னா கடிதங்களில் "அப்பிரு" என குறிப்பிடப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பாளர்களில் சிலராகவும் இருந்திருக்கலாம். எகிப்திய பார்வோன் ரமிசி II ஆல் லக்சோரில் கட்டப்பட்ட பெரிய சிலைகளும் அவற்றில் இரண்டாவது சிலையில் அடிவாரத்தில் "முவாப்" (மோவப் எகிப்திய மொழியில்) அவ்ரால் வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டிருக்கிறமையானது,இஸ்ரவேலர்களில் எழுச்சிக்கு முன்னரே மோவாப் காணப்பட்டதை உறுதி படுத்துகிறது.

விவிலியத்தில் தொகு

இஸ்ரவேலருக்கும் மோவாபியருக்கும் இடையான முறன்பாடுகள் காணப்பட்டது இதனை விவிலியத்தில் கூறப்பட்டுள்ள மோவாபியரின் தோற்றத்துடன் சம்பந்தப்பட்ட தாகாத உறவின் மூலம் விளங்களலாம். இதன் படி, மோவாப் லோத்துக்கு அவரது மூத்தமகள் மூலம் பிறந்த மகனாகும். மோவாப் என்ற பதத்தை "தந்தை மூலம்" என விவிலியம் கூறுகின்றது. இருப்பினும் இவ்விரு மக்கள் கூட்டத்தாரிடையே பல கலப்புகள் இருந்தன. விவிலியத்தில் தாவீது அரசனின் வம்சம், மோவாபிய பெண்ணான ரூத் வழி வருவதாக கூறுகின்றது.

ஆதியாகமம் 19:30-38 இன் படி, மோவாபியரின் ஆரம்ப நபரான மோவாப் அபிரகாமின் சகோதரனான லோத்துக்கு அவரது மூத்த மகள் மூலம் பிறந்தவனாகும். இவ்வாறே அவரது இளைய மகளுக்கு பிறந்த பென்னமி என்பவர் அம்மோனியரின் ஆரம்ப நபராகும். எனவே இவ்விரு இனமக்களும் மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தனர்.[9]

மோவாபியர்கள் ஆரம்பத்தில் சாக்கடலின் கிழக்கு கரையோரமான வளமிக்க மேட்டு நிலத்தில் குடியேறினர், பிறகு தமது குடியிருப்புகளை வடக்கில் கிலாத் மலை வரை விரிவாக்க்கினார்கள். வடக்கில் குடியேறும் பொருட்டாக அங்கிருந்த பூர்வீக குடிகளான எமிம் மக்களை வெளியேற்றினார்கள்,[10] அனால் சில காலத்துக்குப் பின், மோவாபியர்கள் சீயோன் மன்னனால் வழிநடத்தப்பட்ட ஆமோரியர்களால் தெற்கு நோக்கி விரட்டப்பட்டார்கள். இதனால் மோவாபியர் தெற்கு பிறதேசத்துக்கு மட்டுப் படுத்தப்பட்டனர்.[11]

எகிப்திலிருந்து விடுதலையாகிய இஸ்ரவேலர் வாக்களிக்கப்பட்ட நாடான கானானுக்குள் பிரவேசிக்கும் போது அவர்கள் மோவாப் நாட்டினூடாக செல்லாமல், சியோன் இராச்சியத்தை வெற்றிக்கொண்டு அதனூடாக சென்றார்கள். கானான் வெற்றிக் கொள்ளப்பட்டப் பின்பு, மோவாபியருக்கும் இஸ்ரவேலருக்குமான தொடர்புகள் பண்முகப் பட்டதாக இருந்தது. சமாதானமும் போரும் மாறிமாறி வந்தன. இஸ்ரவேலின் 12 கோத்திடங்களில் ஒன்றான பெஞ்சமின் கோத்திரத்தோடு ஆக குறைந்த்து ஒரு பாரிய முறுகளை கொண்டிருந்தனர்.[12] பெஞ்சமின் கோத்திரத்தை சேர்ந்த கேராவின் மகனான ஏகூத் எக்லோன் என்ற மோவாபிய அரசனை கொலை செய்து பின்னர் மோவாபியருக்கு எதிராக போர் செய்து அவர்களில் பலரை கொலை செய்தான்.


ரூத்தின் கதையானது இவ்விரு மக்களிடயே நட்பான சூழல் காணப்பட்டதை காட்டுகிறது. ரூத்தின் வம்சத்தில் பின்னர் தாவீது அரசன் பிறப்பதனால் தாவீது மோவாபிய இரத்தை தன்னுள் கொண்டிருந்தார் என கூறமுடியும். தாவீது சவுல் அரசனால் கொலை செய்ய தேடப்பட்டப் போது தனது பெற்றேரை கவனித்துக் கொள்ளூம் பொறுப்பை ஒரு மோவாபிய அரசனிடன் கொடுத்தார்.[13] ஆனால் நட்பு அத்துடன் முடிவடைகிறது, அடுத்த முறை மோவாபியரை பற்றி விவிலியத்தில் குறிப்பிடும் போது தாவீது மோவாபிய பிரதேசத்துக்குள் யுத்ததுக் போகிறார்.[14] பபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்து எருசலேமுக்கு வந்த இஸ்ரவேலரிடையே பாகாத் மோவாப் என்பருடைய சந்த்தியினரும் காணப்பட்டார்கள் இப்பெயர் "மோவாபின் ஆளுனர்" என பொருள் படும், எனவே பபிலோனிய அடிமைத்தந்த்துக்கு முன்னர் மோவாப் இஸ்ரவேலின் ஒரொ பிரதேச அரசாக ஆளுனர் மூலம் ஆட்சி செய்யப்பட்டிருக்கலாம் என்பது பொதுவான கருத்தாகும்.

மோவாபின் தலைந்கரம் கிர்-அசேத் என்பது இன்றைய கெராக் நகரமாகும்.

சுதந்திரம் தொகு

 
கிமு 850 ஐசேர்ந்த மேசா கல்வெட்டு

ரெகொபெயாம் ஆசியின் போது இஸ்ரவேல் இராச்சியம் இரண்டாக பிரிந்த்தபோது, மோவாப் வடக்கு இராச்சியத்துடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இது தொடர்ந்து இஸ்ரவேல் இராச்சியத்தின் கப்பம் கட்டும் நாடாக விளங்கியது. அனால் ஆகாப் என்ற இஸ்ரவேலின் அரசன் மரித்த பின்பு மோவாப் கப்பம் கட்டுடத்தல் நிறுத்தி யூதா இராச்சியம் மீது படையெடுத்தது.[15]

ஆகாப் அரசனின் மரணத்துகுப் பிறகு, மேசா என்பவரின் தலைமையில் மோவாபியர், யெரொபெயாம் அரனுக்கு எதிராக கலகம் பண்ணினார்கள். இதன் போது யெரொபயாம் யூதா இராச்சியத்தின் அரசனையும் ஏதோம் இராச்சியத்தின் அரசனையும் சேர்த்துக் கொண்டு மோவாபியருடன் யுத்தத்துக்கு தயாராக சிஸ் என்ற இடத்தில் காத்திருந்த்தார்கள். அப்போது விவிலியத்தின் படி, எலிசா என்ற தீர்க்கதரிசியின் கட்டளைப்படி அவர்களுக்கும் எதிரிகளுக்கும் இடையே பல வாய்காள்களை வெட்டினார்கள். இரவில் அற்புதமாக அவை நீரால் நிரம்பின. காலை செங்கதிர் அதன் மீது பட்டுத்தெறித்தபோது அதை இரத்தம் என் மோவாபியர் நினைத்தனர். மேலும் கூட்டு சேர்ந்து வந்தவர்கள் தங்கலுக்குள் யுத்தம் செய்து மடிந்து விட்டார்கல் என முடிவு செய்து யுத்ததுக்கு ஆயத்த மற்றவராஉ முன்னோக்கி நகர்ந்தனர். பின்பு கூட்டுப் படைகளின் திடிர்தாக்குதல்களில் சிக்கி தோல்வியை கண்டனர்.[16] ஆனால் மேசாவின் கல்வெட்டு இப்போரில் மோவாபியர் இஸ்ரவேலை வெற்றிகொண்டு இஸ்ரவேலர் மோவாபிடமிருந்து ஆக்கிரமித்த சகல பிரதேசங்களையும் கைப்பற்றியதாக கூறுகின்றது.

சிஸ் யுத்தமானது மோவாபியர் பற்றிய முக்கியமான விவிய குறிப்புகளில் கடைசியாகும். அதன் பின்னர் சில இடங்களில் மோவாப் பற்றி கூறப்பட்டுள்ளத்து. ஆனால் இவை மோவாப்பை பற்றிய செறிவான தகவல்களை கூறவில்லை.


அழிவு தொகு

பாரசீக இராசியதின் காலத்தில் மோவாப் பற்றிய சகல தகவல்களில்லாது போகின்றது. பல போர்களின் மூலம் மோவாப் வட அரபியாவில் இருந்து வந்த மக்களால் கைப்பற்றப்படுகிறது. மேலும் அதன் பிறகு இஸ்ரவேல் மீதான படியெடுப்பின் போது அம்மோனியரின் கூட்டாளியாக மோவாபிரை குறிப்பிடாமல் அரபியர்[17] என விவிலியம் குறிப்பிடுகிறது.[18] மோவாபியர் அழிந்தாலும் அதன் பின் நீண்ட காலத்துக்கு மோவாப் என்ற இடப்பெயர் விவிலியத்திம் மூலம் அழியாது காணப்பட்டது.

பொருளாதாரம் தொகு

மோவாப் பல இயற்கை வள்ங்களை கொண்டிருந்த்து. முக்கியமக சலவைகல், உப்பு, போன்றவை சாக்கடல் பிரதேசத்தில் கிடைத்தன. மேலும் மோவாப் அன்றைய எகிப்து, சிறியா, மெசொப்பொத்தேமியா, அனடோலியா என்பற்றை இணைத்த முக்கிய வணிக பாதையில் அமைந்திருன்ந்த்து. இப்பாதை மோவாபுக்கு பெருமளவு வரிகளை கொடுத்தது.

சமயம் தொகு

மோவாபிய சமயம் பற்றிய தகவால்கள் அறிது. அவர்கள் பல்-கடவுள்களை வழிபட்டிருக்கலாம் அவகள் பல வேலைகளில் இஸ்ரவேலரை தங்களது பலிகளில் சேரும் படி தூண்டீயிருக்கின்றனர்.[19] அவர்கள்து தலைமை கடவுள் "கோமோசு"[20] ஆவார் இதனால் இஸ்ரவேல சிலவேலைகளில் மோவாபியரை "கேமோசின் மக்கள்" என அழைத்தனர்.[21] சில நேரங்களில் மனித பலிகளும் கொடுக்கப்பட்டன. மேசா தனது மகனை பலியிட்டார்.[22] மேசா கல்வெட்டின் 17 ஆவது வரியில் கோமோசு கடவுளின் பெண் துணைக் கடவுள் பற்றி கூறப்பட்டுள்ளது.

ஆதாரங்கள் தொகு

 1. 2 அரசர் 3:
 2. ஆதியாகமம் 19:37
 3. Verhandlungen des Zwölften Internationalen Orientalisten-Congresses, p. 261, Leyden, 1904
 4. எசேக்கியேல் 25:9-10, ஏசாயா 15: - ஏசாயா 16:, யேரேமியா 48:
 5. உபாகமம் 34:1-8
 6. ரூத் 1:1-2
 7. உபாக்கமம் 1:5, உபாக்கமம் 32:49
 8. எண்ணாகமம் 22:1
 9. நீதிபதிகள் 3:12-13, நாளாகமம் 20:22, ஏசாயா 11:14, யெரேமியா 26:21
 10. உபாகமம் 2:11
 11. எண்ணாகமம் 21:13, நீதிபதிகள் 11:08
 12. நீதிபதிகள் 3:12-30
 13. 1 சாமுவேல் 22:3-4
 14. 2 சாமுவேல் 8:2,1 நாளாகமம் 18:2,
 15. நாளாகமம் 22:1
 16. 2 நாளாகமம் 20:, 2 அரசர் 3:
 17. நெகேமியா 4:7
 18. I மக்கபே 9:32-42; யோசபஸ், யூத வரலாறு xiii. 13, § 5; xiv. 1, § 4.
 19. எண்ணாகமம் 25:2, நீதிப்பதிகள் நூல் 10:6
 20. யேரேமியா 48:7,13
 21. எண்ணாகமம் 21:29, யேரேமியா 48:7,13
 22. 2 அரசர் 3:27
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோவாப்&oldid=3073319" இலிருந்து மீள்விக்கப்பட்டது