டிஸ்கவரி தொலைக்காட்சி

(Discovery Channel) டிஸ்கவரி கம்யூனிக்கேஷன்ஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமாகும். இந்த பொதுத்துறை நிறுவனம் ஜூன் 17 ஆம் தியதி 1985- ல் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. இதன் தலைமைச் செயல் அதிகாரி 'டேவிட் ஸாஸ்லாவ்'. இது ஆவணப்படங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. ஆகஸ்ட் 2013 நிலவரப்படி அமெரிக்காவில் 98,891,000 வீடுகளில் இத்தொலைக்காட்சி சேவை வழங்குகிறது.[2]

டிஸ்கவரி தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் 17 ஜூன், 1985[1]
உரிமையாளர் டிஸ்கவரி கம்யூனிகேஷன்ஸ்
பட வடிவம் 1080i (HDTV)
480i (SDTV)
நாடு அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
ஒளிபரப்பாகும் நாடுகள் உலகளாவிய
வலைத்தளம் Discovery.com
கிடைக்ககூடிய தன்மை
புவிக்குரிய
UHF colombo india
24
Uhf Chennai bangaladesh
23
செயற்கைக்கோள்
Dish TV India 23
D2H videocon
1234
12
145
Dialog telekom Dialog TV
Airtel DTH
IPTV
SLTmobitel PEOTV 47

வரலாறு

தொகு

'ஜாண் ஹெண்டிரிக்ஸ்' என்பவர் 1982 -ல் பிபிசி மற்றும் ஆலன் & கம்பெனி ஆகியோர்களின் உதவியுடன் $5 மில்லியன் முதலீட்டில் இதைத் தொடங்கினார்.[3].ஜூன் 17, 1985 - ல் தனது முதல் ஒளிபரப்பைத் தொடங்கிய போது தினமும் மாலை 3 மணி முதல் காலை 3 மணி வரை என 12 மணி நேர ஒளிபரப்பில் 156,000 வீடுகளில் இத்தொலைக்காட்சியைப் பார்த்தனர்.

வழங்கப்படும் மொழிகள்

தொகு

இத் தொலைக்காட்சி சர்வதேச அளவில் 170 நாடுகளில் 431 மில்லியன் வீடுகளுக்குச் சேவை வழங்குகிறது. ஸ்பானிஷ் , ஜெர்மன் , உருசிய மொழி , செக் , தமிழ் , ஹிந்தி , டச்சு , போர்த்துக்கீச மொழி , இத்தாலிய மொழி , நார்வே மொழி , சுவீடிய மொழி , டேனிய மொழி , பின்னிய மொழி , துருக்கிய மொழி , போலிய மொழி , அங்கேரிய மொழி , ருமேனிய மொழி , அராபிய மொழி , ஸ்லோவினியம் , ஜப்பானிய மொழி , கொரிய மொழி , மற்றும் செர்பிய மொழி ஆகிய மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.

தமிழ் ஒளிபரப்பு

தொகு

2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி தமிழில் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. தமிழகத்தில் 10 மில்லியன் வீடுகளுக்கு சேவை வழங்கிவருகிறது.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. "The 59th Academy Awards (1987) Nominees and Winners". oscars.org. Archived from the original on 2014-10-01. பார்க்கப்பட்ட நாள் 2011-07-23.
  2. Seidman, Robert (August 23, 2013). "List of How Many Homes Each Cable Networks Is In - Cable Network Coverage Estimates As Of August 2013". TV by the Numbers. Zap2it. Archived from the original on ஆகஸ்ட் 25, 2013. பார்க்கப்பட்ட நாள் August 25, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Zad, Martie (June 19, 1988). "The Discovery Channel; Science, Nature, Adventure and Animals That Bite". The Washington Post இம் மூலத்தில் இருந்து ஜூன் 14, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100614032554/http://pqasb.pqarchiver.com/washingtonpost/access/73614317.html?dids=73614317:73614317&FMT=ABS&FMTS=ABS:FT&type=current&date=Jun+19%2C+1988&author=Martie+Zad&pub=The+Washington+Post+%28pre-1997+Fulltext%29&desc=The+Discovery+Channel%3B+Science%2C+Nature%2C+Adventure+and+Animals+That+Bite&pqatl=google. 
  4. "Discovery Networks to launch 24-hour Tamil channel". The Indian Express. August 10, 2011. பார்க்கப்பட்ட நாள் September 10, 2012.
  5. <Manohar, Sandhya (July 19, 2012). "Discovery Channel Tamil now available on Dish TV". Login Media Publishing. பார்க்கப்பட்ட நாள் September 10, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிஸ்கவரி_தொலைக்காட்சி&oldid=4090906" இலிருந்து மீள்விக்கப்பட்டது