மே முசாஃபர்

ஈராக்கியப் பெண் எழுத்தாளர்

மே முசாஃபர் (May Muzaffar) சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் பத்திரிகை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்ட ஈராக்கிய எழுத்தாளர் ஆவார். இயோர்டான் நாட்டை தளமாகக் கொண்டு இயங்கி வருகிறார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

மே முசாஃபர் 1940 ஆண்டு ஈராக்கு நாட்டின் பாக்தாத் நகரத்தில் பிறந்தார் பாக்தாத் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்றார். [1]

எழுதுதல் தொகு

முசாஃபர் கவிதைகள், சிறுகதைகள், இலக்கிய விமர்சனம் ஆகியவற்றின் எழுத்தாளராக முசாஃபர் அறியப்பட்டார். [2] அல் பாயா (1973) உட்பட ஐந்து கதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். [3] [2] இவை தவிர கூடுதலாக, லைலியாத் ("நாக்டர்ன்சு," 1994), பரிட் அல்-சார்க் ("கிழக்கில் இருந்து அஞ்சல்," 2003) மற்றும் கியாப் ("இல்லாதது," 2014) உட்பட ஐந்து கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். [1] [3] [2]

முசாஃபரின் படைப்புகள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியிடப்பட்டுள்ளன, 2000 ஆம் ஆண்டு தொகுப்பான தி பொயட்ரி ஆஃப் அரேபிய பெண்கள் ஒரு சமகாலத் தொகுப்பாகும். [3] [2] [4] எழுத்தாளர் நசீர் அல்- தின்- அல் ஆசாத்தின் வாழ்க்கை வரலாறு உட்பட புனைகதை அல்லாதவற்றையும் எழுதியுள்ளார். [2]

முசாஃபர் ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அரேபிய மொழியில் இவர் மொழிபெயர்த்ததில் டெட் இயூசு மற்றும் எடெல் அட்னானின் கவிதைகள் போன்றவை அடங்கும். பகரைன் இலக்கிய இதழான தகாஃபத்திற்கு பங்களிக்கும் ஓர் ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். [3] [2]

1970 ஆம் ஆண்டுகளில் இருந்து 1990 ஆம் ஆன்டுகள் வரையிலான முசாஃபரின் எழுத்துகளில் தணிக்கை மற்றும் பாகுபாடுகள் இருந்தபோதிலும், ஈராக்கிய பெண் எழுத்தாளர்களிடம் நிலவும் பொதுப் போக்கு என்பதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகப் பார்க்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டில், முசாஃபர் ஈராக்கை விட்டு இயோர்டானில் உள்ள அம்மானுக்கு சென்றார், அங்கு தொடர்ந்து வசித்து வருகிறார். இந்த காலகட்டத்தில் புலம்பெயர்ந்த ஈராக்கிய எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் அலையில் முசாஃபரும் ஒரு பகுதியேயாவார். [2] [5]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

மே முசாஃபர் மறைந்த ஈராக் கலைஞரான ரஃபா அல்-நசிரியை திருமணம் செய்து கொண்டார். [2] 2007 ஆம் ஆண்டு அந்தத் தொலைதூர நிலத்திலிருந்து கவிதைத் தொகுப்பு/கலை புத்தகம் உட்பட, இவர்கள் இணைந்து வெளியிட்டனர். [6] [7] 2013 ஆம் ஆண்டில் கணவர் இறந்ததிலிருந்து, முசாஃபர் அவரது பணி மற்றும் மரபுகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பணியாற்றுகிறார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Absence The Manifestations of a Recollected Presence". American University of Beirut (in ஆங்கிலம்). 2015-12-08. பார்க்கப்பட்ட நாள் 2022-03-29."Absence The Manifestations of a Recollected Presence". American University of Beirut. 2015-12-08. Retrieved 2022-03-29.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "May Muzaffar". The British Museum. பார்க்கப்பட்ட நாள் 2022-03-29.
  3. 3.0 3.1 3.2 3.3 Who's Who in Research: Cultural Studies. https://books.google.com/books?id=Z7erDwAAQBAJ&newbks=0. Who's Who in Research: Cultural Studies. Intellect Books. 2013-01-01. ISBN 978-1-78320-161-7.
  4. The Poetry of Arab Women: A Contemporary Anthology. https://books.google.com/books?id=ymlV9L2kxNoC&newbks=0. 
  5. Sairanen, Elina (2021-07-11). "Rafa Nasiri". Mathqaf (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-29.
  6. "RAFA AL-NASIRI". Station Museum of Contemporary Art (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-29.
  7. "Dia Al-Azzawi (Iraqi, b. 1939): Arsak Mowt (Your Wedding is Death)". Christies (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மே_முசாஃபர்&oldid=3409432" இலிருந்து மீள்விக்கப்பட்டது