மொரகஹகந்த நீர்த்தேக்கம்

இலங்கை அணை

மொரகஹகந்த நீர்த்தேக்கம் (ஆங்கில மொழி: Moragahakanda_Dam, சிங்களம்: කුලසිංහ ජලාශය) அதிகாரப்பூர்வமாக குலசிங்கே நீர்த்தேக்கம் என்பது இலங்கை மாத்தளை மாவட்டம் அம்பன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கமாகும்.[1] மொரகஹகந்த - களுகங்கை நீர்த்தேக்க செயற்றிட்டத்தின் கீழ் இந்த நீர்த்தேக்கப் பணிகள் 25 ஜனவரி 2007 அன்று தொடங்கப்பட்டன.[2] 2017 ஜனவரி மாதம் முதல்முறையாக நீர் திறக்கப்பட்டது.[3] மகாவலி அதிகாரசபையின் திட்டங்களிலேயே பாரிய திட்டம் இதுவாகும்.[4] இதனுடன் களுகங்கை நீர்த்தேக்கமும் கட்டப்பட்டு மின்சாரம் மற்றும் பாசன வசதிக்குப் பயன்படுகிறது. இரண்டும் சேர்த்து சுமார் 10 km (6.2 mi) பரப்பளவு கொண்டதாகும்.[5] மொத்த மதிப்பு சுமார் ரூ. 48.145 பில்லியன் (சுமார் $370 மில்லியன்) ஆகும் இதனை எஸ்.எம்.இ.சி ஹோல்டிங்ஸ் மற்றும் சினோஹைட்ரோ நிறுவனங்கள் இணைந்து கட்டுமானத்தில் ஈடுபட்டன.[6][7][8] 2019 ஜூலை 23 அன் கருங்கல் புத்தர் சிலையினை மைத்திரிபால விரிசேன திறந்து வைத்தார்.[9]

மொரகஹகந்த நீர்த்தேக்கம்
மொரகஹகந்த அணையின் .
மொரகஹகந்த நீர்த்தேக்கம் is located in இலங்கை
மொரகஹகந்த நீர்த்தேக்கம்
Location of மொரகஹகந்த நீர்த்தேக்கம் in இலங்கை
அதிகாரபூர்வ பெயர்மொரகஹகந்த நீர்த்தேக்கம்
நாடுஇலங்கை
அமைவிடம்Elahera, வடக்கு மத்திய மாகாணம்
புவியியல் ஆள்கூற்று07°41′56″N 80°46′12″E / 7.69889°N 80.77000°E / 7.69889; 80.77000
நோக்கம்மின் ஆற்றல்
நிலைசெயல்பாட்டில்
கட்டத் தொடங்கியது25 சனவரி 2007 (2007-01-25)
திறந்தது8 சனவரி 2018 (2018-01-08)
உரிமையாளர்(கள்)மகாவலி அதிகாரசபை
அணையும் வழிகாலும்
வகைபுவியீர்ப்பு அணை
தடுக்கப்படும் ஆறுஅம்பன் ஆறு
உயரம் (அடித்தளம்)65 m (213 அடி)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்குலசிங்கே நீர்த்தேக்கம்
Kulasinghe Reservoir
කුලසිංහ ජලාශය
செயலில் உள்ள கொள் அளவு521,000,000 m3 (1.84×1010 cu ft)
இயல்பான ஏற்றம்185 m (607 அடி)
ஆள்கூறுகள்07°41′59″N 80°46′11″E / 7.69972°N 80.76972°E / 7.69972; 80.76972
இயக்குனர்(கள்)இலங்கை மின்சார சபை
நிறுவப்பட்ட திறன்25 மெகாவாட்

கொங்கீரிட், மண், கருங்கற்கள் நிரம்பிய மூன்றும் கொண்ட ஒரே இலங்கையின் அணை இதுவாகும். மேலும் துரித மஹாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டதாகும்[10] மறைந்த கலாநிதி குலசிங்கே நினைவாக 23 ஜூலை 2018 அன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நீர்த்தேக்கத்திற்கு அதிகாரப்பூர்வமாக குலசிங்கே ரிசர்வாயர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தேசபந்து கலாநிதி ஏ.என்.எஸ். குலசிங்கே என்பவர் இலங்கையில் கட்டடப் பொறியாளராவார். நாடு முழுவதும் பல நீர் மேலாண்மைத் திட்டங்களைக் கட்டியவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.[11]

அணை மற்றும் நீர்த்தேக்கம்

தொகு

மொரகஹகந்த அணையானது 65 m (213 அடி) உயர் ஈர்ப்பு அணையாகும். இந்த அணை 521,000,000 m3 (1.84×1010 cu ft) நீர்த்தேக்கத் திறனைக் கொண்டுள்ளது, தரப் பரப்பிலிருந்து, 185 m (607 அடி) மேற்பரப்பு உயரத்தில் .

முக்கியப் பயன்பாடு

தொகு
 
பிப்ரவரி 2017 இல் மொராகஹகந்த நீர்த்தேகம்.

நீர்ப்பாசனம்

தொகு

இந்தத் திட்டத்தின் கீழ் வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களைச் சேர்த்து இரண்டாயிரம் குளங்களுக்கு நீரை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளனர்.[10] இதன்மூலம் 15 ஆயிரம் குடும்பங்களுக்குப் பயனளிக்கும் வகையில் மூன்று மாகாணங்களிலும் மூன்று இலட்சம் ஏக்கர் காணியில் பயிர் செய்ய இயலும் என்று எஸ்எல்பிசி செய்தி கூறுகிறது.[10] இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் நீர் மின்வலு உற்பத்தி செய்யப்பட்டு ஆண்டு தோறும் தேசிய மின்சார வலைப் பின்னலில் 25 மெகா வோட்ஸ் மின்வலு சேர்க்கப்படுகிறது. இதனால் ஆண்டிற்கு சுமார் 33 கோடி அளவிற்கு எரிபொருள் செலவைக் குறைக்கும் என்றும், இதன் நன்னீர் மூலம் மீன் வளர்ப்பு மேற்கொண்டு கூடுதலாக 22 கோடி அளவிற்கு வருமான அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[10]

மொராகஹகந்த மற்றும் களுகங்கை நீர்த் தேக்கங்களிலிருந்து வரும் நீரனது முதன்மையாகக் குறைந்தபட்சம் 81,422 ha (814.2 km2) பரப்பளவில் விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அரிசி உற்பத்தி 81% அல்லது 109,000 t (240,000,000 lb) அதிகரிக்கும் மேலும் ஆண்டுக்கு $1.67 மில்லியன் மதிப்பிற்கு பலன் கிடைக்கிறது.

உள்நாட்டு மீன்பிடித்தல்

தொகு

இந்த நீர்த்தேக்கத்தில் உள்நாட்டு மீன்பிடித்தலுக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கினால், ஆண்டுதோறும் சுமார் 4,700 t (10,400,000 lb) அல்லது $1.67 மில்லியன் அளவிற்கு வருவாய் ஈட்டக்கூடிய வாய்ப்புள்ளது.

தண்ணீர் விநியோகம்

தொகு

களுகங்கை அணையின் நீர்த்தேக்கத்துடன், 64,000,000 m3 (2.3×109 cu ft) என்ற அளவில் நீரின் அளவு அதிகரிப்பால் 2032 வாக்கில் மாத்தளை, அனுராதபுரம், திருகோணமலை, மற்றும் பொலன்னறுவை உட்பட பகுதிகளுக்குக் குடிநீர் மற்றும் தொழில்துறை நீர் விநியோகத்திற்கு முழுமையடையும்.[12]

மின் உற்பத்தி

தொகு

மொராகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் நீரைக் கொண்டு சுமார் 25-மெகா வாட் மின் உற்பத்தி செய்ய மின் நிலையம் கட்டப்பட்டுவருகிறது. பாரம்பரிய புதைபடிவ எரிபொருளுக்கு மாற்றாக இந்த நீர்மின் உற்பத்தி ஆண்டுதோறும் $ 2.49 பில்லியன் அளவிற்குச் சேமிக்கக்கூடும்.[12] $382 மில்லியன் செலவில் கட்டப்படும் இந்த மின் நிலையம் 22% இ. ஐ. ஆர். ஆர். எனப்படும் பொருளாதார உள்நாட்டு லாப சதவிதம் கொண்டிருக்கும்.[13]

சாலைகள் மற்றும் பாலங்கள்

தொகு

அணை மற்றும் நீர்த்தேக்கத்தைக் கட்டுவதன் மூலம் பல புதிய துணை சாலைகளும் பிரதான சாலைகளை மாற்றியமைத்தலும் நடந்துள்ளன. அத்துடன் 308 மில்லியன் ரூபாய்(இலங்கை) மதிப்புடைய 300 m (984 அடி) நீளமான மொராகஹகந்த பாலமும் கட்டப்பட்டுள்ளது.[14]

மேற்கோள்கள்

தொகு
  1. "President proposes to name Moragahakanda after Kulasinghe". Daily News. பார்க்கப்பட்ட நாள் 3 April 2018.
  2. "Work on Moragahakanda Kalu Ganga Project progressing satisfactorily". ITN News. 6 February 2013. http://www.itnnews.lk/?p=8859. பார்த்த நாள்: 14 January 2014. 
  3. "Happiest day - says the President as maiden waters of the Moragahakanda Reservoir flow - Sri Lanka News" (in en-US). Sri Lanka News - Newsfirst | Breaking News and Latest News provider | Political | Sports | International | Business. 2017-01-11 இம் மூலத்தில் இருந்து 2017-01-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170126052825/http://newsfirst.lk/english/2017/01/159421/159421. 
  4. "New vistas in development". http://dailynews.lk/2016/07/25/features/88436. 
  5. "Moragahakanda and Kaluganga Development Project" (PDF). Ministry of Finance and Planning. p. 2. Archived from the original (PDF) on 16 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2014.
  6. "SMEC Wins Major Project with World's Largest Hydroelectric Company". SMEC Holdings. 23 October 2012. Archived from the original on 16 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 14 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Moragahakanda project on schedule". LankaNewspapers.com. 8 January 2014. http://www.lankanewspapers.com/news/2014/1/86327.html. பார்த்த நாள்: 14 January 2014. 
  8. Shirajiv Sirimane (3 June 2013). "Moragahakanda multi purpose project construction on track". http://archives.dailynews.lk/2013/06/03/bus19.asp. பார்த்த நாள்: 14 January 2014. 
  9. "President to inaugurate filling of Kalu Ganga reservoir tomorrow". The Sunday Times. பார்க்கப்பட்ட நாள் 3 April 2018.
  10. 10.0 10.1 10.2 10.3 "மொரகஹகந்த நீர்த்தேக்கம்:ஜனாதிபதி தலைமையில் இன்று திறப்பு!". newsslbc. http://tamil.newsslbc.lk/?p=3456. பார்த்த நாள்: 8 November 2019. [தொடர்பிழந்த இணைப்பு]
  11. "Morgahakanda Reservoir named "Kulasinghe Reservoir"". Newsfirst. பார்க்கப்பட்ட நாள் 23 July 2018.
  12. 12.0 12.1 Shirajiv Sirimane (18 November 2012). "Moragahakanda project will be completed ahead of schedule". Sunday Observer இம் மூலத்தில் இருந்து 15 ஜனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140115132536/http://www.sundayobserver.lk/2012/11/18/fea06.asp. பார்த்த நாள்: 14 January 2014. 
  13. Ravi Ladduwahetty (28 January 2007). "Moragahakanda and Kalu Ganga development projects, the last phase of the Accelerated Mahaweli Programme". The Nation இம் மூலத்தில் இருந்து 16 ஜனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116095320/http://www.nation.lk/2007/01/28/newsfe3.htm. பார்த்த நாள்: 15 January 2014. 
  14. "President inspects progress of Moragahakanda - Kalu Ganga project". Target.lk. பார்க்கப்பட்ட நாள் 14 January 2014.