மைக்ரோசாப்ட் விசியோ
மைக்ரோசாப்ட் விசியோ விண்டோஸ் இயங்குதளங்களில் வெக்டர் முறையில் படம் வரையும் ஓர் மென்பொருள் ஆகும். இது ஸ்டாண்டர்ட் (நியம்) மற்றும் புரொபெஷனல் (தொழில்ரீதியான) பதிப்புக்களாகக் கிடைக்கின்றது. ஸ்டாண்டர்ட் மற்றும் புரொபெஷனல் ஆகிய இரண்டும் ஒரே இடைமுகத்தையே பாவிக்கின்ற பொழுதும் புரொபெஷனில் கூடுதலான டெம்லேட்டுக்கள் கிடைக்கின்றன.
மைக்ரோசாப்ட் விசியோ புரொபெஷனல் 2007 விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தில். | |
உருவாக்குனர் | மைக்ரோசாப்ட் |
---|---|
அண்மை வெளியீடு | 12.0.4518.1014 / நவம்பர் 2006 |
இயக்கு முறைமை | மைக்ரோசாப்ட் வின்டோஸ் |
மென்பொருள் வகைமை | படவரைதல் |
உரிமம் | மூடியமூலம் |
இணையத்தளம் | விசியோ |
மைக்ரோசாப்ட் விசியோ கார்ப்பரேசனை 2000ம் ஆண்டு கையகப்படுத்தியது. விசியோ 2007 ஆனது 30 நவம்பர் 2006 அன்று வெளிவந்தது.
விசியோ ஒர் தனித்துவமான மென்பொருளாக விசியோ கார்ப்பரேசனால் வெளியிடப்பட்டுவந்தது. மைக்ரோசாப்ட் கையகப்படுத்தி, ஆபிஸ் தொகுப்புடன் இணைத்துக் கொண்டபொழுதும் ஆபிஸ் மென்பொருளுடன் சேர்த்து வெளியிடவில்லை.
கோப்பு முறைகள்
தொகு- VSD - வரைபடம் (Diagram )
- VSS - வடிவம் (Shape (originally Stencil))
- VST - டெம்லேட் (Template)
- VDX
- VSX
- VTX