மொண்டிவீடியோ மாரு
மொண்டிவீடியோ மாரு (Montevideo Maru, யப்பானிய: もんてびでお丸) என்பது சப்பானியப் பேரரசின் ஒரு வணிகக் கப்பல் ஆகும். 1926 ஆம் ஆண்டில் சேவைக்கு விடப்பட்ட இக்கப்பல், இரண்டாம் உலகப் போரின் போது இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது. இக்கப்பல் ஆத்திரேலியப் போர்க் கைதிகளையும் பொதுமக்களையும் நியூ கினியின் ஆத்திரேலியப் பகுதியில் இருந்து ஆய்னானுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, 1942 சூலை 1 இல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலான இசுட்டர்ஜன் இதனை 1,054 பேருடன் மூழ்கடித்தது.[2] இந்த மூழ்கடிப்பு ஆத்திரேலியாவின் வரலாற்றில் மிக மோசமான கடல் பேரழிவாகக் கருதப்படுகிறது. மொண்டிவீடியோ மாருவின் சிதைவுகள் 2023 ஏப்ரல் 18 அன்று கண்டுபிடிக்கப்பட்டது.[3]
மொண்டேவீடியோ மாரு, அண். 1941
| |
கப்பல் (சப்பான்) | |
---|---|
பெயர்: | MV மொண்டேவீடியோ மாரு |
உரிமையாளர்: | ஒசாக்கா சோசன் கைசா (OSK) |
கட்டியோர்: | மிட்சுபிசி சோசன் கக்கோக்கி கைசா, நாகசாகி |
துவக்கம்: | 9 செப்டம்பர் 1925 |
வெளியீடு: | 15 ஏப்ரல் 1926 |
நிறைவு: | 14 ஆகத்து 1926 |
பணிக்காலம்: | ஆகத்து 1926 |
பணிவிலக்கம்: | 1 சூலை 1942 |
விதி: | இசுட்டர்ஜன் என்ற அமெரிக்க நீர்மூழ்கியினால் மூழ்கடிக்கப்பட்டது, 1 சூலை 1942 |
பொது இயல்புகள் [1] | |
வகுப்பும் வகையும்: | சண்டோசு மாரு |
வகை: | குளிரூட்டப்பட்ட பயணிகள்/சரக்குக் கப்பல் |
நிறை: | 7,267 GRT |
நீளம்: | 130 மீ |
வளை: | 17 மீ |
Draught: | 11 மீ |
உந்தல்: |
|
விரைவு: | 14.5 நொட் (26.9 கிமீ/ம) |
இரண்டாம் உலகப் போரில் சேவை
தொகுமொண்டிவீடியோ மாரு 1942 பெப்ரவரி 6 முதல் 16 வரை மக்காசார், சுலாவெசி தாக்குதலில் பங்குபற்றியது. இது மூழ்குவதற்கு முன் பல போக்குவரத்து பணிகளை முடித்திருந்தது.[4]
மூழ்கடிப்பு
தொகு1942 சூன் 22 அன்று, பப்புவா நியூ கினியின் ராபால் நகரம் சப்பானியரிடம் வீழ்ச்சியடைந்த கிட்டத்தட்ட 4 மாதங்களில், சப்பானியர்களிடம் பிடிபட்டிருந்த 1,054 கைதிகளை (பெரும்பாலானோர் ஆத்திரேலியர், சிலர் நியூசிலாந்தர்கள்) ராபால் துறைமுகத்தில் இருந்து மொண்டிவீடியோ மாரு கப்பலில் அனுப்பப்பட்டனர்.[5] சீனத் தீவான ஆய்னானிற்கு பாதுகாப்பில்லாமல் சென்று கொண்டிருந்த கப்பலை 1942 சூன் 30 அன்று பிலிப்பீன்சின் வடக்குக் கடற்கரைக்கு அருகில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலான இசுட்டர்ச்சன் அவதானித்தது.[6]
நீர்மூழ்கி அதனைப் பின்தொடர்ந்தும், கப்பல் 31 கிமீ/ம வேகத்தில் பயணித்ததால், சுட முடியவில்லை.[6] மொண்டிவீடியோ மாரு நள்ளிரவில் ஏறத்தாழ 22 கிமீ/ம வேகத்தை குறைத்தது.[6] நேச நாட்டுப் போர்க் கைதிகளையும் பொதுமக்களையும் ஏற்றிச் செல்லும் கப்பல் என்பதை அறியாத நீர்மூழ்கி 1942 சூலை 1 அன்று அதிகாலையில் கப்பலை நோக்கி நான்கு நீர்மூழ்கிக் குண்டுகளைச் சுட்டது. இவற்றில் குறைந்தது ஒன்று இலக்கைத் தாக்கியது, இதனால் கப்பல் 11 நிமிடங்கள் கழித்து கடலில் மூழ்கியது.[7]
இந்த மூழ்கடிப்பு ஆத்திரேலியாவின் வரலாற்றில் மிக மோசமான கடல் பேரழிவாகக் கருதப்படுகிறது. 2012 இல் சப்பானிய அரசாங்கத்தால் கிடைக்கப்பெற்ற பெயரளவிலான பட்டியல் கப்பலில் மொத்தம் 1,054 கைதிகள் (178 ஆணையிடப்படாத அதிகாரிகள், 667 வீரர்கள், 209 பொதுமக்கள்) இறந்ததாக வெளிப்படுத்தியது.[8] இறந்தவர்களில் நோர்வே வணிகக் கப்பலான எர்சுட்டைனைச் சேர்ந்த 35 மாலுமிகளும் அடங்குவர். கப்பலின் 88 மொத்தப் பணியாளர்களில் 20 சப்பானியர்கள் உயிர் பிழைத்தனர்.[9]
சிதைவு கண்டுபிடிப்பு
தொகு2010 சனவரி பிற்பகுதியில், ஆத்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் இசுட்டுவர்ட் ராபர்ட், அப்போதைய ஆத்திரேலியப் பிரதமர் கெவின் ரட் இடம், காணாமல் போன கப்பலைத் தேடுவதை ஆதரிக்குமாறு அழைப்பு விடுத்தார்.[10]
2023 ஏப்ரல் 18 அன்று, நீருக்கடியில் தேடுதலில் வல்லவரான இடச்சு நிபுணர் ஃபுக்ரோவின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, லூசோனின் வடமேற்குக் கடற்கரையில் தென்சீனக் கடலில் 4,000 மீ (13,000 அடி) ஆழத்தில் மொண்டிவீடியோ மாருவின் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டது.[11] ஆத்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீசி, "நீண்ட விழிப்புடன் இருக்கும் அன்பானவர்களுக்கு இந்தச் செய்தி ஆறுதல் அளிக்கும்" என்று நம்புவதாகக் கூறினார்.[12][13]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Montevideo Maru 1926–1942 OSK Lines". Derby Sulzers. Archived from the original on 28 April 2014. பார்க்கப்பட்ட நாள் 22 November 2012.
- ↑ Australia, National Archives of. "Homepage". montevideomaru.naa.gov.au (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-27.
- ↑ Morris-Grant, Brianna (22 April 2023). "SS Montevideo Maru shipwreck found 81 years after Australia's worst maritime disaster". Australia Broadcasting Corporation News. Archived from the original on 22 April 2023. பார்க்கப்பட்ட நாள் 22 April 2023.
- ↑ "Japanese Transports". Combinedfleet.com. Archived from the original on 6 May 2022. பார்க்கப்பட்ட நாள் 7 January 2023.
- ↑ "Rediscovered WWII ship wreck: New Zealanders may have been on board". RNZ (in New Zealand English). 2023-04-23. Archived from the original on 25 April 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-04-25.
- ↑ 6.0 6.1 6.2 Rod Miller (2003). "The Montevideo Maru". montevideomaru.info. Archived from the original on 27 January 2009. பார்க்கப்பட்ட நாள் 2008-09-25.
- ↑ Mark Simkin (6 October 2003). "Silence broken on Australia's worst maritime disaster". The 7.30 Report. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2008-09-25.
- ↑ "Montevideo Maru – About the List". National Archives of Australia. Archived from the original on 16 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2012-12-31.
- ↑ "Montevideo Maru – The sinking of the Montevideo Maru, 1 July 1942". Australian War Memorial. Archived from the original on 21 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2012-12-31.
- ↑ Robert, Stuart. "Now for Montevideo Maru". ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். Archived from the original on 1 April 2011. பார்க்கப்பட்ட நாள் 29 January 2010.
- ↑ Law, Heather (21 April 2023). "World War II shipwreck of SS Montevideo Maru, which sank with over 1,000 POWs, found in South China Sea". CNN. Archived from the original on 22 April 2023. பார்க்கப்பட்ட நாள் 22 April 2023.
- ↑ Galloway, Anthony (22 April 2023). "'Measure of comfort': Wreckage from Australia's worst maritime disaster found". Sydney Morning Herald. Archived from the original on 22 April 2023. பார்க்கப்பட்ட நாள் 22 April 2023.
- ↑ Ives, Mark (22 April 2023). "Japanese Ship, Torpedoed in 1942 With P.O.W.s Aboard, Is Found". The New York Times. Archived from the original on 22 April 2023. பார்க்கப்பட்ட நாள் 22 April 2023.
வெளி இணைப்புகள்
தொகு- People of the Plaque, a tribute to civilians from New Ireland who died in the war
- A Story of the Salvos, Compass, ABC television, 20 April 2008
- Lark Force, part of the Australian Army garrison on Rabaul
- "Montevideo Maru remembered 70 years on" – Australian Broadcasting Corporation