மொரிசியசின் தேசிய சட்டமன்றம்

மொரிசியசு நாடாளுமன்றம் ஓரவை முறைமையைக் கொண்டது. அந்த ஓரவை தேசிய சட்டமன்றம் ஆகும். இது எழுபது உறுப்பினர்களை கொண்டது. இவர்களில் 62 உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுப்பர். எட்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு தொகுதியிலும் ஒன்றுக்கு மேற்பட்டோர் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படுவோர் நான்கு ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பர். மொரிசியசு தீவை 20 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மூவர் தேர்ந்தெடுக்கப்படுவர். ரொட்ரிக்சு தீவு முழுவதும் ஒரு தொகுதியாக கணக்கிடப்படும். இதில் இருந்து இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். பொதுத் தேர்தல் முடிந்ததும், அதிக பட்சமாக எட்டு பேரை தேர்தல் ஆணையம் நியமிக்கும்.

மொரிசியசின் தேசிய சட்டமன்றம்
Mauritian National Assembly
மொரிசியசின் பத்தாவது தேசிய சட்டமன்றம்
மரபு சின்னம் அல்லது சின்னம்
Logo
வகை
வகை
ஓரவை முறை
தலைமை
சபாநாயகர்
ரசாக் பீரு
ஜூலை 20, 2012 முதல்
பிரதமர்
எதிர்க்கட்சித் தலைவர்
பால் பெரேங்கர் (மொரிசியசு இராணுவ இயக்கம்)
ஜூலை 05, 2005 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்தேர்ந்தெடுக்கப்படுவோர் : 62 ; நியமிக்கப்படுவோர் : 8
அரசியல் குழுக்கள்
     மொரிசியசு உழைப்பாளர் கட்சி/மொரிசியசு சமுக மக்கள் கட்சி (37 இடங்கள்)
     மொரிசியசு இராணுவ இயக்கம்/இராணுவ சமூகவியல் இயக்கம் (32 இடங்கள்)
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
கடைசித் தேர்தல் : மே 5, 2010
கூடும் இடம்
பாராளுமன்றக் கட்டிடம், போர்ட் லூயிஸ்
வலைத்தளம்
சட்டமன்றத் தளம்

பாராளுமன்றத்தில் அதிக இடங்களைப் பிடிக்கும் கட்சியோ, கட்சியின் கூட்டணியோ ஆட்சி அமைக்கும். அந்த கட்சியின் தலைவரே பிரதமர் ஆவார். இவர் சட்டமன்றத்தில் சிலரை தேர்ந்தெடுத்து அமைச்சர்களாக நியமிப்பார்.

மேலும் பார்க்க தொகு

இணைப்புகள் தொகு