மைனார்க்கா கோழி

கருப்பு மைனார்க்கா கோழி (Minorca,காட்டலான்: Gallina de Menorca, எசுப்பானியம்: Menorquina) என்பது ஒரு வளர்ப்பு கோழி இனமாகும். இது ஸ்பெயினின் தென் கிழக்கே நடுநிலக் கடல் பகுதியில் உள்ள மைனாக்கா தீவைப் பிறப்பிடமாக கொண்ட கோழி இனமாகும். இது உலகின் பல நாடுகளில் நன்கு அறியப்பட்ட ஒரு காட்சிப் பறவை ஆகும். ஆனால் மைனார்கா தீவில் இந்த கோழி அரியவகை இனமாக, அருகிவரும் ஆபத்தில் உள்ளதாக கருதப்படுகிறது.

மைனார்க்கா கோழி
Minorca
மற்றொரு பெயர்
தோன்றிய நாடுஎசுப்பானியா
பரவல்உலகம்முழுவதும்
பண்புகள்
எடைஆண்: மைனார்க்கா, 2.834 கிலோ[1]:{{{3}}}
ஐக்கிய ராஜ்ஜியம் தரம்: 3.20–3.60 கிலோ
UK bantam: 960 g[2]:{{{3}}}
 பெண்: மைனார்க்கா, 2.210 kg[1]:{{{3}}}
ஐக்கிய ராஜ்ஜியம் தரம்: 2.70–3.60 கிலோ
UK bantam: 850 g[2]:{{{3}}}
முட்டை நிறம்வெள்ளை[3]:{{{3}}}
Comb typeதனித்த; ரோசு
வகைப்படுத்தல்
APAநடுநிலக்கடல் பகுதி[4]:{{{3}}}
ABAதனித்த கொண்டை, இறகுகள் இல்லா கால்கள்
ரோசு கொண்டை, இறகுகள் இல்லா கால்கள்
EEyes[5]:{{{3}}}
PCGBமென்மையான இறகு: light[6]:{{{3}}}
கோழி
காலசு காலசு டொமசுடிகசு
மைனார்க்கா கோழி

விளக்கம்

தொகு

கருப்பு மைனாக்கா கோழிகள் உடல் முழுவதும் கரு நிறத்தில் மினுமினுப்புள்ள இறகுகள் கொண்டிருக்கும். இதில் பல வகைகள் உண்டு முழுவதும் கருப்பு நிறமில்லாமல் வேறு நிறம் கலந்த இறகுகளை உடைய கோழிகளும் உண்டு. இக் கோழிகளின் கால்கள் கனத்து, குறுகியதாக இருக்கும். இதன் கொண்டை சிவப்பாக இருக்கும். இக்கோழிகள் கனத்து வலிவுடன் இருக்கும். இவை முட்டைத் தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன. இவை ஆண்டுக்கு 130 க்கும் மேற்பட்ட முட்டைகளை இடக்கூடியன. [7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 D. Villalba, A. Francesch, A. Pons, J. Bustamante, M. Espadas, V.Y. Santonja, D. Cubiló (2006). Caracterització productiva de la gallina Menorca (in Catalan). Informació tècnica: Centre de Capacitació i Experiències Agràries de Maó (Menorca) 55 (March 2006).
  2. 2.0 2.1 Victoria Roberts (2008). British poultry standards: complete specifications and judging points of all standardized breeds and varieties of poultry as compiled by the specialist breed clubs and recognised by the Poultry Club of Great Britain. Oxford: Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781405156424. p. 177–80.
  3. Races autòctones de les Illes Balears: Gallina de Menorca: Caràcters generals (in Catalan). Govern de les Illes Balears. Accessed September 2014.
  4. APA Recognized Breeds and Varieties: As of January 1, 2012. American Poultry Association. Archived 4 November 2017.
  5. Liste des races et variétés homologuée dans les pays EE (28.04.2013). Entente Européenne d’Aviculture et de Cuniculture. Archived 16 June 2013.
  6. Breed Classification. Poultry Club of Great Britain. Archived 12 June 2018.
  7. எஸ். ஏ. ராஜா (1968). கோழி வளர்ப்பு. சென்னை: ராமன் பதிப்பகம். pp. 10–11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைனார்க்கா_கோழி&oldid=3201716" இலிருந்து மீள்விக்கப்பட்டது