கோரோ (மொழி)

(கோரோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோரோ (Koro) எனப்படுவது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு எல்லையில், கிழக்கு காமெங்கு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 800 முதல் 1200 பே வரையில் பேசப்படும் ஒரு திபெத்திய-பர்மிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழியாகும். இம்மொழி பேசுவோரில் சிலர் 20 வயதிற்கும் குறைந்தோர் ஆவர். இவர்கள் குரூசோ மொழி பேசும் மக்களுடன் இணைந்து வாழ்கிறார்கள். ஆனாலும், கோரோ மொழிச் சொற்கள் வேறெந்த மொழிச் சொற்களுடனும் தொடபுகள் காணப்படவில்லை. எண்கள், உடல் பாகங்கள், மற்றும் அடிப்படைச் சொற்கள் அனைத்து வேறுபட்டே காணப்படுகின்றன[1][2]. கிழக்கே பேசப்படும் தானி மொழிகளுக்கு ஓரளவு கிட்டவாக இம்மொழி இருந்தாலும், இம்மொழி திபெத்திய-பர்மிய மொழிக்குடும்பத்தில் இருந்து பிரிந்த ஒரு தனி மொழி எனக் கருதப்படுகிறது[3].

கோரோ
பிராந்தியம்அருணாச்சலப் பிரதேசம், இந்தியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
800–1200 (2010 மதிப்பீடு)  (date missing)
எழுதப்படவில்லை
மொழிக் குறியீடுகள்
ISO 639-3mis

கண்டுபிடிப்பு

தொகு


2008 ஆம் ஆண்டில் டேவிட் ஹரிசன், கிரெகரி அண்டர்சன், கணேஷ் முர்மு ஆகிய மொழியலாளர்களைக் கொண்ட குழு குரூசோ மொழிகளைப் பற்றி ஆராய்வதற்காகச் சென்ற வேளை இப்புதிய மொழியைக் கண்டுபிடித்தார்கள்[1]. இம்மொழி குரூசோ மொழிகளில் ஒன்றான அகா என அவர்களுக்கு அப்போது கூறப்பட்டிருந்தாலும், அம்மொழி வேறு எந்த மொழிகளுடனும் ஒப்பிட முடியாதளவு தனியான மொழியாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரோ_(மொழி)&oldid=3265734" இலிருந்து மீள்விக்கப்பட்டது