மேரி ஆன் கோமசு
இந்திய சதுரங்க வீராங்கனை
மேரி ஆன் கோமசு (Mary Ann Gomes) என்பவர் ஓர் இந்திய சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஆவார். கொல்கத்தாவைச் [1] சேர்ந்த இவர் 1989 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் நாள் பிறந்தார். பெண் கிராண்டு மாசுட்டர் என்ற தகுதியைப் பெற்ற சதுரங்க வீராங்கனைகளில் இவரும் ஒருவராவார்.
மேரி ஆன் கோமசு Mary Ann Gomes | |
---|---|
திரெசுடென், 2008 | |
நாடு | இந்தியா |
பிறப்பு | 1989 செப்டம்பர் 19 கொல்கத்தா, இந்தியா |
பட்டம் | பெண் கிராண்டு மாசுட்டர் |
உச்சத் தரவுகோள் | 2423 (சூலை 2013) |
2005 ஆம் ஆண்டில் உசுபெக்கித்தான் நாட்டின் நமங்கனில் நடைபெற்ற பதினாறு வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் சதுரங்க சம்பியன் பட்டப் போட்டியில் முதலிடம் பிடித்தார் [2]. 2006 [3], 2007 [4],, 2008 [5] ஆம் ஆண்டுகளில் இருபது வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆசிய இளையோர் பெண் சாம்பியன் பட்டத்தை வென்றார். 2011,2012,2013 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை பெண்கள் இந்திய சதுரங்க சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார் [6].
மேற்கோள்கள்
தொகு- ↑ WGM title application FIDE
- ↑ Asian Youth Championships for Boys and Girls U-16, FIDE
- ↑ "Mary Ann Gomes wins Asian chess crown". Rediff. 2006-11-14. பார்க்கப்பட்ட நாள் 7 November 2015.
- ↑ Asian Junior Chess Championship - Girls, 2007 Chess-Results
- ↑ Asian Junior Girls Chess Championship 2008 Chess-Results
- ↑ Anantharam, R. (6 September 2013). "Mary Ann Gomes Wins India Premier Chess Championship". Chessdom. http://www.chessdom.com/mary-ann-gomes-wins-india-premier-chess-championship/. பார்த்த நாள்: 19 August 2014.
புற இணைப்புகள்
தொகு- மேரி ஆன் கோமசு rating card at பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு