மேற்கு வங்க தீயணைப்பு சேவை
மேற்கு வங்க தீயணைப்பு சேவை (West Bengal Fire Service) என்பது கொல்கத்தா நகரம் உட்பட இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திற்கு தீயணைப்பு, மீட்பு மற்றும் அவசர மருத்துவ சேவைகளை வழங்கும் அரசுக்கு சொந்தமான சேவை அமைப்பாகும். இத்துறையிடம் 350 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட தீயணைப்பு சாதனங்கள் உள்ளன.
மேற்கு வங்காளத்தில் உள்ள தீயணைப்புத் துறை சேவை நாட்டிலேயே பழமையான தீயணைப்பு சேவையாகும். 1950 ஆம் ஆண்டில் கல்கத்தா தீயணைப்புப் படை மற்றும் பெங்கால் தீயணைப்பு சேவை ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. தீயணைப்பு சேவை சட்டம் 1950 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. தீ தடுப்பு மற்றும் தீ பாதுகாப்பு விதிகளை உள்ளடக்கி 1996 ஆம் ஆண்டில் இச்சட்டம் திருத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் 103 தீயணைப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. 350 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட தீயணைப்பு சாதனங்களுடன் சுமார் 8000 தீயணைப்பு வீரர்கள் சேவைப் பணியில் உள்ளனர். [1]