கம்பா தோய்பி

மேதி மொழி காவியக் கவிதை

கம்பா தோய்பி (Khamba Thoibi) என்பது பழங்கால இராச்சியமான மொய்ராங்கில் குமான் இளவரசர் கம்பா என்பவனுக்கும், மொய்ராங் இளவரசி தோய்பி ஆகியோருக்கு இடையிலான 12 ஆம் நூற்றாண்டின் காதல் கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு புகழ்பெற்ற மேதி மொழி காவியக் கவிதையாகும். [1] இந்த கவிதையை சாமுரோவின் புகழ்பெற்ற கவிஞர் இஜாம் அங்கங்கால் என்பவர் இயற்றியுள்ளார். இது மணிப்பூரியின் தேசிய காவியமாக கருதப்படுகிறது. [2] [3] [4] 34,000 வசனங்களைக் கொண்ட இக்கவிதைத் தொகுப்பு மேதி இலக்கியத்தில் உள்ள அனைத்து காவியக் கவிதைகளிலும் மிகப் பெரியதாகும். இது, இராமாயணத்தை விடவும் பெரியது.

கம்பா தோய்பி
நூலாசிரியர்இஜாம் அங்கங்கால்
மொழிபெயர்ப்பாளர்விமல் ரெய்னா
நாடுமணிப்பூர் இராச்சியம்
மொழிமணிப்புரியம்
பொருண்மைமேதி இலக்கியம்
வகைகாவிய கவிதை
வெளியிடப்பட்ட நாள்
1940
குமான் இராச்சியத்தின் இளவரசர் கம்பா என்பவனுக்கும், மொய்ராங் இளவரசி தோய்பி ஆகியோரின் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டது காவிய சரித்திரம்

இக்காவியம், மணிப்பூரின் இரண்டு பெரிய கலாச்சார வளங்களான "மொய்ராங் சயோன்" (மொய்ராங் அவதாரங்கள்) மற்றும் "மொய்ராங் கங்லிரோல்" (பண்டைய மொய்ராங் புனைவுகள்) ஆகியவற்றின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும்.

மேதி கலாச்சாரத்தின் ஒரு நாட்டுப்புற நடனம், "கம்பா தோய்பி" என்ற தலைப்பில், பண்டைய மொய்ராங்கின் எபுடோ தங்ஜிங் பிரபுவின் இபுதோ தங்ஜிங் கோயிலில் கம்பாவும், தோய்பி ஆகியோரால் முதன்முதலில் நிகழ்த்தட்டது என்று நம்பப்படுகிறது. [5] [6]

இதனை சாமுரோவின் கவிஞர் இஜாம் அங்கங்கால் என்பவர் இயற்றியுள்ளார். [7] காவியக் கவிதையை உருவாக்கும் முன், பண்டைய இராச்சியமான மொய்ராங்கில் நாட்டுப்புறப் பாடல்கள் மூலமும், வாய்வழி நாட்டுப்புறக் கதைகள் வடிவிலும் சொல்லப்பட்டது. [8] [9] இருப்பினும், மேதி இலக்கியத்திற்கு அங்கங்கால் கவிதையை எழுதிய பின்னர், இந்த கதை மணிப்பூர் மாநிலம் வழியாக பிரபலப்படுத்தப்பட்டது.

நடன வடிவம்

தொகு

கம்பா தோய்பி ஜாகோய் என்பது மணிப்பூரின் பண்டைய இராச்சியமான மொய்ராங்கின் நாட்டுப்புற நடனமாகும். இந்த நடனம் முதன்முதலில் மணிப்பூரி புராணங்களில் புகழ்பெற்ற நாயகனான கம்பாவும், அன்றைய மொய்ராங்கின் இளவரசியான அவனது காதலி தோய்பியும் பண்டைய இறைவன் இபுதோ தங்ஜிங் கோவிலின் வளாகத்தில் நிகழ்த்தப்பட்டதாக நம்பப்பட்டது. [10] [11] [12] மணிப்பூரில் உள்ள இலாய் அரோபாவின் மத விழாவின் போது இந்த நடனம் இன்னும் நிகழ்த்தப்படுகிறது. [13] [ மேற்கோள் தேவை ]

மேலும் காண்க

தொகு

மேலும் படிக்க

தொகு

நூலியல்

தொகு

உசாத்துணை

தொகு
  1. http://www.e-pao.net/epSubPageExtractor.asp?src=reviews.books.Khamba_Thoibi_and_Poems_on_Manipur_Book_Review_By_James_Oinam
  2. https://books.google.co.in/books?id=m1R2Pa3f7r0C&pg=PA258&pq=khamba+thoibi&hl=en&sa=X&ved=0ahUKEwjapaXNgpPrAhVOzjgGHZqUCQYQ6AElGjAD#v=onepage&q=khamba℅20thoibi&f=false
  3. http://www.e-pao.net/GP.asp?src=Snipp12.15.151205.dec05
  4. https://archive.org/details/in.ernet.dli.2015.466278/mode/2up
  5. https://www.flickr.com/photos/surjakanta/8248320669
  6. http://www.indianfolkdances.com/khamba-thoibi-folk-dance-of-manipur.html
  7. http://www.e-pao.net/GP.asp?src=Snipp12.15.151205.dec05
  8. https://archive.org/stream/in.ernet.dli.2015.460207/2015.460207.Khamba-Thoibi_djvu.txt
  9. http://e-pao.net/epSubPageExtractor.asp?src=reviews.books.Khamba_Thoibi_and_Poems_on_Manipur_Book_Review_By_James_Oinam
  10. https://www.flickr.com/photos/surjakanta/8248320669
  11. http://www.indianfolkdances.com/khamba-thoibi-folk-dance-of-manipur.html
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-11-05. பார்க்கப்பட்ட நாள் 2020-09-17.
  13. Ayyappapanicker, K.; Sahitya Akademi (1997). Medieval Indian Literature: An Anthology. Sahitya Akademi. p. 330. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-0365-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பா_தோய்பி&oldid=3696032" இலிருந்து மீள்விக்கப்பட்டது