மோசிங்கோ குறைத்தல் வினை
மோசிங்கோ குறைத்தல் வினை ( Mozingo Reduction ) என்ற கரிமவேதியல் வினை மோசிங்கோ வினை அல்லது தையோகீட்டால் குறைத்தல் வினை என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வினையில் ஒரு கீட்டோன் அல்லது ஆல்டிகைடு முழுமையாக ஒடுக்கமடைந்து அவற்றோடு தொடர்புடைய ஆல்கேனாக மாற்றமடைகிறது[1]. இவ்வினை நிகழ்வை பின்வரும் சமன்பாடு விளக்குகிறது:[2]
முதலில் கீட்டோனுடன் ஒரு பொருத்தமான தையோல் சேர்ந்து தையோகீட்டால் உருவாகிறது. பின்னர் இது ரானே நிக்கல் வினையூக்கியின் உதவியால் ஐதரசனேற்றம் செய்யப்பட்டு ஆல்கேனாகிறது. இம்முறை வலிமையான அமில கிளெமென்சன் அல்லது வலிமையான கார உல்ப் கிச்னர் குறைத்தல் வினைகளைக் காட்டிலும் மிதமானது ஆகும். இவ்வினைகளில் பங்கேற்கும் அமில காரங்கள் கரிம மூலக்கூறில் இடம்பெற்றுள்ள செயல்படு தொகுதிகளின் செயல்பாட்டை இடையூறு செய்யலாம்[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Francis A. Carey; Richard J. Sundberg (2007). Advanced Organic Chemistry: Reactions and synthesis. Springer. pp. 452–454. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780387683508.
- ↑ Jonathan Clayden; Nick Greeves; Stuart Warren (2012). Organic Chemistry (2 ed.). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199270293.
- ↑ Mithcell, Reginald; Lai, Yee-Hing (1980). "The neutral deoxygenation (reduction) of aryl carbonyl compounds with raney-nickel. an alternative to the clemmenson, wolf-kishner or mozingo (thioketal) reductions". Tetrahedron letters (Elsevier) 21 (27): 2637–2638. doi:10.1016/S0040-4039(00)92825-9. http://www.sciencedirect.com/science/article/pii/S0040403900928259. பார்த்த நாள்: 2012-05-11.