மொய்ராங் சாய்

பாரம்பரிய மணிப்புரி கலை

மொய்ராங் சாய் (Moirang Sai) என்பது கம்பா தோய்பியின் கதையை விவரிக்கும் ஒரு பாரம்பரிய மணிப்புரி இசை நிகழ்த்து கலை வடிவமாகும். நிகழ்ச்சி 120 மணி நேரத்திற்கும் அதிகமாக நடத்தபடுகிறது.[a][1][2][3]

1950கள் மற்றும் 1980களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், மொய்ராங் சாய் சமூகக் கூட்டங்கள் மற்றும் திருமணங்களில் பொழுதுபோக்குக்காக பிரபலமாக நிகழ்த்தப்பட்டது. பாரம்பரிய மணிப்புரி பாடகர் இமா லங்காதேல் தோய்னு கலை வடிவத்தின் நவீன கால முன்னோடியாகவும் கருதப்படுகிறார். அவர் கலை வடிவத்தை ஒரு நாடகப் பெண்ணின் இசை நிகழ்ச்சியாக உருவாக்கினார். தூய மெய்டேய் ஜகோய் நடனம் மற்றும் பாடும் வகைகளைக் கொண்டிருந்தார். 1960 களில் இருந்து 1990 களில் வரை ஒரு கலைஞராக அவர் புகழ் பெற்றார்.[4][5]

ஆபத்து

தொகு

1990கள் மற்றும் 2000களில், மேற்கத்திய ராக் இசையின் அதிகரித்துவரும் புகழ் மற்றும் பார்வையாளர்களிடையே பிரதான இந்தி மற்றும் பெங்காலி இசையின் காரணமாக மொய்ராங் சாய் உண்மையிலேயே ஆபத்தில் இருந்தது. மேலும், மக்கள் தங்கள் ஆர்வத்தை பாரம்பரிய கலை வடிவங்களிலிருந்து நேரடி நாட்டுப்புற நாடகத்தின் நவீன கலைகளுக்கு மாற்றத் தொடங்கினர். 2000களின் பிற்பகுதியில், 2 அல்லது 3 கலைஞர்கள் மட்டுமே அப்போது கலையை தீவிரமாக நிகழ்த்திக் கொண்டிருந்தனர். பின்னர், கலை வடிவத்தின் மறுமலர்ச்சி குறித்து பொதுமக்களிடையே ஆர்வம் குறைந்து போனது.[4][6]

புத்துயிர்

தொகு

2010 களில், இமா தொய்னு என்ற பாடகர் ஒரு சில மாணவர்களை அழிந்துவரும் இக்கலை வடிவத்தைக் கற்றுக்கொள்ளச் செய்தார். அதிர்ஷ்டவசமாக, கலைஞர்களின் ஒரு சிறிய குழு கிட்டத்தட்ட அழிந்துபோன மொய்ராங் சாய் கலை வடிவத்தை மொத்த அழிவிலிருந்து காப்பாற்ற மீண்டும் கற்றுக்கொள்கிறது. சமீபத்தில், பாரம்பரிய மணிப்புரி நாட்டுப்புற பாடகரும் "இலாய்கு" கலைஞருமான மங்கா மயங்க்லம்பம் என்பவரின் கடின உழைப்பின் காரணமாக மொய்ராங் சாய் சிறப்பாக புத்துயிர் பெற்று வருகிறாது. மங்கா கிட்டத்தட்ட அழிந்துபோன கலை வடிவத்தை தற்போதைய இளைஞர்களிடையே மீண்டும் பிரபலப்படுத்துகிறார். [4][5][6]

அக்டோபர் 4,2020 அன்று, இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் ஆதரவின் கீழ், நொங்போக் இங்கூபா கலாச்சார அகாதமி, எய்ரிபோக் டாப் சிங்தா ஒயினம்தோங் லெய்ராக், யெயிரிபோக் டாப் லாய் சமூக மண்டபத்தில் 'மொய்ராங்க சாய்' பாரம்பரிய கலையைப் பாதுகாக்கவும் பிரபலப்படுத்தவும் 'மொய்ராங் சாய்' குறித்த ஒரு பட்டறை மற்றும் தயாரிப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.[7][8]

குறிப்புகள்

தொகு
  1. நிகழ்ச்சியின் கால அளவு பல காரணிகளின் அடிப்படையில் மாறுபடும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Mangka sings Moirang Sai with Laihui Ensemble – Manipur's Traditional Folk Music & Dance" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-29.
  2. Shukla, Vandana (15 December 2017). "Fighting all odds and jeers, a 21-year-old woman is reviving nearly-extinct Manipuri folk songs". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-29.
  3. "Glimpses of dying art form earn kudos". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-29.
  4. 4.0 4.1 4.2 "Mangka sings Moirang Sai with Laihui Ensemble – Manipur's Traditional Folk Music & Dance" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-29.
  5. 5.0 5.1 Shukla, Vandana (15 December 2017). "Fighting all odds and jeers, a 21-year-old woman is reviving nearly-extinct Manipuri folk songs". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-29.
  6. 6.0 6.1 "Glimpses of dying art form earn kudos". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-29.
  7. "Workshop cum production on 'Moirang Sai' held". www.thesangaiexpress.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-29.
  8. "Workshop / production on 'Moirang Sai' held : 05th oct20 ~ E-Pao! Headlines". e-pao.net. பார்க்கப்பட்ட நாள் 2022-12-29.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொய்ராங்_சாய்&oldid=4139113" இலிருந்து மீள்விக்கப்பட்டது