மேல் சியாங் மாவட்டம்

மேல் சியாங் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின் படி இதுவே இந்தியாவில் நான்காவது குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டமாகும்.

மேல் சியாங் மாவட்டம்
Upper Siang in Arunachal Pradesh (India).svg
மேல் சியாங்மாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம்
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்இங்கியோங்
பரப்பு6,188 km2 (2,389 sq mi)
மக்கட்தொகை35320 (2011)
படிப்பறிவு60.0%
பாலின விகிதம்891
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

அமைப்புதொகு

இந்த மாவட்டம் அருகில் உள்ள கிழக்கு சியாங் மாவட்டத்தில் இருந்து நவம்பர் 1999 ஆம் ஆண்டு பிரித்து உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 6118 சதுர கிலோமீட்டர் ஆகும். இதன் தலைமை நகரமாக இங்கியோங் உள்ளது. இந்த மாவட்டத்தில் தான் மேல் சியாங் நீர்மின் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டம் இரண்டு சட்டசபை தொகுதியை கொண்டுள்ளது.

மக்கள்தொகு

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான அடி மற்றும் மேம்பா இனத்தவரே அதிகம் உள்ளனர். அடி இனத்தவர் அனைவரும் டோன்யி-போலோ மதத்தையும், மேம்பா இனத்தவர் அனைவரும் திபெத்திய பெளத்த மதத்தையும் பின்பற்றுகின்றனர்.

மொழிதொகு

சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வரும் கோரோ மொழி இங்கு அதிகமாக பேசப்படுகிறது.

சுற்றுலாத் தளங்கள்தொகு

1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மௌலிங் தேசியப் பூங்கா இந்த மாவட்டத்தில் தான் உள்ளது.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்_சியாங்_மாவட்டம்&oldid=3372520" இருந்து மீள்விக்கப்பட்டது