மோதி ஏரி
மோதி ஏரி (Moti Lake, मोति झील), இந்திய மாநிலமான பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்திலுள்ள மோதிஹாரியின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
இங்கு மோதிஜீல் மகோத்சவம் என்ற விழா நடத்தப்படுகிறது. ஜீல் என்ற சொல்லுக்கு ஏரி என்று பொருள். இது சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டு, ஏரியில் படகுப் போக்குவரத்து ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த ஏரியில் ஆகாயத் தாமரைகள் படர்ந்துள்ளன. ஏரியை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நகராட்சி செயல்படுத்துகிறது. மத்திய அரசின் அமிர்த யோஜனா திட்டத்தின் கீழ் மோதிஹாரியின் நீர்நிலைகள் சீராக்கப்படும்.[1]