மைக் இர்வின்
மைக்கேல் ஜே. இர்வின் (Michael J. Irwin) ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவர் கேம்பிரிட்ஜ் வானியல் அளக்கை அணியின் இயக்குநர் ஆவார். இவர் சீட்டசு குறளைப் பால்வெளியையும் சகாரிட்டசு குறளை நீள்வட்டப் பால்வெளியையும் கண்டுபிடித்தவர்களில் ஒருவரும் ஆவார்.[1][2][3][4][5]
மைக் இர்வின் Mike Irwin | |
---|---|
வானியற்பியலாளர் உரோஜர் தாவீசிடம் இருந்து 2012 இல் எர்ழ்செல் பதக்கம் வாங்கும் மைக் இர்வின் | |
பிறப்பு | மைக்கேல் ஜே. இர்வின் |
பணியிடங்கள் | கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | சகிட்டாரியசு எனும் குறளை நீள்வட்டப் பால்வெளியின் கண்டுபிடிப்பு |
விருதுகள் | எர்ழ்செல் பதக்கம் (2012) |
இணையதளம் www |
ஆராய்ச்சி
தொகுஇர்வின் உலக:ளாவிய அளவில் இலக்கவியல்(எண்ம) ஒளியளக்கை, அகச்சிவப்பு அளக்கைத் தரவுகளைச் செயற்படுத்தி ஆய்வதில் முன்னணிப் பாத்திரம் வகிப்பவர் ஆவார். நடப்பில், விசுட்டாத் தரவோட்ட இலக்கவியல்(எண்ம) ஒளியளக்கை, அகச்சிவப்பு அளக்கைத் தரவுகளைச் செயற்படுத்தும் முயற்சிகள் ஐக்கிய இராச்சிய அகச்சிவப்புத் தொலைநோக்கி தரவுகளைச் செயற்படுத்தப் பய்ன்படுகிறது.[6]
தகைமைகளும் விருதுகளும்
தொகுஇவருக்கு 2012 இல் அரசு வானியல் கழகம் எர்ழ்செல் பதக்கத்தை வழங்கியது. இப்பதக்கம் நோக்கீட்டு வானியற்பியலில் தன்னிகரற்ற ஆய்வுகளை மேற்கொண்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.[7] பல நூல்களை எழுதுவதிலும் எழுத உதவுவதிலும் அறிவியல் சமுதாயத்துக்குப் பங்களிப்புகளைச் செய்துள்ளார்.[3]
கண்டுபிடித்த சிறுகோள்கள் பட்டியல்
தொகுசிறுகோள் மைய அலுவலகச் சிறுகோள் கண்டுபிடிப்புப் பட்டியலின்படி, 1990 இலிருந்து 1996 வரையில் இர்வின் பிறரோடு இணைந்து பின்வரும் எட்டுச் சிறுகோள்களைக் கண்டுபிடித்துள்ளார்.[8]
(8012) 1990 HO3 | 29 ஏப்பிரல்l 1990 | சிறுகோள்கள் பட்டியல் [A] |
(8361) 1990 JN1 | 1 மே 1990 | சிறுகோள்கள் பட்டியல் [A] |
15810 Arawn | 12 மே 1994 | சிறுகோள்கள் பட்டியல் [A] |
(16684) 1994 JQ1 | 11 மே 1994 | சிறுகோள்கள் பட்டியல் [A] |
(19299) 1996 SZ4 | 16 செப்டம்பர் 1996 | சிறுகோள்கள் பட்டியல் [B][C] |
(48443) 1990 HY5 | 29 ஏப்பிரல் 1990 | சிறுகோள்கள் பட்டியல் [A] |
(58165) 1990 HQ5 | 29 ஏப்பிரல் 1990 | சிறுகோள்கள் பட்டியல் [A] |
(73682) 1990 HU5 | 29 ஏப்பிரல் 1990 | சிறுகோள்கள் பட்டியல் [A] |
இணைக்கண்டுபிடிப்பு: A அன்னா என். சைத்கோவ் B ஆலன் பிட்சிமோன்சு C இவான் பி. வில்லியம்சு |
---|
மேற்கோள்கள்
தொகு- ↑ Levy, David H. (2000-11-22). The Scientific American book of the cosmos. Macmillan. pp. 79–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-312-25453-7. பார்க்கப்பட்ட நாள் 9 July 2011.
- ↑ Ibata, R. A.; Gerard F. Gilmore; Mike Irwin (1994). "A dwarf satellite galaxy in Sagittarius". Nature 370 (6486): 194. doi:10.1038/370194a0. Bibcode: 1994Natur.370..194I.
- ↑ 3.0 3.1 மைக் இர்வின்'s publications indexed by the Scopus bibliographic database, a service provided by எல்செவியர். (subscription required)
- ↑ Perlmutter, S.; Aldering, G.; Goldhaber, G.; Knop, R. A.; Nugent, P.; Castro, P. G.; Deustua, S.; Fabbro, S. et al. (1999). "Measurements of Ω and Λ from 42 High‐Redshift Supernovae". The Astrophysical Journal 517 (2): 565. doi:10.1086/307221. Bibcode: 1999ApJ...517..565P.
- ↑ Perlmutter, S.; Gabi, S.; Goldhaber, G.; Goobar, A.; Groom, D. E.; Hook, I. M.; Kim, A. G.; Kim, M. Y. et al. (1997). "Measurements of the Cosmological Parameters Ω and Λ from the First Seven Supernovae atz≥ 0.35". The Astrophysical Journal 483 (2): 565. doi:10.1086/304265. Bibcode: 1997ApJ...483..565P.
- ↑ "Home page for Mike Irwin @ Institute of Astronomy, Madingley Road, Cambridge". University of Cambridge. Archived from the original on 2015-02-20.
- ↑ "RAS honours leading astronomers and geophysicists". Royal Astronomical Society. 2012. Archived from the original on 2013-02-09.
- ↑ "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 2018. பார்க்கப்பட்ட நாள் 27 March 2018.
வெளி இணைப்புகள்
தொகுHome page for Mike Irwin, Institute of Astronomy, Cambridge, UK