மேலக்கொடுமலூர்
மேலக்கொடுமலூர் (Melakodumalur), தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த வருவாய் கிராமம் [1] மற்றும் கிராம ஊராட்சி ஆகும்.[2]மேலக்கொடுமலூர் ஊராட்சி 9 உறுப்பினர்கள் கொண்டது. இங்கு மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் என்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இங்கு 300 ஆண்டுகள் பழமையான மசூதி மற்றும் தர்ஹா இருப்பது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.[3]
மேலக்கொடுமலூர், பரமக்குடியிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலும்; முதுகுளத்தூரிலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 425 குடியிருப்புகள் கொண்ட மேலக்கொடுமலூர் வருவாய் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 1,503 ஆகும். அதில் ஆண்கள் 753 மற்றும் பெண்கள் 750 ஆகும். சராசரி எழுத்தறிவு 71.87%. பட்டியல் சமூகத்தினர் 931 ஆக உள்ளனர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Revenue Villages of Mudukulathur Taluk
- ↑ Gram Panchayat: Melakodumalur
- ↑ "Melakodumalur". wikimapia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-10.
- ↑ Melakodumalur Population - Ramanathapuram, Tamil Nadu