மோகன் சுந்தர் தேவ் கோசுவாமி
மோகன் சுந்தர் தேவ் கோசுவாமி (Mohan Sundar Deb Goswami), 8 ஆகஸ்ட் 1892 - 11 சனவரி 1948) ஒரு ஒடிசி இசைக்கலைஞரும், கவிஞரும், இசையமைப்பாளரும், பாரம்பரிய ராசலீலையின் குருவும் ஒடியா மொழித் திரைப்பட இயக்குனரும் ஆவார். ராதை மற்றும் கிருட்டிணனின் காதலை சித்தரிக்கும் பாரம்பரிய நாடக வடிவமான ராசலீலையை உயிருடன் வைத்திருக்கும் முயற்சிகளுக்காக பரவலாக அறியப்பட்ட இவர், ஒடிசி, சந்தா, சம்பு, கீர்த்தனை, பஜனை, ஜனனம் போன்ற பாரம்பரிய ஒடிசி பாடல்களை வழங்கியதற்காகவும் குறிப்பிடப்படுகிறார். ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் மற்றும் அனைத்திந்திய வானொலியால் இந்தியா ரேடியோ என்ற தலைப்பின் கீழ் ஒளிபரப்பப்பட்ட கிராமபோன் வட்டுகளில் இவரது நிகழ்ச்சிகள் இவரை ஒடிசாவில் வீட்டு நபராக ஆக்கியது.[3] 1936 ஆம் ஆண்டில் முதல் ஒடியா திரைப்படமான சீதா பிபாஹாவை உருவாக்குவதில் இவருக்கு முக்கிய பங்கு இருந்தது, இந்த படத்தை இவரே இயக்கி, தயாரித்து மற்றும் நடித்தார்.
மோகன் சுந்தர் தேவ் கோசுவாமி | |
---|---|
தாய்மொழியில் பெயர் | ମୋହନ ସୁନ୍ଦର ଦେବ ଗୋସ୍ୱାମୀ |
பிறப்பு | சியாமா சுந்தர் தேவ் கோசுவாமி 8 ஆகத்து 1892 [1][2] புரி, ஒடிசா, இந்தியா |
இறப்பு | 11 சனவரி 1948 | (அகவை 55)
பணி | திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் |
அறியப்படுவது | ஒடிய ராசலீலா, ஒடிசி இசை, அபிநயம் (ஒடிசி நடனம்) |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | மனபஞ்சனா |
பாணி | ஒடிசி இசை |
விருதுகள்
தொகுஒடிசா மாநிலத்தில் மோகன் சுந்தர் தேவ் கோசுவாமி பெயரில் ஆண்டுதோறும் திரைப்பட விருது வழங்கப்பட்டு வருகிறது.[4]
சான்றுகள்
தொகு- ↑ "Activities of the Academy". Odisha Sangeet Natak Akademi. பார்க்கப்பட்ட நாள் 7 August 2015.
- ↑ Palit, Ashok. "Mohan Sundar Dev Goswami – Doyen of Odia film industry". Bizodisha. பார்க்கப்பட்ட நாள் 7 August 2015.
- ↑ Panda, Dr. Pradipta Kumar (1990). ଓଡ଼ିଆ ରାସ ପରମ୍ପରା [Odia Rasa Tradition] (in ஒடியா). Binod Behari, Cuttack: Books and Books. pp. 252–3.
- ↑ "State film awards announced".