மேலப்பழுவூர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்

மேலப்பழுவூர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் மேலப்பழுவூரில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும்.

மேலப்பழுவூர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்
பெயர்
பெயர்:மேலப்பழுவூர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்
அமைவிடம்
ஊர்:மேலப்பழுவூர்
மாவட்டம்:அரியலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சுந்தரேஸ்வரர்
தாயார்:மீனாட்சி

அமைவிடம் தொகு

அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் வட்டத்தில், தஞ்சாவூரிலிருந்து 35 கி.மீ வடக்கிலும், அரியலூரிலிருந்து 15 கி.மீ தொலைவிலும் உள்ள மேலப்பழுவூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

அமைப்பு தொகு

 
நந்தி

தரைத்தளத்திலிருந்து சற்று இறங்கிய நிலையில் அமைந்துள்ள வித்தியாசமான கோயில்.[1] சுமார் 10 அடி உயரத்திற்கு படிகளின் வழியாக கீழே இறங்கி நடந்து சென்று முதல் வாயிலைக் கடக்கும்போது அங்குள்ள மூன்று நிலைகளுடன் கூடிய கோபுரத்தைக் காணமுடிகிறது. வாயிலின் வெளியே இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். உள்ளே கொடிமரத்திற்கு முன்பாக விநாயகர் உள்ளார். பலி பீடமும், நந்தியும் அடுத்து உள்ளன. அதற்கடுத்து உள்ள மண்டபத்தில் நந்தி மிகவும் பெரிதாக அழகாக கலை ரசனையுடன் உள்ளது. அடுத்து பலிபீடம் உள்ளது.

வலப்புறம் ஜமதக்னி ரிஷியும், சூரியனும் உள்ளனர். இடப்புறம் நவக்கிரகங்கள், சனீஸ்வரர், விநாயகர், உமாமகேஸ்வரர், நாகர், ரிஷபாரூடர், நாகர், பைரவர், விஷ்ணு ஆகியோர் உள்ளனர். அடுத்துள்ள மண்டபத்தைக் கடந்து செல்லும்போது இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். வலது புறம் இருக்கும் துவாரபாலகருக்கு அருகே விநாயகர் உள்ளார். அருகே நந்தியும், பலிபீடமும் உள்ளன. கிழக்கு நோக்கிய சன்னதியில் மூலவர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கருவறையில் உள்ளார். மூலவர் சன்னதிக்குச் சற்று முன்பாக இடப்புறத்தில் தெற்கு நோக்கிய மீனாட்சி அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் கருவறைடன் கூடிய விமானம் கருங்கல் கட்டுமானப் பணியுடன் மிகவும் அழகாகக் காட்சியளிக்கிறது.

திருச்சுற்று தொகு

திருச்சுற்றில் ஊர்த்துவ தாண்டவர், அகோரவீரபத்திரர், பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் ஒரு சன்னதியில் உள்ளனர். அடுத்து தேவிகோட்டை கருமாரியம்மன் சன்னதி உள்ளது. தொடர்ந்து கடன் நிவர்த்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி ஆகியோருக்கான தனித்தனி சன்னதிகள் காணப்படுகின்றன. மூலவர் கருவறையில் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.

குடமுழுக்கு தொகு

இக்கோயிலின் குடமுழுக்கு 9 செப்டம்பர் 2015 அன்று நடைபெற்றது.[2]

மேற்கோள்கள் தொகு

படத்தொகுப்பு தொகு