மகிடிக் கூத்து

(மோடியாட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மகிடிக் கூத்து தம்பலகாமம், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு[1][2] போன்ற பிரதேசங்களில் ஆடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பாரம்பரய கூத்து வகைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. இது மட்டக்களப்பில் ஆரம்பத்தில் முக்குவரால் ஆடப்பட்ட ஆட்டமுறையாகவும் அதுவே இன்று மட்டக்களப்பு மக்களினால் போற்றப்பட்டு ஆடப்படும் கூத்தாகவும் காணப்படுகின்றது.

இது இடத்துக்கிடம், அதன் உருவக அமைப்பிலும், ஆடப்படும் முறையிலும், அமைப்பிலும் வேறுபட்டுள்ளது. எனினும், எவ்வராயினும் ஒரு குழுவை இன்னொரு குழு மந்திர தந்திரத்தால் வெற்றி கொண்ட கதைதான் இதன் பிரதான உள்ளடக்கமாகும்.

மட்டக்களப்பில் இது மூன்றுவகையாக உள்ளடக்கங்களில் ஆடப்படுகின்றன. அதில்

  1. மலையாளத்தார் மட்டக்களப்பாரை வென்றதான உள்ளடக்கம்.
  2. மந்திர தந்திர விளையட்டுக்களைக் கொண்டதான உள்ளடக்கம்.
  3. புராதண கதை பாத்திரங்களைக் கொண்டதான உள்ளடக்கம்.

மூன்றாவது வகைக்கு மட்டுமே வரி வடிவம் உண்டு. ஏனையவை மரபு வழியாகவும், மகிடி ஆடிய முதியோர் வாய் வழியாகவே பேணப்படுகின்றன.

மோடியாட்டத்தை பேச்சு வழக்கில் “மகிடி ஆட்டம்” எனக் கூறுவதாகக் கருதப்படுகிறது.[3] தமிழ்நாட்டில் இக்கலை தென் ஆற்காடு மாவட்டத்தில் செஞ்சி வட்டத்தில் உள்ள நல்லாண் பிள்ளை பெற்றாள் என்ற கிராமத்தில் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "சந்திவெளி பிரதேச பாரம்பரிய மகிடிக்கூத்தாட்டம், சுந்தரலிங்கம் சஞ்சீபன்". www.arayampathy.lk. Archived from the original on 2022-10-28. பார்க்கப்பட்ட நாள் 2022-10-27.
  2. "சந்திவெளியில் நிகழ்ந்த மகிடிக் கூத்து பார்வையும் பதிவுகளும்". பார்க்கப்பட்ட நாள் 2022-10-27.
  3. சி.சுந்தரேசன். "மோடியாட்டம்". பார்க்கப்பட்ட நாள் 2022-10-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிடிக்_கூத்து&oldid=3691720" இலிருந்து மீள்விக்கப்பட்டது