மோரன் சர்க்கார்

மோரன் சர்க்கார் ஒரு பஞ்சாபி முஸ்லீம் ஆவார். இவர் 1806 ஆம் ஆண்டு பஞ்சாபின் சீக்கிய ஆட்சியாளர் மகாராஜா ரஞ்சித் சிங்கை மணந்தார். ராணி ஆவதற்கு முன்பு ஒரு ஆடல் காணிகைப் பெண்ணாவார். மகாராஜா ரஞ்சித் சிங் மோரனைத் திருமணம் செய்ததற்காக அகாலி ஃபுலா சிங்கால் கசையடி கொடுத்து தண்டிக்கப்பட்டார். [2] மாய் மோரன் 1811 இல் பதான்கோட் மாவட்டத்தில் வசிக்க அனுப்பப்பட்டார்.

மோரன் சர்க்கார்
மோரனின் சிறு வரைபடம்
பிறப்பு1781
இறப்பு1862 [1]
வாழ்க்கைத்
துணை
மகாராஜா ரஞித் சிங்

வாழ்க்கை

தொகு

மை மோரன் அமிர்தசரஸுக்கு அருகிலுள்ள மக்கன் விண்டியில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். [3] அவர் 21 வயதில் லாகூர் மகாராஜாவாக பதவியேற்ற மகாராஜா ரஞ்சித் சிங்கை அவர் பதவியேற்ற ஒரு வருடம் கழித்து மணந்தார். , அதிகாரப்பூர்வமாக மகாராணி சாஹிபா என்று மோரனுக்குப் பெயர் வழங்கப்பட்டது. அவர் முதலில் ஓர் ஆடல் காணிகையாவார். மகாராஜா ரஞ்சித் சிங் அவரை இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் சந்திப்பது வழக்கம். அமிர்தசரஸ் மற்றும் லாகூர் இடையே பாதி வழியில் மகாராஜா ரஞ்சித் சிங்கின் பரதாரியில் மோரன் அராஜாவிற்காக நடனமாடினார். இந்த இடம் புல் கஞ்சரி என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்போது அதன் பெயர் 'புல் மோரன்' என மாற்றப்பட்டுள்ளது. [4]

அவர் கலைகள் மற்றும் கடிதங்களில் மிகவும் கற்றுத் தேர்ந்தவராகக் கருதப்பட்டார். அவர் தனது பரோபகார [5] செயல்களுக்காகவும், பல பிரச்சனைகளை மகாராஜாவின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும் அறியப்பட்டார்.

மோரனின் வேண்டுகோளின் பேரில் மகாராஜா மஸ்ஜித்-இ-தவைஃபான் என்று அழைக்கப்படும் ஒரு மசூதியைக் கட்டினார். அது 1998 இல் லாகூரில் மை மோரன் மஸ்ஜித் என மறுபெயரிடப்பட்டது. [6] இது தற்போது ஷா அல்மி கேட் அருகே பப்பர் மண்டி என்று அழைக்கப்படும் லாகூர் பஜாரில் அமைந்துள்ளது. [7]

 
லாஹூரில் உள்ள மை மோரன் மஸ்ஜித்
 
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள புல் மோரன் என்ற இடத்தில் பாழடைந்த பரதாரி

நாடகம்

தொகு

மகாராஜா ரஞ்சித் சிங்குடனான அவரது வாழ்க்கைக் கதை மன்வீன் சந்துவால் நாடகமாக தயாரிக்கப்பட்டு கேவல் தலிவாலால் இயக்கப்பட்டது. [8] மன்வீன் சந்து எழுதிய அதே நாடகம், நவம்பர் 2013 இல் அமிர்தசரஸில் நடைபெற்ற

நடுவண் உயர்கல்வி வாரியத்தின் தேசிய சஹோதயா மாநாட்டின் போது, ஸ்பிரிங் டேல் சீனியர் பள்ளி, அமிர்தசரஸ்ஸின் முதல்வர் ராஜீவ் குமார் சர்மா மொழிபெயர்த்து இயக்கினார். தோரயமாக பார்வையாளர்களில் 1000 பள்ளி முதல்வர்கள், நடுவண் உயர்கல்வி வாரிய அதிகாரிகள் மற்றும் பிற பிரதிநிதிகள் அடங்குவர். நடிகர்கள் முழுக்க முழுக்க பள்ளி ஆசிரியர்களைக் கொண்டிருந்தனர்.

 

அதே ஆண்டில் கடைசியாக ஒரு முறைஅமிர்தசரஸில் உள்ள ஸ்பிரிங் டேல் சீனியர் பள்ளியில் நடைபெற்ற இந்தோ-பாக்கிஸ்தான் அமைதி விழா - சாஞ்ச் 2013 இன் போது ராஜீவ் குமார் சர்மா இந்நாடகத்தை வழங்கினார் .

வெளி இணைப்புகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. name="dailytimes.com.pk">{{Cite web | url=https://dailytimes.com.pk/251361/mosque-of-moraan-tawaif-built-by-the-beloved-wife-of-maharaja-ranjeet-singh/
  2. name="dawn.com">"HARKING BACK: Mai Moran and ever-changing face of Pappar Mandi". 26 June 2016. பார்க்கப்பட்ட நாள் 17 January 2020.
  3. name="dailytimes.com.pk">"Mosque of Moraan Tawaif — built by the beloved wife of Maharaja Ranjeet Singh - Daily Times Pakistan". 9 June 2018.
  4. "Memories of a Dancing Peacock - Indian Express". 28 August 2011.
  5. "Fame and infamy". Business Line. http://www.thehindubusinessline.com/todays-paper/tp-life/article1086674.ece. 
  6. name=":0">"Maharaja-Moran relationship in new light". http://www.tribuneindia.com/2008/20080702/punjab1.htm. 
  7. name="dawn.com">"HARKING BACK: Mai Moran and ever-changing face of Pappar Mandi". 26 June 2016. பார்க்கப்பட்ட நாள் 17 January 2020."HARKING BACK: Mai Moran and ever-changing face of Pappar Mandi". 26 June 2016.
  8. "The Sunday Tribune - Spectrum".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோரன்_சர்க்கார்&oldid=3667189" இலிருந்து மீள்விக்கப்பட்டது