மை லேடீஸ் பூங்கா
மை லேடீஸ் பூங்கா (ஆங்கில மொழி: My Ladies Park) என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் பெரியமேடு புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பூங்காவாகும்.[1][2][3][4]
மை லேடீஸ் பூங்கா | |
---|---|
வகை | பூங்கா |
அமைவிடம் | பெரியமேடு, சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறு | 13°05′18″N 80°16′20″E / 13.0884°N 80.2723°E |
மேலாண்மை | பெருநகர சென்னை மாநகராட்சி |
வருகையாளர்கள் | 900 |
நிலை | பயன்பாட்டிலுள்ளது |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 58 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மை லேடீஸ் பூங்காவின் புவியியல் ஆள்கூறுகள், 13°05′18″N 80°16′20″E / 13.0884°N 80.2723°E ஆகும்.
மன அழுத்தத்திற்கு அருமருந்தாகத் திகழும் யோகா இலவசமாகக் கற்றுக் கொடுக்கப்படும் பூங்காக்களில் மை லேடீஸ் பூங்காவும் ஒன்றாகும்.[5] இப்பூங்காவுடன் இணைந்த நீச்சல் குளம் ஒன்றும் உள்ளது.[6]
பெருநகர சென்னை மாநகராட்சி பராமரிப்பில் இயங்கி வரும் 525 பூங்காக்களில் மை லேடீஸ் பூங்காவும் ஒன்றாகும்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "சீரழிந்து வரும் மை லேடீஸ் பூங்கா பார்வையாளர்கள் குற்றச்சாட்டு - Dinamalar Tamil News". Dinamalar. 2023-06-05. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
- ↑ தினத்தந்தி (2018-12-22). "மாணவர்களை குறி வைத்து 'மை லேடீஸ் பூங்காவில்' செல்போன்கள் பறிப்பு சமூக விரோத கும்பல் அட்டூழியம்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
- ↑ "பூங்கா புனரமைப்பில் மெத்தனம் மாநகராட்சி அதிகாரிகள் பாராமுகம் - Dinamalar Tamil News". Dinamalar. 2023-06-24. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
- ↑ "சென்னை மாநகராட்சி நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை!". Hindu Tamil Thisai. 2023-04-05. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
- ↑ "சர்வதேச யோகா தினம்". Hindu Tamil Thisai. 2023-06-21. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
- ↑ "மை லேடீஸ் பூங்கா, நீச்சல் குளம் ஜூலையில் திறக்க திட்டம் - Dinamalar Tamil News". Dinamalar. 2023-06-12. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
- ↑ "Welcome to Greater Chennai Corporation". www.chennaicorporation.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.