மோகனூர் பாலசுப்பிரமணியர் கோயில்
மோகனூர் பாலசுப்பிரமணியர் கோயில் என்பது நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1] இக்கோயிலினை காந்தமலை முருகன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.[2][3] இக்கோயில் காந்தமலையில் குன்றின் மீது அமைந்துள்ளது. குன்றினை வாகனத்தில் சுற்றி வர தார்சாலை போடப்பட்டுள்ளது. கோயிலின் வலது புறத்தில் சென்றால் குன்றின் படிகளை ஏறாமல் கோயிலை அடையலாம்.
சாமிகள்
தொகுஇத்தலத்தில் மூலவராக முருகன் உள்ளார். இந்த முருகன் பழனியில் உள்ளதைப் போன்று தண்டம் ஏந்தி காணப்படுகிறார். இக்கோயிலில் தட்சணாமூர்த்தி, பைரவர், காசிவிசுவநாதர், வல்லப கணபதி, வீரபாகு, சனீஸ்வரர் போன்ற தெய்வங்களுக்கும் இங்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவிழா
தொகு- தைப்பூசம்
- கந்த சஷ்டி
- திருக்கார்த்திகை
- பங்குனி உத்திரம்
ஆதாரங்கள்
தொகு- ↑ அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்
- ↑ http://www.dinamani.com/edition_coimbatore/article1030472.ece
- ↑ http://www.dinamani.com/edition_dharmapuri/namakkal/2013/11/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%C2%A0/article1877136.ece