மேரி அலெக்சாண்டர் பார்க்கு
மேரி அலெக்சாண்டர் பார்க்கு (Mary Alexander Park) இசுக்காட்லாந்து மற்றும் நியூசிலாந்தில் வாழ்ந்த ஓர் ஓவியக் கலைஞர் ஆவார். இராயல் கிளாசுகோ நுண்கலைகள் நிறுவனம் மற்றும் நியூசிலாந்து நாட்டின் ஒடாகோ கலை சங்கம் ஆகியவற்றில் இவரது படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்னேசியசு ரோச்சு மற்றும் இயான் லாவரி ஆகியோர் குறிப்பிட்ட சில மாணவர்களில் அடங்குவர்.
மேரி அலெக்சாண்டர் பார்க்கு Mary Alexander Park | |
---|---|
பிறப்பு | 1 ஏப்ரல் 1850 இலோனெட்டு,இசுகாட்லாந்து |
இறப்பு | 23 அக்டோபர் 1920 துனெடின், நியூசிலாந்து |
படித்த கல்வி நிறுவனங்கள் | எல்'இயூலியன் அகாடமி, பாரிசு |
அறியப்படுவது | ஓவியம் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுமேரி பார்க் 1850 ஆம் ஆண்டு ஏப்ரல் [1] மாதம் முதல் தேதியன்று இசுக்காட்லாந்தின் லோனெட்டு நகரில் பிறந்தார். இயான் பிரவுன் பார்க் (1821-1891) மற்றும் கிறிசுடினா அலெக்சாண்டர் (1821-1906) ஆகியோர் இவரது பெற்றோர்களாவர். மூத்த சகோதரி செசி மற்றும் இளைய சகோதரி ஆக்னசு ஆகியோர் இதர குடும்ப உறுப்பினர்களாவர். [2]
மேரிக்கு ஐந்து வயதாக இருந்தபோது குடும்பம் இசுகாட்லாந்திலிருந்து தாசுமேனியாவுக்கு குடிபெயர்ந்தது. [2]
தாசுமேனியா மற்றும் துனெடின் நகரங்களில் உள்ள தனது பெற்றோரின் பள்ளிகளில் படித்தார், அங்கு இளம் வயதிலேயே கலை திறன்களை வளர்த்துக் கொண்டார். [3]
தொழில்
தொகு1876 ஆம் ஆண்டு ஒடாகோ கலைச் சங்கத்தில் முதல் கண்காட்சி நடந்தது. [2] மேலும் ஓர் உருவப்பட ஓவியராக மேரி நன்கு அறியப்பட்டார்.
மேரி பார்க் 1880 ஆம் ஆண்டு இசுகாட்லாந்திற்கு குடிபெயர்ந்தார் [2] 20 ஆண்டுகளாக ஐரோப்பாவில் தங்கியிருந்தார், துனெடினுக்குத் திரும்புவதற்கு முன்பு பாரிசில் உள்ள ரோடோல்ஃப் இயூலியனின் தனியார் கலைப் பள்ளியான எல்' இயூலியன் அகாடமியில் நேரத்தைச் செலவிட்டார். [3] [2] இசுகாட்லாந்தில் பயிற்சியின் போது பாரிசில் சந்தித்த மேட்ச் ரோசுடன் எலன்சுபர்க்கில் ஓவியம் வரைந்தார் மற்றும் கலையை கற்பித்தார்.[2] இவர்களின் மாணவர்களில் கிளாசுகோ பாய்சு அலெக்சாண்டர் இக்னேசியசு ரோச் மற்றும் இயான் லாவரி ஆகியோர் அடங்குவர். [2]
பார்க் மற்றும் ரோசு இருவரும் அவர்களின் 7 கிழக்கு பிரின்சசு தெரு கேலரி ஆஃப் மேக்னூர் காட்சியக வீட்டிலும் பிரைடன் இசுடேசனர்சு, பெண் கலைஞர்கள் சங்கம் மற்றும் இராயல் கிளாசுகோ நுண்கலைகள் ஆகியவற்றில் காட்சிப்படுத்தினர். [2]
ரோசு மற்றும் பார்க் 1906 ஆம் ஆண்டு கிளாசுகோவிற்கு குடிபெயர்ந்தனர் மேரி பார்க் [2] நியூசிலாந்திலிருந்து திரும்பினார்.
இறப்பு
தொகுமேரி பார்க் 1920 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் நாளன்று [2] துனெடினில் மாரடைப்பால் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ McGahey, Kate (2000). "Concise Dictionary of New Zealand Artists". findnzartists.org.nz. பார்க்கப்பட்ட நாள் 2022-03-28.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 Borland, Craig (3 July 2019). "Eye on Millig: Paris-trained artists taught in Helensburgh". Helensburgh Advertiser. பார்க்கப்பட்ட நாள் 2022-03-28.Borland, Craig (3 July 2019). "Eye on Millig: Paris-trained artists taught in Helensburgh". Helensburgh Advertiser. Retrieved 2022-03-28.
- ↑ 3.0 3.1 Park, Graham Stuart. Mary Alexander Park: Portrait of the Artist.Park, Graham Stuart (2020). Mary Alexander Park: Portrait of the Artist. National Library of New Zealand. ISBN 9780473511616.