மைண்ட் சா

பர்மிய சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

மைண்ட் சா (Myint Zaw) ஒரு பர்மியப் பத்திரிகையாளர் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராவார்.

மைண்ட் சா
தேசியம்பர்மியர்
பணிபத்திரிகையாளர்
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது

மியான்மரின் நீளமான நதியாக கருதப்படும் ஐராவதி நதியில் கட்டுவதற்காக திட்டமிடப்பட்ட மைட்சோன் அணையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்களை முன்வைத்ததற்காக ஆசியாவிற்கான 2015 ஆம் ஆண்டிற்கான கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1][2]

இந்நீர்மின் திட்டத்தால் மில்லியன் கணக்கான மக்களுக்கு பாதிப்பும் 18,000 மக்கள் இடம்பெயரவும் கூடிய அபாயம் இருந்தது.[3] 2010 ஆம் ஆண்டு மைண்ட் சாவும் சேர்ந்து ஐராவதி ஆற்றின் ஓர் வரைபடம் என்ற படத் தொகுப்பை வெளியிட்டனர். மேலும் ஐராவதி நதியின் புகைப்படங்கள் பலவற்றை சேகரித்து பல கண்காட்சிகளையும் ஏற்பாடு செய்தனர்.[4]

அரசாங்கத்தின் கடுமையான ஆய்வுகள் மற்றும் மின்னஞ்சல் அல்லது சமூக ஊடகங்கள் போன்ற கருவிகளின் பயன்பாட்டுத் தடை போன்ற இடர்பாடுகள் அனைத்தையும் எதிர்கொண்ட மைண்ட் சா ஒரு தேசிய இயக்கத்தைத் தொடங்கி மியான்மரின் வளமான ஐராவதி ஆற்றில் மைட்சோன் அணை கட்டுவதை வெற்றிகரமாக நிறுத்தினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Baum, Davina (19 April 2015). "The Changing Face of Myanmar: Myint Zaw's Goldman Prize–Winning Photos of a Country in Transition". Afar. Archived from the original on 24 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 October 2016.
  2. "Myint Zaw wins the 2015 Goldman Environment Prize". Partners Asia. 29 April 2015. Archived from the original on 24 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 October 2016.
  3. "Earth Day Special: Goldman Prize Awarded to Burmese Photographer Who Fought Dam Project". Democracy Now!. 22 April 2015. பார்க்கப்பட்ட நாள் 23 October 2016.
  4. "Internews Partner Myint Zaw Wins Prestigious Goldman Environmental Prize". www.internews.org. Internews. Archived from the original on 24 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 October 2016.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைண்ட்_சா&oldid=3950435" இலிருந்து மீள்விக்கப்பட்டது