மேலை இலக்கிய மன்றம்
மேலை இலக்கிய மன்றம் (Western Literature Association) [WLA] என்பது வட அமெரிக்கப் பகுதியின் பல்வகை இலக்கியம் மற்றும் பண்பாடுகளை ஆராய ஊக்குவிக்கும் அமைப்பாகும். அறிஞர்கள், மாணவர்கள், கலைஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் ஆகியோரை இவ்வமைப்பு ஒருங்கிணைத்துள்ளது.[2]
உருவாக்கம் | 1965 |
---|---|
வகை | இலாப நோக்கற்ற அமைப்பு அறிஞர்கள் சங்கம் |
தலைமையகம் | |
துறைகள் | வட அமெரிக்க மேலை இலக்கியம் மற்றும் பண்பாடுகள் |
வெளியீடு | மேலை இலக்கிய மன்றம் (WAL) |
சார்புகள் | நவீன மொழிக் கூட்டமைப்பு அமெரிக்க இலக்கிய சங்கம் இலக்கிய - சுற்றுச்சூழல் ஆய்வு மன்றம் அமெரிக்க பெண் எழுத்தாளர்களின் ஆய்வுக்கான சங்கம் பசிபிக் பண்டைய மற்றும் நவீன மொழி சங்கம்[1] |
வலைத்தளம் | www |
1992-இல் ரீனோவில் நடைபெற்ற மேலை இலக்கிய மன்ற மாநாட்டின் சிறப்பு அமர்வொன்றின்போது இலக்கிய - சுற்றுச்சூழல் ஆய்வு மன்றம் நிறுவப்பட்டது. இலக்கிய - சுற்றுச்சூழல் ஆய்வு தொடர்பான உண்மைகள், கருத்துகள், படைப்புகள் ஆகியவற்றைப் பகிர்வதே இதன் நோக்கமாகக் கூறப்பட்டது.[3][4][5]
இம்மன்றம், நெப்ராஸ்கா பல்கலைக்கழகப் பதிப்பகத்துடன் இணைந்து மேலை அமெரிக்க இலக்கியம்: இலக்கிய, பண்பாட்டு, இட ஆய்வுகளுக்கான இதழ் என்பதை வெளியிடுகிறது. மேலும் தன்னை "மேற்கு கனடா மற்றும் வடக்கு மெக்சிகோவை உள்ளடக்கிய வட அமெரிக்க மேற்கின் இலக்கிய, பண்பாட்டு ஆய்வில் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட முன்னணி இதழ்" எனக் கருதுகிறது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Affiliations". Western Literature Association. பார்க்கப்பட்ட நாள் May 8, 2020.
- ↑ "About WLA". Western Literature Association. பார்க்கப்பட்ட நாள் January 1, 2018.
- ↑ Dobie, Ann B. (2011). Theory into Practice: An Introduction to Literary Criticism. Cengage Learning. p. 241. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-49590-233-0.
- ↑ "Vision & History". ASLE Home Page. பார்க்கப்பட்ட நாள் January 1, 2018.
- ↑ "ASLE Bylaws" (PDF). ASLE Home Page. April 2016. பார்க்கப்பட்ட நாள் January 1, 2018.
- ↑ "About Western American Literature (WAL)". Western Literature Association. பார்க்கப்பட்ட நாள் January 1, 2018.
வெளி இணைப்புகள்
தொகு- Western Literature Association official website
- Western American Literature Research, hosting links to the journal Western American Literature