மோசிசாத்தனார்

சங்க கால புலவர்

மோசி சாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 272.

மோசி என்பது தந்தையின் பெயர். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர் இவரது தந்தை எனலாம்.

இந்தப் பாடல் செரு மிடை வீழ்தல் என்னும் துறையைச் சேர்ந்தது. போரிட விழைதல் என்பது இதன் பொருள். மதிலைக் காக்கும் போர் நொச்சி. வீரர்க் நொச்சிப்பூ சூடி மதிலைக் காக்கும் போரில் ஈடுபடிவர். இப்படி மதிலைக் காக்கும் போரில் ஈடுபட்ட வீரன் ஒருவனின் புகழ் இந்தப் பாடலில் சொல்லப்படுகிறது.

  • நீ நிழற்றிசினே = நீ சூடி நிழலாக்கிக்கொண்டால்,

நெடுந்தகை! நீ சூடி நிழலாக்கிக்கொண்டால், மணிநிறப் பூக்கள் பூக்கும் நொச்சி மரம் காதலுக்கு உதவும் நல்ல மரமாக இருக்கும். நீ காவல் மிக்க நகரில் தொடியணிந்த மகளிரின் அலகுலிலே கிடந்தாலும் கிடப்பாய். நீ நெடுந்தகையாக ஊருக்கு வெளியிலே நின்றால் உன் ஊர்ப்படை எப்போதும் பின்வாங்குவது இல்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோசிசாத்தனார்&oldid=2718215" இலிருந்து மீள்விக்கப்பட்டது