மேற்கத்திய பச்சைக் குக்குறுவான்
மேற்கத்திய பச்சைக் குக்குறுவான் (அறிவியல் பெயர்: Psilopogon zeylanicus inornata) என்பது பச்சைக் குக்குறுவானின் துணையினம் ஆகும்.[1] இது தென் கேரளம் நீங்கலாக தென்னிந்தியாவில் முழுவதும் மலைசார்ந்த பகுதிகளில் காணப்படுகிறது.
விளக்கம்
தொகுமேற்கத்திய பச்சைக் குக்குறுவான் பறவையானது மைனாவைவிடச் சற்றுப் பெரியதாக சுமார் 28 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு பழுப்புத் தோய்ந்த சிவப்பாகவும், விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இதன் தலை, கழுத்து, மோவாய், தொண்டை, மார்பு, வயிறு ஆகியன பழுப்பு நிறத்தில் இருக்கும். உடலின் மேற்பகுதி வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும்.[2]
நடத்தை
தொகுஇப்பறவைகளின் பழக்கவழக்கங்கள் பச்சைக் குக்குறுவானை ஒத்தவை. குரல் மட்டும் கோ...ர், குட்...ரூ, குட்...ரூ... என ஒலிக்கும்.
இவை மார்ச் முதல் சூன் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. மரங்களில் மரங்கொத்தியைப் போல பொந்து குடைந்து அதில் இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடும். முட்டை தெளிவற்ற வெள்ளை நிறத்தில் இருக்கும்.[2]