உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர் ஆவார். இவர் பிராமணர் என்று கருதப்படுகிறது.
ஆதரித்த மன்னன்
தொகுசேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை எனும் சேரமன்னன் இப்புலவரை ஆதரித்ததாகப் புறநானூறு மூலம் தெரிகிறது.[1]
பாடிய பாடல்கள்
தொகுஇவர் பாடிய பாடல்கள் 13 நமக்குக் கிடைத்துள்ளன. அவை யாவுமே புறத்திணையைச் சேர்ந்தவை. இவை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுள் வைக்கப்பட்டுள்ளன. (புறம்: 13, 127-135, 241, 374, 375)
இவரால் பாடப்பட்ட மன்னர்கள்
தொகுகடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஆய் அண்டிரன் மற்றும் சோழன் முடித்தலைக்கோ பெருநற்கிள்ளி
இவரைப் பற்றிப் பாடிய புலவர்
தொகுஆய் அண்டிரனை இவர் பாடிய விதத்தைப் பாராட்டி மற்றொரு புலவரான பெருஞ்சித்திரனார் “திருந்து மொழி மோசி பாடிய ஆய்” என்று பாடியுள்ளார்.[2]
வெளி இணைப்புகள்
தொகு- உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடல் புறநானூறு 13
- உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடல் புறநானூறு 127
- உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடல் புறநானூறு 128
- உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடல் புறநானூறு 129
- உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடல் புறநானூறு 130
- உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடல் புறநானூறு 131
- உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடல் புறநானூறு 132
- உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடல் புறநானூறு 133
- உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடல் புறநானூறு 134
- உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடல் புறநானூறு 135