மைக்கேல் ஒல்மெர்ட்

மைக்கேல் ஒல்மெர்ட் (Michael Olmert) (பிறப்பு 1940) மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றியவரும், எழுத்தாளரும் ஆவார். இவர் வாசிங்டன், டி. சி.யில் பிறந்தார்.[1] பிரித்தானிய இலக்கியத்தில் தனித்துவத்துடன் காணப்பட்டார். மேரிலாந்து இடைக்கால ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[1] இவர் நேசனல் ஜியோகிராபிக் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பல தொலைக்காட்சித் திரைப்படங்களை எழுதியுள்ளார். காலனித்துவ வில்லியம்ஸ்பர்க் பத்திரிக்கைக்கும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.[2]

இவர் 90க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், இரண்டு நாடகங்களும், இரண்டு புத்தகங்களும் எழுதியுள்ளார். டிஸ்கவரி தொலைக்காட்சியால் இவரது பணிக்கு 3 எம்மி விருதுகள் வழங்கப்பட்டன. முதல் முறை 2001 ஆம் ஆண்டில் அல்சொஸொரஸ் – வாக்கிங் வித் டைனோசரஸ் ஸ்பெஷல் என்பதற்கும், 2002இல் வாக்கிங் வித் பிரீஹிஸ்டோரிக் பீஸ்ட்ஸ் என்ற படைப்பிற்கும், மூன்றாவதாக 2006இல் பிபோர் த டைனோசரஸ் என்ற பணிக்கும் பெற்றுள்ளார்.[1]

ஷேக்ஸ்பியர் மற்றும் லோபஸ் மற்றும் கிரேட் கிரியேட்டிங் நேச்சர் என்ற தலைப்பில் இவர் இரண்டு நாடகங்களை எழுதியுள்ளார். மேலும் மில்டன்ஸ் டீத் அன்ட் ஓவிட்ஸ் அம்பர்லா (1996) மற்றும் த ஸ்மித்சோனியன் புக் ஆப் புக்ஸ் (1992) என்ற இரு நூல்களையும் எழுதியுள்ளார்.

2005இல் மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் சகாவாக இணைந்தார்.[1] இவர் தற்போது மேரிலாந்தில் உள்ள விட்டேனில் வசித்து வருகிறார்.

மேற்கோள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "English's Olmert Wins Third Emmy". University of Maryland: Office of University Communications. 2006-08-22 இம் மூலத்தில் இருந்து 2012-12-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121219052439/http://newsdesk.umd.edu/culture/release.cfm?ArticleID=1317. பார்த்த நாள்: 2008-08-30. 
  2. "Michael Olmert". IMDb.
  1. "English's Olmert Wins Third Emmy". University of Maryland: Office of University Communications. 2006-08-22. Retrieved 2008-08-30.
  2. http://www.imdb.com/name/nm0647431/bio
  3. http://www.emmys.com/shows/allosaurus-walking-dinosaurs-special

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_ஒல்மெர்ட்&oldid=4049564" இலிருந்து மீள்விக்கப்பட்டது