மேற்கு பனாஸ் ஆறு

இந்திய ஆறு

மேற்கு பனாஸ் (West Banas River) என்பது மேற்கு இந்தியாவிலுள்ள ஒரு ஆறாகும். இது இராஜஸ்தான் மாநிலத்தின் சிரோஹி மாவட்டத்திலுள்ள தெற்கு ஆரவல்லி மலைத்தொடரிலிருந்து உருவாகி தெற்கே பாய்கிறது. மேற்கு பனாஸ் அணை, ஸ்வரூப்கஞ்ச் மற்றும் ஆபு சாலை நகரம் வழியாக மேற்கில் அபு மலை மற்றும் கிழக்கில் ஆரவல்லியின் கிழக்கு முகடுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்கை அடைகிறது. இது குசராத்து மாநிலத்தின் சமவெளிகள் வழியாக தெற்கே தொடர்கிறது. பனாஸ்காண்டா மற்றும் பதான் மாவட்டங்கள் வழியாக பாய்ந்து கட்ச் பாலைவனம் பருவகால நீர்த்தடத்தில் பாய்கிறது.[1]

மேற்கு பனாஸ் ஆறு

மேற்கு பனாஸ் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி தோராயமாக 1,876 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். [2] 266 கிலோமீட்டர் நீளமுள்ள ஆறு 50 கிலோமீட்டர் இராஜஸ்தானில் பாய்கிறது. மீதி குசராத்தில் உள்ளது. [2]

இதனையும் பார்க்கவும்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Banas River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. Archived from the original on 8 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 5 December 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 Banyal, Harinder Singh; Kumar, Sanjeev; Raina, R.H. (2019). "Exploration of Fish Diversity in the West Banas River, Banaskantha, Gujarat". Records of the Zoological Survey of India 119 (3): 282-288. doi:10.26515/rzsi/v119/i3/2019/132333. http://www.recordsofzsi.com/index.php/zsoi/article/download/132333/102727. பார்த்த நாள்: 11 February 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_பனாஸ்_ஆறு&oldid=3591306" இலிருந்து மீள்விக்கப்பட்டது