மேல வடகரை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் களக்காடு அருகே பத்மனேரி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஒரு எழில்மிகு கிராமம் தான் மேல வடகரை (Mela Vadakarai). இந்த ஊரின் வழியாக மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவில் தோன்றும் பச்சையாறு பாய்கிறது. இங்கிருந்து சிறிது தூரத்தில் வடக்கு பச்சையாறு அணை அமைந்துள்ளது.இந்த ஊரின் பிரதான தொழிலாக விவசாயம் திகழ்கிறது. வாழையும் நெல்லும் பிரதான பயிர்களாகும்.

கோவில்கள் தொகு
1.குலசேகர அம்மன் கோவில் ஊரின் கிழக்கு திசையில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. வருடந்தோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறும்.
2.பேச்சியம்மன் கோவில் ஊரின் தென் திசையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. வருடந்தோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறும்.
3.விநாயகர் கோவில்: இது மிகவும் பழமையான விநாயகர் கோவிலாகும்.
4.ஊய்க்காட்டு சுடலை ஆண்டவர் கோவில் ஊரின் கிழக்கே அமைந்துள்ளது. வருடந்தோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறும்.