மைக்குரோனீசியா

(மைக்ரோனேசியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மைக்குரோனீசியா (Micronesia, [ˌmaɪkroʊˈniʒə] , என்பது ஓசியானியாவின் ஒரு பிரிவாகும். இது பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளை உள்ளடக்கியது. இதன் வடமேற்கே பிலிப்பீன்ஸ், மேற்கு மற்றும் தெற்கே இந்தோனீசியா, பப்புவா நியூ கினி, மெலனீசியா, கிழக்கே பொலினீசியா ஆகியனவும் அமைந்துள்ளன. மைக்குரோனீசியா என்னும் சொல் கிரேக்க மொழியில் μικρός (சிறிய), νῆσος (தீவு), அதாவது சிறிய தீவுகள் என்று பொருள். மைக்குரோனீசியா என்ற சொல் இப்பிரதேசத்திற்கு முதன் முதலில் 1831 ஆம் ஆண்டில் தரப்பட்டது.

மைக்குரோனீசியாவின் வரைபடம்
கரொலைன் தீவில் உள்ள பவழத்திட்டு

புவியியலும் வரலாறும்

தொகு

மேற்கு பசிபிக் பகுதியில் பரந்துள்ள நூற்றுக்கணக்கான சிறிய தீவுகளை இப்பிரதேசம் கொண்டுள்ளது. மைக்குரோனீசியாவில் தோன்றிய ஒரேயொரு இராச்சியம் யாப் என்ற தீவை மையமாகக் கொண்டிருந்தது.

அரசியல் அமைப்புப் படி மைக்குரோனீசியா முக்கியமாக எட்டு நாடுகள் மற்றும் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

பெரும்பாலான தீவுகள் ஐரோப்பியரின் ஆளுமைக்கு ஆரம்பத்திலேயே உட்பட்டிருந்தன. குவாம், வடக்கு மரியானாக்கள், கரொலைன் தீவுகள் (பின்னர் FSM, பலாவு) ஆகியன ஸ்பானியரின் காலனித்துவ தீவுகளாக ஆரம்பத்தில் இருந்தன. இவை 17ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் 1898 வரை ஸ்பானிய கிழக்கிந்தியாவின் பகுதியாக இருந்து ஸ்பானியரின் பிலிப்பீன்சின் நிர்வாகத்தில் இருந்தன. முழுமையான ஐரோப்பிய ஆளுகை 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது. அப்போது இது பின்வரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன:

முதலாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் பசிபிக் தீவுப் பகுதி பறிக்கப்பட்டது. நவூரு அவுஸ்திரேலியாவுக்குத் தரப்பட்டதூ. ஏனையவை ஜப்பானுக்கு தரப்பட்டது. இரண்டாம் உலகப் போரை அடுத்து ஜப்பானியரின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் ஐக்கிய நாடுகளின் பொறுப்பில் ஐக்கிய அமெரிக்கா தனதாக்கிக் கொண்டது.

இன்று, குவாம், வேக் தீவு, வடக்கு மரியானா தீவுகள் என்பவை தவிர்த்து அனைத்து தீவுகளும் விடுதலை அடைந்த த்ஹனி நாடுகளாக உள்ளன.

மக்கள்

தொகு

இங்குள்ள மக்கள் மைக்குரோனீசியக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்றனர். இது மெலனீசியர்கள், பிலிப்பீனியர்கள், மற்றும் பொலினீசியர்களின் கலாச்சாரங்களின் கலப்பாகும். இக்கலப்பினால் இங்கு வாழும் மக்கள் தம்மை மெலனீசியா, பொலினீசியா மற்றும் பிலிப்பீன்ஸ் இனத்தவர்களுடன் ஒத்தவர்களாகத் தம்மைக் கருதுகின்றனர். இங்குள்ள யாப் இனத்தவர்கள் வடக்கு பிலிப்பீன்சின் ஆஸ்திரனீசிய பழங்குடிகள் ஆவர்.

மொழிகள்

தொகு

பல்வேறு மைக்குரோனீசிய பழங்குடிகளின் தாய்மொழி ஆஸ்திரனீசிய மொழிக் குடும்பத்தின் ஓசியானிய உபகுழுவைச் சேர்ந்தனவாகும். ஆனாலும், இதற்கு விதிவிலக்காக மேற்கு மைக்குரோனீசியாவின் பின்வரும் இரண்டு மொழிகள் மேற்கு மலாய பொலினீசிய உபகுழுவைச் சேர்ந்தவை:

இந்த மேற்கு மலாய பொலினீசிய உபகுழு இன்று பிலிப்பீன்ஸ், மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளிலும் வழக்கிலுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்குரோனீசியா&oldid=1940176" இலிருந்து மீள்விக்கப்பட்டது