மைட் டெல்டெய்ல்
மைட் டெல்டெய்ல் (Maite Delteil) (பிறப்பு 1933, ஃபர்னெல், பிரான்ஸ்)[1], ஒரு பிரெஞ்சு ஓவியர் முக்கியமாக இந்தியாவில் இவரது ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டது[2].
வாழ்க்கை வரலாறு
தொகுமைட் டெல்டெய்ல் பிரெஞ்சு கிராமப்புறங்களில் வளர்க்கப்பட்டார். இவர் இக்கோல் நஷனேல் சுப்பீரியர் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ், அகாடமி டி லா கிராண்ட் சம்மியர் மற்றும் அகாடமி ஜூலியன் ஆகிய இடங்களில் கல்வி பயின்றார்.[2].டெல்டெயில் ஸ்பெயினிலும் கிரேக்கத்திலும் படிக்க பிரெஞ்சு அரசாங்கத்திடமிருந்தும் இன்ஸ்டிட்யூட் டி பிரான்ஸிடமிருந்தும் ஒரு உதவித்தொகையைப் பெற்றார். 1959 ஆம் ஆண்டில், அவர் பிரிக்ஸ் டி லா காசா வெலாஸ்குவேஸைப் பெற்றார்.[1].கொல்கத்தாவில் பிறந்த சக்தி பர்மன் என்ற ஓவியரைத் திருமணம் செய்த பிறகு அவர் இந்தியாவிற்கும் அதன் கலாச்சாரத்திற்கும் அறிமுகமானார். அவரது முதல் தனி கண்காட்சி கொல்கத்தாவில் 1964 ஆம் ஆண்டில் நடந்தது. 2001 முதல், டெல்டெய்ல் இந்தியாவில் மட்டுமே தனது படைப்புகளின் கண்காட்சியை பிரத்தியேகமாக காட்சிப்படுத்தினார்.[3]
டெல்டெயிலின் படைப்புகள் "அன்றாட காட்சிகளின்" ஒரு தத்ரூபமான காட்சியை உருவாக்குவதாக விவரிக்கப்பட்டுள்ளது.[4].மும்பையின் கொலாபாவில் உள்ள ஆர்ட் மியூசிங்ஸ் கேலரி என்ற கலைக்கூடத்தில் 2013 ஆம் ஆண்டில் நடந்த இவரது கண்காட்சி, "முழுமையான வட்ட வடிவ மரங்கள், அமைதியான தோற்றமுடைய மக்கள் மற்றும் அழகான பறவைகள்" ஆகியவற்றின் நுட்பமான வண்ணமயமான ஓவியங்களைக் கொண்டிருந்தது. இந்த ஓவியங்கள் “நோயுற்ற தன்மை அல்லது இருள் சூழ்ந்த நிலையல்லாத வாழ்வின் பொருளை” உணர்த்துபவையாக இருந்தன.[5]
டெல்டெயில் பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் ஜப்பான் உட்பட பல நாடுகளில் கண்காட்சிகளில் கலந்துள்ளார். இவரது படைப்புகள் இந்த நாடுகளின் பல பொது மற்றும் தனியார் கலைத்தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன.[1]
டெல்டெயிலின் வாழ்க்கை மற்றும் பணிகளைப் பற்றிய ஒரு புத்தகம் 2013 ஆம் ஆண்டில் வெளியிடப்படவிருந்தது.[5][6]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுடெல்டெய்ல் 1963 ஆம் ஆண்டில் இந்திய ஓவியர் சக்தி பர்மனை மணந்தார்.[3]. அவரது மகள் விருது பெற்ற ஓவியர் மாயா பர்மன். அவரது கணவர் மற்றும் மகளைத் தவிர, அவரது குடும்பத்தில் பிரபல கலைஞர்கள் உள்ளனர். ஜெயஸ்ரீ பர்மன், அவரது கணவரின் மருமகள் மற்றும் ஜெயஸ்ரீயின் கணவர் பரேஷ் மைட்டி. டெல்டெய்ல் அரை வாழ்நாளில் பாதியை பாரிஸிலும், மற்றொரு பாதியை இந்தியாவிலும் செலவழித்தார்.[3].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Profile: Maite Delteil, SaffronArt.com. Retrieved 2013-09-24.
- ↑ 2.0 2.1 "Art, naturally", The Asian Age, 24 January 2013. Retrieved 2013-09-24.
- ↑ 3.0 3.1 3.2 Zaira Arslan (14 January 2013) "Happiness in Art", இந்தியன் எக்சுபிரசு. Retrieved 2013-09-24.
- ↑ Kishore Singh (2 March 2013) "Enchanted Gardens Of Art: A clan of artists enjoys popularity on an unprecedented scale" பரணிடப்பட்டது 2013-09-27 at the வந்தவழி இயந்திரம், Outlook Business. Retrieved 2013-09-24.
- ↑ 5.0 5.1 Reshma S. Kulkani (5 January 2013) "Showcase: Dreamscapes", தி இந்து. Retrieved 2013-09-24.
- ↑ Phalguni Desai (4 January 2013) "Enchanted: Dramatically coloured backgrounds make up Maite Delteil’s latest exhibition" பரணிடப்பட்டது 2013-09-27 at the வந்தவழி இயந்திரம், TimeOut Mumbai. Retrieved 2013-09-24.