தகவல் அமைப்புகள்


தகவல் அமைப்புகள் (Information system, IS) என்பது பல துறைகள் தொடர்புடைய வணிக உலகு மற்றும் சிறந்த முறையில் வரையறுத்து புதிய அறிவியல் ஒழுங்குமுறைமகளாக வளர்ந்து வரும் கணினி அறிவியல் தளம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு கல்வித் தளமாகும்.[4][5][6][7] தகவல் அமைப்புத் துறை, தகவல் மற்றும் கணக்கிடல் ஆகியவற்றின் கருத்தாக்க அடித்தளங்களின் ஆதரவினைப் பெற்று, பட்டப்படிப்பு மாணவர்கள் பல்வேறு வர்த்தக மாதிரிகளின் கல்விசார் மாதிரிகளையும் ஆராய்ந்து மற்றும் கணினி அறிவியல் துறைக்குள்ளாகவே படித்தீர்வு செயல் முறைகளையும் ஆய்வு செய்ய உதவுகிறது.[8][9][10] அதாவது, தகவல் அமைப்புகள் அல்லது மேலும் பொதுவான மரபு வழி தகவல் அமைப்பு மக்கள், நடைமுறைகள், தரவுகள், மென்பொருள் மற்றும் எண்ணியல் ஆகியவற்றின்பாற்பட்ட தகவல்களைச் சேகரித்து பகுப்பாய்வு செய்ய (அலகையின்பாற்பட்ட) வன்பொருள் ஆகியவற்றை உள்ளிடும்.[11][12] குறிப்பாக, கணினி-சார்ந்த தகவல் அமைப்புகள் வன்பொருள்/ மென்பொருள் ஆகிய வலைப்பின்னல்களுக்கு கூட்டிணைவாகும். இவற்றை மக்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோர் சேகரித்து, வடிகட்டி, செய்முறைக்கு உட்படுத்தி (கணக்கிட்ட) தரவினை உருவாக்கி, பகிர்மானம் மேற்கொள்கின்றனர்.[13] இன்று, கணினி தகவல் அமைப்பு(கள்) (சிஐஎஸ்) என்பதானது பெரும்பாலும் கணினி அறிவியல் துறைக்கு உட்பட்ட கணினிகள், கோட்பாடுகளை உள்ளிட்ட படித்தீர்வுச் செயற்பாடுகள், அவற்றின் மென்பொருள் மற்றும் வன்பொருள் வடிவமைப்புகள், அவற்றின் பயன்பாடுகள் மற்றும் சமூகத்தின் மீது அவை ஏற்படுத்தும் ஆதிக்கம் ஆகியவற்றைத் தடமறிவதாகவே உள்ளது.[14][15][16] ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில், ஐஎஸ் என்பதானது வடிவமைப்பு என்பதற்கு மேலாகப் பொருளின் பயன்பாட்டினையே வலியுறுத்துவதாக உள்ளது.[17]

சிஎஸ். எஸ்ஈ, ஐஎஸ், ஐடி & வாடிக்கையாளர் வென் வரைபடம். இதில் கண்டுபிடிப்புகள் மூலம், பயன்பாட்டுச் செயல்பாடுகள் இடது புறமும் வடிவமைப்பு வலது புறமும் வீச்சளவு கொண்டிருப்பதைக் காணலாம்[1][2][3]

வலது புறம் காணப்படும் வென் வரைபடம் சித்தரிப்பதைப் போல, தகவல் அமைப்பு களின் வரலாறு கணினி அறிவியலின் வரலாறுடன் இணைந்தே உள்ளது. இது நவீன கணினி அறிவியல் துறை 20ஆம் நூற்றாண்டில் உருவாவதற்கு வெகு காலம் முன்னரே துவங்கி விட்டது.[18] தகவல்கள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றின் சுழற்சியைப் பொறுத்த வரையில், மரபு வழியிலான தகவல் அமைப்புகள் பல இன்றளவும் உள்ளன. இவை மக்கள் இன அமைப்பியல் அணுகுமுறைகளை மேம்படுத்த இற்றையாகி வருகின்றன. இவை தரவு ஒருமைப்பாடு என்பதனை உறுதி செய்யவும் மற்றும் சமூக ரீதியான பயனுறுதி, மற்றும் மொத்தச் செயற்பாட்டின் திறனை மேம்படுத்தவும் பயன்படுகின்றன.[11] பொதுவாகச் சொல்லப்போனால், தகவல் அமைப்புகள் என்பவை நிறுவனங்களுக்குள்ளான, குறிப்பாக வணிக நிறுவனங்களுக்குள்ளான, செயற்பாடுகளைக் குவிமையைப்படுத்தி நவீன சமூகத்திற்குப் பலனளிக்கின்றன.[19]

மேலோட்டப் பார்வை

தொகு

ஐஎஸ் மற்றும் ஐஎஸ்-மையப்பாடு என்பதன் மீதாக சில்வர் மற்றும் பலர் (1995) இரு வகையான கருத்துக்களை அளித்தனர். இவை மென்பொருள், வன்பொருள், தரவு, மக்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றை உள்ளிட்டிருந்தன. மேலாண்மைக்கான இரண்டாவது பார்வை மக்கள், வணிகச் செயல்பாடுகள் மற்றும் தகவல் அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கும்.

தகவல் அமைப்புகளில் பல வகைகள் உள்ளன. எடுத்துக் காட்டாக, பரிவர்த்தனை செயற்பாட்டு அமைப்புகள், அலுவலக அமைப்புகள், முடிவெடுப்பதற்கான ஆதரவளிக்கும் அமைப்புகள், அறிவுசார் மேலாண்மை அமைப்புகள், தரவு மேலாண்மை அமைப்புகள் மற்றும் அலுவலகத் தகவல் அமைப்புகள் ஆகியவற்றைக் கூறலாம்.

பல அமைப்புகளுக்கும் மிகவும் முக்கியமானதாக இருப்பவை தகவல் தொழில் நுட்பங்களாகும். இவை மனித மூளைக்கு அவ்வளவாகப் பொருத்தமாக அல்லாத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக வடிவமைக்கப்பட்டவை. எடுத்துக்காட்டாக, மிகப் பெரும் அளவிலான தகவல்களைக் கையாளுதல், மிகவும் நுணுக்கமான கணக்கீடுகளைச் செய்தல் மற்றும் ஒரே நேரத்தில் பல செயற்பாடுகளைச் செய்தல் ஆகியவற்றைக் கூறலாம்.

தகவல் தொழில் நுட்பங்களானவை, செயல் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெறும் மிகவும் முக்கியமான மற்றும் இணக்கமான வளங்களாகும்.[20] பல நிறுவனங்களும் முதன்மைத் தகவல் அதிகாரி (Chief Information Officer) என்னும் ஒரு நிலையில் ஒரு அதிகாரியை நியமிக்கின்றன. இவர் செயற்குழுவில், முதன்மைச் செயல் அதிகாரி (Chief Executive Officer-சிஈஓ), முதன்மை நிதிசார் அதிகாரி (Chief Financial Officer- சிஎஃப்ஓ), முதன்மை செயற்பாட்டு அதிகாரி (Chief Operating Officer- சிஓஓ), மற்றும் முதன்மைத் தொழில் நுட்ப அதிகாரி (Chief Technical Officer- சிடிஓ) ஆகியோருடன் அமர்வார்.ஒரு நிறுவனத்தில் சிடிஓ என்பவரே, சிஈஓவாகவோ அல்லது சிஈஓவே சிடிஓவாகவோ இருக்கலாம். முதன்மைத் தகவல் பாதுகாப்பு அதிகாரி (Chief Information Security Officer- சிஐஎஸ்ஓ) என்பவர் ஒரு நிறுவனத்திற்குள்ளாக அதன் தகவல் பாதுகாப்பினை குவிமையப்படுத்தி, பொதுவாக சிஐஒவிற்குப் பணிமுறை விபரம் அளிப்பவர் ஆவார்.

இவ்வகையில், தகவல் அமைப்புத் தொழில்முறையாளர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் வலிமையான பகுப்பாய்வு மற்றும் நுணுக்கமான சிந்தனைத் திறன் போன்ற் ஆற்றல்களைக் கொண்டு, ஒரு நிறுவனத்திற்குள்ளாக பெரும் அளவில் வணிக முன்மாதிரிகளைச் செயலாக்குகிறார்கள். ஒரு நிறுவனத்திற்குள்ளாக அதன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது என்பது பொதுவான ஒரு நடைமுறையாக இருந்த போதிலும், ஐஎஸ் தொழில் முறையாளர்கள், நிரலாக்கம் செய்யக் கூடிய தொழில் நுட்பங்கள் வழியாக, நெறிமுறைகளுக்கு இடையூறு நேராத வண்ணம் இத்தகைய தீர்வுகளை தானியங்கி முறைமையில் அமைக்கும் ஆற்றல் கொண்டுள்ளனர். இதன் இறுதி விளைவாக, ஐஎஸ் தொழில் முறையாளர்கள் பெரும் அளவில் வணிகம் மற்றும் யதார்த்த உலகு அனுபவங்களைக் கொண்டிருக்க வேண்டும். அதன் வாயிலாகவே அவர்கள் நிறுவனத்தில் செயற்பாட்டை மேம்படுத்த தொழில் நுட்பத் தீர்வுகளைப் பயன்படுத்த இயலும்.[21]

கணினிப் பாதுகாப்பு என்பதில், ஒரு தகவல் அமைப்பு கீழ்க்காணும் ஆக்கக்கூறுகளால் விவரிக்கப்படுகிறது:[22]

  • வன்வட்டு, ஆர்ஏஎம், விரைவி போன்றவை வழியாக, நிரந்தரமாகவோ அல்லது தாற்காலிகமாகவோ தரவுகளை சேமித்து வைக்கும் கொள்கலன்கள். இத்தகைய கொள்கலன்களில் சேமிக்கப்படும் தரவுகள் பெரும்பாலும் தரவு மேலாண்மை அமைப்பு என்பதன் வழியாக நிர்வகிக்கப்படுகிறது.

மனிதர்கள் மற்றும் கணினிகளுக்கு இடையிலான ஊடாடுகளுக்கு ஆதரவளிக்கும், சாவிப்பலகை, ஒலிபெருக்கிகள், ஒளிவருடிகள், அச்சுப்பொறிகள் போன்ற இடைமுகங்கள்.

கொள்கலன்களை இணைக்கும் வழிப்படுத்தி, வடம் போன்ற தடங்கள்.

வரையறை

தொகு

தகவல் அமைப்புகளை சில்வர் மற்றும் பலர்[23] கீழ்க்காண்பதைப் போல வரையறுத்துள்ளனர்:

தகவல் அமைப்புகள் என்பவை ஒரு நிறுவனத்திற்குள்ளாக அதன் செயற்திறன் மற்றும் ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்த செயற்படுத்தப்படுகின்றன. இந்த நோக்கமானது எந்த அளவு அடையப்படுகிறது என்பதை தகவல் அமைப்பின் பண்புக் கூறுகள், அந்த நிறுவனத்தின் பண்புக் கூறுகள், அதன் பணியமைப்புகள், அதன் பணியாளர்கள் மற்றும் அதன் செயலாக்க முறைமைகள் ஆகிய அனைத்துமே நிர்ணயிக்கின்றன.

ஐஎஸ் என்பதை அது தொடர்பான துறைகளிலிருந்து வேறுபடுத்துதல்

தொகு

கணினி அறிவியலைப் போலவே, இதர துறைகளும் ஐஎஸ் என்பதன் தொடர்புடைய துறைகளாக மற்றும் அதன் அடிப்படையில் அமைந்திருப்பதையும் காணலாம். ஆயினும், இத்தகைய துறைகளின் எல்லைகள் ஓரளவு கவிநதிருப்பினும், அவற்றின் குவிமையம், நோக்கம் மற்றும் அவற்றின் செயற்பாடுகளின் இயல்பு அறிதிறமை ஆகியவற்றின் அடிப்படையில் இவை மாறுபடுகின்றன.[24]

பொதுவான நோக்கில் காண்கையில் ஐஎஸ் என்னும் தகவல் அமைப்புகள் ஒரு அறிவியல்சார் கல்வித் தளமாகும். இது, சமூகம் மற்றும் நிறுவனம் மற்றும் அது தொடர்பானவற்றில் தகவல் சேகரிப்பு, செய்முறை, சேமிப்பு, பகிர்மானம் ஆகியவை மற்றும் அவை தொடர்பான உத்தியமைப்பு, மேலாண்மை, செயற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை ஈடுபடுத்துகிறது.[24] தகவல் அமைப்புகள் என்னும் சொற்றொடர் ஐஎஸ் அறிவினை தொழில் மற்றும் அரசு முகமைகள் மற்றும் இலாப-நோக்கற்ற நிறுவனங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தும் ஒரு நிறுவனச் செயற்பாட்டினையும் குறிப்பதாக அமையும்.[24] பொதுவாகத் தகவல் அமைப்புகள் என்பவை படித்தீர்வுச் செய்முறைகள் மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றிற்கு இடையிலான ஊடாடுதலைக் குறிக்கும். இத்தகைய ஊடாடுதல் நிறுவன எல்லகளைத் தாண்டியும் நிகழலாம். ஒரு தகவல் அமைப்பானது ஒரு நிறுவனம் பயன்படுத்தும் தொழில் நுட்பம் மட்டும் அல்ல; இது அந்தத் தொழில் நுட்பத்துடன் அந்நிறுவனம் எவ்வாறு ஊடாடுகிறது மற்றும் அந்தத் தொழில் நுட்பம் அந்நிறுவனத்தின் செயற்பாடுகளில் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும் பொறுத்ததாகும். தகவல் அமைப்புகள் என்பவை தகவல் தொழில் நுட்பம் (ஐடி) என்பனவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. தகவல் அமைப்பில் தகவல் தொழில் நுட்பத்தின் ஆக்கக்கூறு இருக்கக் கூடும். இது செயற்பாட்டு ஆக்கக்கூறுகளுடன் ஊடாடுவதாக இருக்கக் கூடும்.

தகவல் அமைப்புகளின் வகைகள்

தொகு

தகவல் அமைப்புகள் என்பதன் தலைமைசால் பார்வை 1980ஆம் ஆண்டுகளின் உரைநூல்களில்[25] காணப்படுவதைப் போல, அமைப்புகளின் ஒரு கூரங்கோபுர வடிவாகும். இது ஒரு நிறுவனத்தின் அதிகாரப் படிக்கட்டுக்களை பிரதிபலிப்பதானது. பொதுவாக, பரிவர்த்தனைச் செயற்பாட்டு அமைப்புகள் என்பது இந்தக் கூரங்கோபுரத்தின் கீழ்ப்பகுதியிலும், அதை அடுத்து மேலாண்மைத் தகவல் அமைப்புகள் மற்றும் முடிவெடுப்பதில் ஆதரவளிக்கும் அமைப்புகள் ஆகியவை அதனைத் தொடர்ந்தும், இறுதியாக, செயலாக்கத் தகவல் அமைப்புகள் மேற்புறமும் அமைந்திருக்கும்.

இருப்பினும், புதிய தகவல் தொழில் நுட்பங்கள் உருவாவதன் காரணமாக, தகவல் அமைப்புகளில் புதிய வகைகளும் உருவாகி வருகின்றன. இவற்றில் சில, மூல கூரங்கோபுர முன்மாதிரியில் அடங்கா. இத்தகைய அமைப்புகளின் சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

  • தரவுக் கிடங்குகள்
  • தொழில் முனைவு வளத் திட்டமிடுதல்
  • தொழில் முனைவு அமைப்புகள்
  • நிபுண அமைப்புகள்
  • புவியியல்சார் தகவல் அமைப்புகள்
  • உலகளாவிய தகவல் அமைப்புகள்
  • அலுவலகத் தானியக்கம்

தகவல் அமைப்புகள்-வழி தொழிற்பாதைகள்

தொகு

தகவல் அமைப்புகள் பல்வேறு பணிகளிலும் பயன்பாட்டினைப் கொண்டுள்ளன:

  • உத்தி சார் தகவல் அமைப்புகள்
  • மேலாண்மைசார் தகவல் அமைப்புகள்
  • தகவல் அமைப்புகள் உருவாக்கம்
  • தகவல் அமைப்புகள் பாதுகாப்பு
  • தகவல் அமைப்புகள் மறு செய்கை

தகவல் அமைப்புகள் துறையில் பல்வேறு தொழில்களுக்கான பாதைகள் காணப்படுகின்றன. "சிறந்த தொழில் நுட்ப அறிவும், வலிமையான தொடர்புத் திறன்களும் கொண்ட பணியாளர்கள் மிகுந்த அளவில் வரவேற்பினைப் பெறுவார்கள். மேலாண்மைத் திறன் மற்றும் வர்த்தக நடைமுறைகள் மற்றும் கோட்பாடுகளைப் பற்றிய புரிதல் ஆகியவற்றைக் கொண்ட பணியாளர்களுக்குச் சிறப்பான வாய்ப்புகள் உண்டு. காரணம், தங்கள் வருமானத்தைப் பெருக்க அனைத்து நிறுவனங்களும் தொழில் நுட்பத்தினைச் சார்ந்திருப்பது என்பதானது பெருகி வருகிறது.[26]

தகவல் அமைப்புகளின் மேம்பாடு

தொகு

பெரும் நிறுவனங்களில் தகவல் தொழில் நுட்பத் துறைகள் அந்த நிறுவனங்களில் தகவல் தொழில் நுட்ப உருவாக்கம், பயன்பாடு மற்றும் செய்வினை ஆகியவற்றின் மீது மிகுந்த அளவு ஆதிக்கம் கொண்டுள்ளன. இவை வணிக நிறுவனமாகவோ அல்லது கழகமாகவோ இருக்கலாம். தகவல் அமைப்பை உருவாக்கிப் பயன்படுத்த, தொடர்ச்சியான செய்முறைகளையும் செயற்பாட்டுக்களையும் கைக்கொள்ளலாம். பல உருவாக்குனர்களும் அமைப்பு உருவாக்க வாழ் சுழற்சி (System Development Life Cycle - எஸ்டிஎல்சி) போன்ற பொறியியல் அணுகுமுறையைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இது ஒரு வரிசையில் உருவாகும் நிலைகளின் வழி தகவல் அமைப்பினை உருவாக்கும் முறைமைப்படுத்தப்பட்ட ஒரு வழிமுறையாகும். ஒரு நிறுவனம் தன் உட்பணியாளர்களைக் கொண்டோ அல்லது வெளியாட்களைக் கொண்டோ தகவல் அமைப்பினை உருவாக்கிக் கொள்ளலாம். அமைப்பின் சில ஆக்கக் கூறுகளையோ அல்லது முழு அமைப்பினையோ வெளியாட்களைக் கொண்டு உருவாக்கிக் கொள்ளலாம்.[27] இதற்குக் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு, புவியியல் சார்ந்த தொலைகடல் உருவாக்கக் குழு, உலகளாவிய தகவல் அமைப்பு ஆகியவையாகும்.

லேங்க்ஃபோர்ஸ்[28] வரையறையின்படி, ஒரு கணினிசார் தகவல் அமைப்பு இவ்வாறானது:

  • மொழிசார் வெளிப்பாடுகளைப் பதிவு செய்து, சேமித்து, பரப்புவதற்காக தொழி நுட்ப ரீதியாக செயலாக்கும் ஒரு ஊடகம்.
  • மேலும் அத்தகைய வெளியீடுகளிலிருந்து இறுதி முடிவுகளைப் பெறவும் இது பயன்படும்.

இவற்றைப் பொதுப்படையான தகவல் அமைப்புகள் வடிவமைப்பு கணித நிரல் என முறைப்படுத்தலாம்.

புவிசார் தகவல் அமைப்புகள், நிலம்சார் தகவல் அமைப்புகள் மற்றும் பேரிடர்சார் தகவல் அமைப்புகள் ஆகியவையும் உருவாகி வரும் சில வகைத் தகவல் அமைப்புகளாகும். ஆயினும், இவற்றைப் பொதுப்படையாக, இடம்சார் தகவல் அமைப்புகள் என்றே கருதலாம்.

அமைப்பு உருவாக்கம் என்பது கீழ்க்காண்பவற்றை உள்ளிட்ட நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது:

  • சிக்கலை அடையாளம் கண்டு குறிப்பிடுதல்
  • தகவல் சேகரிப்பு
  • புதிய அமைப்பிற்கான குறிப்பீட்டிற்குத் தேவையானவை
  • அமைப்பின் வடிவமைப்பு
  • அமைப்பின் கட்டமைப்பு
  • அமைப்பின் செயலாக்கம்
  • மறு ஆய்வு மற்றும் பராமரிப்பு[29]

தகவல் அமைப்புகள் மேம்பாட்டு முறையியல்

தொகு

தகவல் அமைப்புகள் மேம்பாட்டு முறையியல் அல்லது ஐஎஸ்டிஎம் என்பது எண்ணங்கள், அணுகுமுறைகள், உத்திகள் மற்றும் கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கருவித்தொகுப்பு. அமைப்புப் பகுப்பாய்வாளர்கள் இதன் துணை கொண்டு நிறுவனத்தின் தேவைகளை அதற்கு உகப்பான முறையில் தகவல் அமைப்புகளாக மாற்றுகின்றனர்.

ஒரு ஐஎஸ்டிஎம் என்பதானது:-

...தகவல் அமைப்புகளின் உருவாக்குனர்களுக்காக பரிந்துரைக்கப்படும் அதன் கருத்தாக்கங்கள், கட்டங்கள், நடைமுறைகள், உத்திகள், விதிகள், ஆவணம், மேலாண்மை மற்றும் பயிற்சி ஆகியவை கொண்ட ஒரு தொகுப்பு". (அவிசான் மற்றும் ஃபிட்ஸ்ஜெரால்ட், 1988) (Avison and Fitzgerald)

தகவல் அமைப்புகள் ஆராய்ச்சி

தொகு

தகவல் அமைப்புகள் ஆராய்ச்சி என்பது பொதுவாக தனி நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் நடத்தையின் மீது தகவல் அமைப்புகள் உருவாக்கும் விளைவுகளை ஆய்வு செய்யும் ஒரு இணைத் துறையாகும்.[30][31]. ஹெவ்னர் (Hevner) மற்றும் பலர் (2004)[32], ஐஎஸ் என்பதன் மீதான ஆராய்ச்சியை, நடத்தை மீதான அறிவியலையும் உள்ளிட்ட இரு அறிவியல் மேற்கோள் சூத்திரங்களாகப் பிரித்தனர்: மனித அல்லது நிறுவன நடத்தையினை விளக்கும் அல்லது முன்னறிவிக்கும் கருத்தாக்கங்களை உருவாக்குவது அல்லது சரிபார்ப்பது மற்றும் மனித மற்றும் நிறுவன திறன் எல்லைகளைக் கடக்கும் புதிய மற்றும் புதுமையான கைவினைப் பொருட்களை உருவாக்குவது.

தகவல் அமைப்புகள் என்பது கடந்த 30 வருடங்களாக[33] உருவாகி வரும் ஒரு துறை எனினும், ஐஎஸ் ஆராய்ச்சி என்பதன் ஆதாரக் குவிமையம் அல்லது அடையாளம் என்பது இன்னமும் [34][35][36] ஆகியவை போன்று கல்வியாளர்களிடையே விவாதத்துக்குரிய பொருளாகவே இருந்து வருகிறது. இந்த விவாதம் இரண்டு கருத்துகளைச் சுற்றிச் சுழல்கிறது: ஒன்று, ஐஎஸ் கைவினைப் பொருள் என்பதே ஐஎஸ் ஆராய்ச்சியின் ஆதாரக் கருப்பொருள் என உரைக்கும் குறுகிய பார்வையில் அமைந்தது; மற்றொன்றோ, ஐடியின் சமுதாய மற்றும் தொழில் நுட்ப அம்சங்களின் ஊடாடல், இயக்கவாற்றல் மிகுந்து உருவாகி வரும் தறுவாயினுள்ளாக அமைவதாக உரைக்கிறது.[37][38] அளித்துள்ள மூன்றாவது கருத்தானது ஐஎஸ் கல்வியாளர்களை ஐடி கைவினைப் பொருள் மற்றும் அதன் தறுவாய் ஆகிய இரண்டினையும் நோக்கிய ஒரு சமச்சீர் கவனத்தை மேற்கொள்ளுமாறு அறைகூவல் விடுக்கிறது.

தகவல் அமைப்புகள் என்பது பிரயோகத் தளம் என்பதனால், தொழில் முனைவோர், தகவல் அமைப்புகள் ஆராய்ச்சியானது இத்தகைய தகவல் அமைப்புகள் உடனடியாகப் பிரயோகம் செய்யக் கூடிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இருப்பினும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் இவ்வாறே இருப்பதில்லை. பல நேரங்களில், தகவல் அமைப்புகள் ஆராய்ச்சியாளர்கள் நடத்தை தொடர்பான விடயங்களை தொழில் முனைவோர் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விட மேலும் ஆழமாகவே ஆராய்கின்றனர். இதனால் தகவல் அமைப்புகள் ஆராய்ச்சி முடிவுகளைப் புரிந்து கொள்வது கடினமாகலாம். இது விமர்சனங்களில் விளைந்துள்ளது.[39]

தகவல் அமைப்புகளின் விளைவுகளை அல்லாது தகவல் அமைப்புகள் என்பதனையே ஆய்வதற்கு, ஈஏடிபியுடி {EATPUT} போன்ற தகவல் அமைப்பு மாதிரிகள் பயன்படுகின்றன.

தகவல் அமைப்புகள் ஆராய்ச்சி தொடர்பான குறிப்பிடத்தக்க வெளியீடுகள் மானேஜ்மெண்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் குவார்ட்டர்லி (Management Information Systems Quarterly), இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் ரிசர்ச் (Information Systems Research) மற்றும் கம்யூனிகேஷன் ஆஃப் தி அசோசியேஷன் ஃபார் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் (Communications of the Association for Information Systems) ஆகிய பத்திரிகைகளாகும்.

மேலும் காண்க

தொகு
தொடர்புற்ற ஆய்வுகள்
ஆக்கக்கூறுகள்

குறிப்புகள்

தொகு
  1. Archibald, J.A. (May 1975). "Computer Science education for majors of other disciplines". AFIPS Joint Computer Conferences: 903–906. "Computer science spreads out over several related disciplines, and shares with these disciplines certain sub-disciplines that traditionally have been located exclusively in the more conventional disciplines". 
  2. Denning, Peter (July 1999). "COMPUTER SCIENCE: THE DISCIPLINE". Encyclopedia of Computer Science (2000 Edition). "The Domain of Computer Science: Even though computer science addresses both human-made and natural information processes, the main effort in the discipline has been directed toward human-made processes, especially information processing systems and machines". 
  3. Coy, Wolfgang (June 2004). "Between the disciplines". ACM SIGCSE Bulletin 36 (2): 7–10. பன்னாட்டுத் தர தொடர் எண்:0097-8418. "Computer science may be in the core of these processes. The actual question is not to ignore disciplinary boundaries with its methodological differences but to open the disciplines for collaborative work. We must learn to build bridges, not to start in the gap between disciplines". 
  4. Hoganson, Ken (December 2001). "Alternative curriculum models for integrating computer science and information systems analysis, recommendations, pitfalls, opportunities, accreditations, and trends". Journal of Computing Sciences in Colleges 17 (2): 313–325. பன்னாட்டுத் தர தொடர் எண்:1937-4771. "... Information Systems grew out of the need to bridge the gap between business management and computer science ...". 
  5. Davis, Timothy; Geist, Robert; Matzko, Sarah; Westall, James (March 2004). "τ´εχνη: A First Step". Technical Symposium on Computer Science Education: 125–129. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-58113-798-2. "In 1999, Clemson University established a (graduate) degree program that bridges the arts and the sciences... All students in the program are required to complete graduate level work in both the arts and computer science". 
  6. Hoganson, Ken (December 2001). "Alternative curriculum models for integrating computer science and information systems analysis, recommendations, pitfalls, opportunities, accreditations, and trends". Journal of Computing Sciences in Colleges 17 (2): 313–325. பன்னாட்டுத் தர தொடர் எண்:1937-4771. "The field of information systems as a separate discipline is relatively new and is undergoing continuous change as technology evolves and the field matures". 
  7. Khazanchi, Deepak; Bjorn Erik Munkvold (Summer 2000). "Is information system a science? an inquiry into the nature of the information systems discipline". ACM SIGMIS Database 31 (3): 24–42. doi:10.1145/381823.381834. பன்னாட்டுத் தர தொடர் எண்:0095-0033. "From this we have concluded that IS is a science, i.e., a scientific discipline in contrast to purportedly non-scientific fields". 
  8. Denning, Peter (June 2007). Ubiquity a new interview with Peter Denning on the great principles of computing. 2007. பக். 1–1. "People from other fields are saying they have discovered information processes in their deepest structures and that collaboration with computing is essential to them.". 
  9. "Computer science is the study of computation. " [1] பரணிடப்பட்டது 2007-02-03 at the வந்தவழி இயந்திரம்Computer Science Department, College of Saint Benedict பரணிடப்பட்டது 2007-02-03 at the வந்தவழி இயந்திரம், Saint John's University
  10. "Computer Science is the study of all aspects of computer Systems, from the theoretical foundations to the very practical aspects of managing large software projects. " Massey University பரணிடப்பட்டது 2006-06-19 at the வந்தவழி இயந்திரம்
  11. 11.0 11.1 Kelly, Sue; Gibson, Nicola; Holland, Christopher; Light, Ben (July 1999). "Focus Issue on Legacy Information Systems and Business Process Engineering: a Business Perspective of Legacy Information Systems". Communications of the AIS 2 (7): 1-27. 
  12. Pearson Custom Publishing & West Chester University, Custom Program for Computer Information (CSC 110), (Pearson Custom Publishing, 2009) Glossary p. 694
  13. Jessup, Leonard M.; Joseph S. Valacich (2008). ' Information Systems Today (3rd ed.). Pearson Publishing. Pages ??? & Glossary p. 416
  14. Polack, Jennifer (December 2009). "Planning a CIS Education Within a CS Framework". Journal of Computing Sciences in Colleges 25 (2): 100–106. பன்னாட்டுத் தர தொடர் எண்:1937-4771. 
  15. Hayes, Helen; Onkar Sharma (February 2003). "A decade of experience with a common first year program for computer science, information systems and information technology majors". Journal of Computing Sciences in Colleges 18 (3): 217–227. பன்னாட்டுத் தர தொடர் எண்:1937-4771. "In 1988, a degree program in Computer Information Systems (CIS) was launched with the objective of providing an option for students who were less inclined to become programmers and were more interested in learning to design, develop, and implement Information Systems, and solve business problems using the systems approach". 
  16. CSTA Committee, Allen Tucker, et alia, A Model Curriculum for K-12 Computer Science (Final Report), (Association for Computing Machinery, Inc., 2006) Abstraction & p. 2
  17. Freeman, Peter; Hart, David (August 2004). "A Science of Design for Software-Intensive Systems Computer science and engineering needs an intellectually rigorous, analytical, teachable design process to ensure development of systems we all can live with.". Communications of the ACM 47 (8): 19–21. பன்னாட்டுத் தர தொடர் எண்:0001-0782. "Though the other components' connections to the software and their role in the overall design of the system are critical, the core consideration for a software-intensive system is the software itself, and other approaches to systematizing design have yet to solve the "software problem"—which won't be solved until software design is understood scientifically". 
  18. History of Computer Science
  19. " "Scoping the Discipline of Information Systems"[javascript:void(0); ]
  20. Rockart et al (1996) Eight imperatives for the new IT organization Sloan Management review.
  21. ACM, AIS, AITP, John T. Gorgone, et alii "Model Curriculum and Guidelines for Undergraduate Degree Programs in Information Systems", Abstraction pages 6 & 7
  22. Trcek, D., Trobec, R., Pavesic, N., & Tasic, J.F. (2007). Information Systems security and human behaviour. Behaviour & Information Technology , 26(2), 113-118.
  23. Mark S. Silver, M. Lynne Markus, Cynthia Mathis Beath (1995) The Information Technology Interaction Model: A Foundation for the MBA Core Course, MIS Quarterly , Vol. 19, No. 3, Special Issue on IS Curricula and Pedagogy (Sep., 1995), pp. 361-390
  24. 24.0 24.1 24.2 "Scoping the Discipline of Information Systems"
  25. Laudon, K.C. and Laudon, J.P. Management Information Systems, (2nd edition), Macmillan, 1988.
  26. Sloan Career Cornerstone Center (2008). Information Systems Alfred P. Sloan Foundation. Accessdate June 2, 2008.
  27. Using MIS. Kroenke. 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-713029-5.
  28. Börje Langefors (1973). Theoretical Analysis of Information Systems. Auerbach. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87769-151-7.
  29. Computer Studies. Frederick Nyawaya. 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9966-781-24-2.
  30. Galliers, R.D., Markus, M.L., & Newell, S. ( Eds) (2006). Exploring Information Systems Research Approaches. New York, NY: Routledge.
  31. Ciborra, C. ( 2002). The Labyrinths of Information: Challenging the Wisdom of Systems. Oxford, UK: Oxford University Press
  32. Hevner, March, Park & Ram (2004): Design Science in Information Systems Research MIS Quarterly, 28(1), 75-105.
  33. Avgerou, C (2000): Information systems: what sort of science is it? Omega, 28, 567-579.
  34. Benbasat, I., Zmud, R. .(2003): The identity crisis within the IS discipline: defining and communicating the discipline’s core properties, MIS Quarterly, 27(2), 183-194.
  35. Agarwal, R., Lucas, H2005): (2005): The information systems identity crisis: focusing on high- visibility and high-impact research, MIS Quarterly, 29(3), 381-398.
  36. El Sawy, O. (2003): The IS core –IX: The 3 faces of IS identity: connection, immersion, and fusion. ' Communications of AIS, 12, 588-598.
  37. Mansour, O., Ghazawneh, A. 2009) Implications of the constant changing nature of IT capabilities in the social computing era, in Molka-Danielsen, J. (Ed.): Proceedings of the 32nd Information Systems Research Seminar in Scandinavia , IRIS 32, Inclusive Design, Molde University College, Molde, Norway, August 9-12, 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-446-97133-1
  38. Orlikowski, W., Iacono, C.(2001): Research commentary: desperately seeking the “IT” in IT research—a call to theorizing about the IT artifact. Information Systems Research , 12(2), 121-134.
  39. Kock, N., Gray, P., Hoving, R., Klein, H., Myers, M., & Rockart, J. 2002). Information Systems Research Relevance Revisited: Subtle Accomplishment, Unfulfilled Promise, or Serial Hypocrisy? ' Communications of the Association for Information Systems, 8(23), 330-346.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகவல்_அமைப்புகள்&oldid=3583556" இலிருந்து மீள்விக்கப்பட்டது