மேவா ஆறு நேபாள நாட்டின் கோசி ஆற்றமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் தாமூர் ஆற்றின் முக்கிய துணை ஆறாகும்.[1] கிழக்கு நேபாளத்தின் தாப்லேஜங் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆறு ஹாங்ட்ருங் கிராமத்தின் அருகே தாமூர் ஆற்றில் கலக்கிறது.[2]

பல்லுயிர் பெருக்கம் தொகு

மேவா ஆற்றின் பள்ளத்தாக்கு கடல் மட்டத்திலிருந்து 700 மீ முதல் 3900 மீ வரையிலான உயரத்தில் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இந்த ஆற்றின் பள்ளத்தாக்கு வலசைபோதல் காலத்தில் பறவைகளுக்கு தங்குமிடமாகத் திகழ்கிறது.[3]

உள்கட்டமைப்புகள் தொகு

இந்த ஆறானது ஒரு பெரிய நீர்மின் உற்பத்தி மையம் மற்றும் கீழ்காணும் பல திட்டங்கள் கட்டுமான நிலையில் உள்ளன.[4][5]

  • மீ கோலா நீர்மின் திட்டம் (50 மெகாவாட்)
  • மத்திய மேவா நீர்மின் திட்டம் (49 மெகாவாட்)
  • பாலுன் கோலா நீர்மின் திட்டம் (21 மெகாவாட்), (மேவா ஆற்றின் துணை நதியில்)

மேற்கோள்கள் தொகு

  1. "Nepal landslides and floods kill at least 15". BBC News. 2015-06-11. https://www.bbc.com/news/world-asia-33090785. பார்த்த நாள்: 2021-04-23. 
  2. Thakuri, Sudeep. "Fluvial Functioning Index (FFI): Ass". Forest 39: 0. 
  3. Shrestha, Krishna K; Basnet, Khadga; Bhandari, Prabin; Gurung, Min B (2016). BIODIVERSITY ASSESSMENT OF THE MEWA RIVER VALLEY (PAPUNG CORRIDOR), KANGCHENJUNGA LANDSCAPE, TAPLEJUNG, EAST NEPAL. 
  4. "Urja Developers | Home". பார்க்கப்பட்ட நாள் 2021-04-23.
  5. "Mewa Khola". பார்க்கப்பட்ட நாள் 2021-04-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேவா_ஆறு&oldid=3815409" இலிருந்து மீள்விக்கப்பட்டது