மேயரின் வினைக்காரணி
மேயரின் வினைக்காரணி (Mayer's reagent) என்பது ஒரு ஆல்கலாய்டு தன்மை வாய்ந்த, இயற்கைப் பொருட்களில் ஆல்க்கலாய்டுகளைக் கண்டறிய உதவக்கூடிய, ஆல்க்கலாய்டுகளை வீழ்படிவாக்கும் வினைக்காரணியாகும். மேயரின் வினைக்காரணியானது தேவைப்படும் நேரத்தில் உடனுக்குடன் தயாரித்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இது பாதரச குளோரைடு (1.36 கி) மற்றும் பொட்டாசியம் அயோடைடு (5.00 கி) கலந்த கலவையை நீரில் (100.0 மிலி) கரைத்துப் பெறப்படுகிறது.[1][2] பெரும்பாலான ஆல்க்கலாய்டுகள் நடுநிலைத் தன்மையுடைய அல்லது சிறிதளவு அமிலத்தன்மையுடைய கரைசல்களிலிருந்து மேயரின் வினைக்காரணியால் (பொட்டாசியம் பாதரச அயோடைடு கரைசல்) வெண்ணெய் போன்ற நிறமுடைய வீழ்படிவாக்கப்படுகின்றன. இந்த சோதனையானது செருமானிய நாட்டு வேதியியலானர் ஜுலியசு இராபர்ட் வான் மேயர் (1814–1878) என்பவரால் கண்டறியப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mayer′s reagent". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 2012-02-08.
K2HgI4
[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Test Solutions". US Pharmacopeia. பார்க்கப்பட்ட நாள் 2012-02-08.