மேலாண்மைப் பள்ளி

வணிகம் மற்றும் வணிக மேலாண்மை குறித்த கல்வி நிறுவனம்

மேலாண்மைப் பள்ளி அல்லது வணிகப் பள்ளி (business school) என்பது பல்கலைக்கழக நிலையில் வணிக மேலாண்மையில் பட்டங்கள் வழங்கும் ஓர் கல்வி நிறுவனமாகும். இவற்றிற்கு வணிகக்கல்லூரி, வணிகத்திற்கான கல்லூரி, வணிக மேலாண்மைக்கான கல்லூரி எனவும் பலவாறு பெயரிடப்படுகின்றன. சிலநேரங்களில் ஆங்கிலச் சுருக்கமாக பி-ஸ்கூல் எனப்படுவதும் வழக்கமாயுள்ளது. இக்கல்லூரியில் கணக்கியல், நிர்வாகம், யுக்தி, பொருளியல், தொழில் முனைவு, நிதியியல், மனிதவள மேலாண்மை, தகவல் அமைப்புகள், சந்தைப்படுத்தல், நிறுவனம்சார் நடத்தை, பொதுத் தொடர்புகள், மற்றும் அளவீட்டியல் செயல்முறைகள் போன்ற துறைகளில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

வகைகள்

தொகு

இவை வணிகம், வணிக மேலாண்மை, மற்றும் மேலாண்மைக்கான பள்ளிகளாகும். முதன்மையாக வணிகப் பள்ளிகள் நான்கு வகைப்படுகின்றன.

  1. பெரும்பாலான பல்கலைக்கழக வணிகப் பள்ளிகள் கல்வித்துறையாகவோ, பல்கலைக்கழகத்தினுள்ளேயே கல்லூரி அல்லது துறையாகவோ அமைகின்றன. இங்கு முதன்மையாக வணிகம்சார் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
  2. வட அமெரிக்காவில் (குயுபெக் தவிர்த்து) மேலாண்மைப் பள்ளி என்பது ஒரு பல்கலைக்கழகத்தினால் பட்டமேற்படிப்பு வழங்கும் பட்டதாரிக் கல்வி நிறுவனமாக அறியப்படுகிறது; இங்கு கல்வித்திட்ட இறுதியில் முதுகலை வணிக மேலாண்மை அல்லது இணையான பட்டம் வழங்கப்படுகிறது.
  3. வட அமெரிக்காவில் சில நேரங்களில் "வணிகப் பள்ளி" என்ற சொல்லாடல் மிகவும் வேறான நிறுவனத்தையும் குறிக்கிறது: இவை பல்வேறு வணிகத் துறைகளில் இரண்டாண்டுகள் கற்கைக்குப் பின்னதாக இளங்கலைப் பட்டம் வழங்குகின்றன. இவற்றில் பலவும் துவக்கத்தில் தட்டச்சு/குறுக்கெழுத்து பயிற்சி நிலையங்களாக இருந்து பின்னர் கணக்கியல் அல்லது கணக்குப் பதிவு போன்ற துறைகளில் விரிவுபடுத்தப் பட்டவை. இவை பெரும்பாலும் வணிக நோக்கிலேயே இயக்கப்படுகின்றன; உயர்கல்வி நிலையங்களாக இவை இருப்பதில்லை.
  4. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் வணிக மேலாண்மைக்கென்றே சிறப்பாக உருவாக்கப்பட்ட சில பல்கலைக்கழகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலாண்மைப்_பள்ளி&oldid=1382253" இலிருந்து மீள்விக்கப்பட்டது