மேற்குத் தீவு, கொக்கோசு தீவுகள்

மேற்குத் தீவு (West Island) என்பது ஆஸ்திரேலியாவின் ஆட்சிப் பகுதிகளில் ஒன்றான கொக்கோசு (கீலிங்) தீவுகளின் தலைநகராகும். இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 120. கொக்கோசுத் தீவுகளில் மக்கள் வாழும் இரண்டு தீவுகளில் இது குறைந்தளவினர் வாழும் தீவாகும். மற்றையது ஹோம் தீவு ஆகும். இரண்டாம் உலகப் போரின் போது இங்கு விமான ஓடு பாதை ஒன்று அமைக்கப்பட்டது. இங்குள்ள அரசுக் கட்டிடங்களைத் தவிர, விமான நிலையம், ஒரு பலசரக்குக் கடை, சுற்றுலா விடுதி ஆகிய அமைந்துள்ளன.

வெளி இணைப்புகள் தொகு