மைக் சுமித்

மைக் சிமித் (Mike Smith) ஓர் அமெரிக்க கால்பந்தாட்ட முன்னாள் பயிற்சியாளர் ஆவார். இவர் 1959 ஆம் ஆண்டு சூன் மாதம் 13 ஆம் நாள் பிறந்தார். 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை இவர் தேசிய கால்பந்து கூட்டமைப்பின் டாம்பா வளைகுடா பக்கேனர்சு கால்பந்து அணியின் தற்காப்பு ஆட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். முன்னதாக சிமித் 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தேசிய கால்பந்து கூட்டமைப்பின் அட்லாண்டா பால்கன்சு அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும், 2003 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை யேக்சோவில்லே யாக்குவார்சு அணியினுடைய தற்காப்பு ஆட்ட ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளார். பால்கன்சு அணியின் பயிற்சியாளராக இருந்த காலத்தில் அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த பயிற்சியாளர் என்ற சிறப்பைப் பெற்றார். மேலும், அமெரிக்க தேசிய கால்பந்து கூட்டமைப்பின் 2008, 2010, 2012 ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த கால்பந்து பயிற்சியாளர் என்ற விருதும் அமெரிக்க செய்தி நிறுவனத்தால் இவருக்கு அப்போது வழங்கப்பட்டது.[1]

மைக் சுமித்
பிறப்பு13 சூன் 1959 (அகவை 65)
படித்த இடங்கள்
  • Father Lopez Catholic High School

தொடக்கக் காலம்

தொகு

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள தேட்டோனா பீச் நகரத்தில் பாதர் லோபெசு கத்தோலிக் உயர்நிலைப் பள்ளி கால்பந்து அணியில் தற்காப்பு அரண் வரிசையில் சிமித் கால்பந்து விளையாடி வளர்ந்தார். 1977 மற்றும் 1981 ஆம் ஆண்டுகளில் கிழக்கு டென்னெசி மாநில பல்கலைக்கழகத்திற்காக விளையாடி கல்லூரி காலத்தில் மேலும் நன்றாக பயிற்சி பெற்றார். விளையாட்டிலிருந்து ஓய்வை அறிவிப்பதற்கு முன்னர் 1982 ஆம் ஆண்டு கனடா கால்பந்து கூட்டமைப்பு நடத்திய கால்பந்து போட்டியில் வின்னிபெக் புளு பாம்பர்சு அணியில் தொழில்முறை கால்பந்து வீரராக சிமித் விளையாடினார்.

கால்பந்து பயிற்சியாளர்

தொகு

கல்லூரியில்

தொகு

கல்லூரி மற்றும் பல்வேறு பிரிவுநிலைப் போட்டிகளில் கல்லூரியளவு, தொழில்முறை விளையாட்டு நாட்கள் முடிந்தபின், தேசிய கால்பந்து கூட்டமைப்புக்குச் செல்வதற்கு முன்பாக சிமித் ஒரு பயிற்சியாளராக பயிற்சியளிக்க முடிவு செய்தார். 1982–1985 இல் சான் டீகோ மாநில அணி, 1986 இல் மோர் எட் மாநில அணி 1987-1998 ஆண்டுகளில் டென்னெசி டெக் அணி போன்றவை இவர் பயிற்சியாளராகப் பணியாற்றிய சில அணிகளாகும்.

பால்டிமோர் ரேவன்சு அணியில்

தொகு

தேசிய காற்பந்து கூட்டமைப்பில் சிமித் முதன்முதலாக 1999 ஆம் ஆண்டு பயிற்சியாளர் ரெக்சு ரியானின் கீழ் பால்டிமோர் ரேவன்சு அணியில் தற்காப்பு அரண் உதவியாளர்/தற்காப்பு எல்லைக்கோடுப் பயிற்சியாளராக மூன்று பருவங்களுக்கு பணியாற்றினார். பிரையன் பில்லிக் 2002 ஆம் ஆண்டு சிமித்தை தற்காப்பு அரண்நிலை தலைமைப் பயிற்சியாளராக முன்மொழிந்தார். ரே லூயிசு, பீட்டர் போல்வேர், யாமி சார்ப்பர் மற்றும் அதாலியசு தாமசு போன்ற தனிச்சிறப்பு வாய்ந்த தற்காப்பு அரண்நிலை விளையாட்டு வீரர்களை உருவாக்கியதால் ரேவன் அணி உயர்தரப் போட்டிகளில் வெற்றி வாகை சூடியது. 2003 சனவரி 21 இல் இவர் தற்காப்பு அரண் ஒருங்கிணைப்பளராக யாக்சன்வில்லே யாக்குவார்சு அணிக்காக பணியமர்த்தப்பட்டார்.

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்_சுமித்&oldid=2901596" இலிருந்து மீள்விக்கப்பட்டது